வேலைக்கு மேல வேலைய தந்து ஆப்பு வைக்கிறாங்கப்பா

Share
 
அண்மையில் நண்பன் ஒருவனை சந்தித்த போது கூறினான்  , "வீட்டிற்கு போனால்  அதை செய், இதை செய் என மனைவியின் தொல்லை. சரி வேலை தளத்திற்கு சென்று secretary யுடன் கும்மாளம் போட போனால் அங்க கூட வேலைக்கு மேல வேலைய தந்து  ஆப்பு வைக்கிறாங்கப்பா."

வேலை தளத்திலே வேலை செய்யாமலே  BUSY ஆக இருப்பதாக மற்றயவர்களை எப்படி நம்ப வைப்பது?????
  
Own Internet Connection
அதிகமான வேலை தளங்களில் ஒருவருக்கு 01 கணணி தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதனுடைய Screen,Internet Speed கடுப்பை ஏற்படுத்துவதாகவே அமைகிறது.இதுமட்டுமா,  நண்பர்களிற்கு மிகவும் வேண்டிய பல இணையத்தளங்களை IT Manager முடக்கி ஆப்பு வைத்துவிடுகிறார். 
எங்களுடைய சொந்த laptop மட்டுமல்ல mobile ஐ வேலை தளங்களில் 7 நாட்களும் வைத்திருந்தால் வேலைத்தள கணணியில் செய்ய முடியாததை செய்யமுடியும்.CEO இதை அவதானிக்காமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

 

Social Networks

சமூக இணையத்தளங்கள் குறிப்பாக Face book ,Twitter பல ஊழியர்களை சர்ச்சையில் மாட்டியிருக்கிறது .பல வேலை தளங்கள் இவற்றை தடை செய்துள்ளன. CEO,Manager, எங்கே ஒருத்தனை போட்டுக் கொடுத்துவிட்டு நல்ல பெயர் எடுக்கலாம் என காத்திருக்கும் 
ஆசாமிகளையும் நண்பர்களாக Face book லே சேர்த்துவிட்டு, வேலைத்தளங்களில் தாங்கள் செய்த குறும்புள், உயர் அதிகாரிகளை திட்டி கெட்ட வரர்த்தைகளாக Status Update ஆக போட்டு மட்டுபவர்களே அதிகம். சமூக இணையத்தளங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது.

Excel Games

Excel ஐ வேலை தளங்களில் சில ஊழியர்கள் பயன்படுத்துவதில்லை. Games பிரியர்களிற்கு இது உகந்தது.மற்றையவர்களிடம் மாட்டிக் கொள்ளாது வேலை செய்வது போல நடித்து கொண்டே விரும்பிய Games ஐ விளையாடிக் கொள்ள முடியும். கடுப்பை கிளப்பும் Minesweeper போல இல்லாது Sonic the Hedgehog , Super Mario World போன்ற நல்லவற்றையும்  விளையாட  முடியும்.

Chat Status

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களிற்கு chat status அவசியமானதாகும்.status ஐ நிரந்தரமாக "Busy" , "Away" என மாற்றி,காரணத்தை சிறிய message ஆக விட்டால் CEO உங்களை online ல் தேடினாலும் கண்டு கொள்ள முடியாது.அப்புறமென்ன வீட்டில உங்களிற்கு விரும்பியவருடன்  "ச்சு தரியா ஒரு ச்சு தரியா" என பாட வேண்டியது தான்.

iPad

எங்கு பார்த்தாலும் iPads ஐ பற்றிய பேச்சுத்தான். $500-600 க்கு வாங்க கூடியதாக உள்ளது.இதனுடைய தொழிற்பாட்டு முறைகளையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடிகிறது. iPads  ஐ எடுத்து வேலையுடன் தொடர்புடைய document ஐ திறந்துவிட்டு விரும்பியவாறு வேலை தளத்தை சுற்றி வரமுடியும்.வேலையுடன் தொடர்புடையவற்றையே நீங்கள் செய்வதற்கு அங்கும்;இங்கும் செல்கிறீர்களென உயர் அதிகாரிகளை நம்ப வைப்பது உங்கள் சாமர்த்தியம்.

Phone Code

தொலைபேசி பல்வேறு வகைகளில் தொல்லையை தந்தாலும்,வேலை தளத்திலே வேலை  செய்யாது நண்பர்களுடன் பேச உதவுகின்றது.உங்கள் நண்பர்களுடன் பேசுகின்ற போது சில வேலையுடன் தொடர்பு பட்ட சொற்களை சத்தமாக கதையுங்கள்.அப்போதுதான் உயர் அதிகாரிகள் நீங்க வேலை செய்கிறீர்கள் என நம்புவாங்க.பொதுவாக நண்பர்களுடன் வெளியிடங்களில் கதைப்பது போலல்லாது business  voice ல் பேசிக்கொண்டால் அதிகாரிகளிற்கு சந்தேகம் வரவே வராது.

Boss Buttons
Boss Buttons பொதுவாக நேரத்தை வீணடிக்கும் தளங்களிலே இருக்கிறது.Google Chrome ஐ பாவிக்கிற சந்தர்பத்தில் own personal Boss Button ஐ install செய்ய முடியும். உயர் அதிகாரிகள் வருகிற போது , ஒரு mouse click உடன் எதனையும் விரைவாக மறைப்பதற்கு இந்த buttons உதவுகிறது.

 
 
பதிவு பிடித்திருந்தால் Like ல் ஒரு குத்து, பிடித்திராவிட்டால் மூஞ்சில ஒரு குத்து விடுங்க.


1 comments:

Mohamed Faaique said...

Ma i knw ur boss's email id.....

Post a Comment

Related Posts with Thumbnails