நகர்புறங்களில் வாழும் மக்களின் நிலை

Share

நிறுவனங்கள் [ Multinational companies ] தங்களது வணிகத்தை பெருக்கு வதற்காக தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளயும் நாடுகளின் தலை நகரங்களில் செய்து வருகிறார்கள் .இவற்றில் சில நிறுவங்கள் அரசாங்கத் திற்கு டிமுக்கி கொடுத்துவிட்டு , சட்ட  திட்டங்களுக்கு அடிபணியாமல் மோசமான முறைகளில் கழிவுகளை வெளியேற்றி வருகிறார்கள்.
அரசாங்கம் கழிவுகளை வெளியேற்றுவதில் உரிய முறைகளை கையாளாத சந்தர்ப்பத்தில் பாதிப்பு மக்களுக்குத் தான் .

மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு மக்கள் வாழமுடியாத நிலை உருவாகியுள்ள சில தலைநகரங்கள் , நகர்புறங்களில் வாழும் மக்களின் நிலை பற்றி பார்க்கலாம் .

 
Maputo - Mozambique
 
Maputo ஒரு தலை நகரமாகவும் Mozambique இன் மிகப்பெரிய நகரமாகவும் காணப்படுகிறது . இந்த நகரத்தில் மக்களின் உடல் சுகாதாரத்தை பேணுவதில் மிகப்பெரிய சிக்கல்களை எதிர் நோக்குகிறார்கள் . குப்பைகளை வெளியேற்று வதற்கு முறையான நடவடிக்கைகளை அரசு கையாளாது விட்டமையே இதற்கு காரணம் என பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது. இங்குள்ள வீதிகளிலும் , ஆறுகள்,குளங்களிலும்  குப்பைகளை காணமுடியும் . ஏறக் குறைய  60 000 குடியிருப்பாளர்களுக்கு உணவு வழங்கி வந்த வயல் நிலங் களும் நீரிலே மூள்குண்டுள்ளது.

 
Moscow - Russia
 
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் Russia வின் தலைநகராக இருக்கும் Moscow இல் வாழும் மக்கள் அண்ணளவாக மாதாந்தம் 3000 டொலர்களை தங்களுக்கான வீட்டு வாடகையாக செலுத்தினாலும் , இவர்களுக்கு சுத்த மான குடிநீர் கிடைப்பது இல்லை .இங்கு காற்று மிகவும் மாசுபட்டுள்ளதால்  [ air pollution ] இங்கு வாழும் மக்கள் நுரையீரல் நோயால் அவஸ்த்தை படு கிறார்கள் .கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமையால் Cholera  நோயும் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

 
Brunei - Darussalam
 
இது சிறிய நாடாக இருந்தாலும்  இயற்கை வாயு ,பெற்றோலிய வளங்க ளாலும் மிகவும் செழிப்பாக உள்ளது. இங்குள்ள காற்று சுத்தமாக உள்ளது என கூறப்பட்டாலும் , தற்போது சில பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது . இங்கு நடத்தப்படும் ஆராய்சிகளின் அளவு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது .இங்குள்ள காற்றில் காணப்படும் தூசு துணிக்கைகளின் [ Dusts ] அளவு கூடிச்செல்கிறது . மாசு படுதலின் அளவை குறைக்க  தற்போது  வெளிவரு கின்ற வாகனங்களில் இருந்து எவ்வளவு carbon dioxide  வெளியேறுகிறது என்பதை அவதானிக்கிறார்கள்.

 
Baghdad - ஈராக்
 
Baghdad இல் நடந்தது வந்த தொடர்ச்சியான குண்டு வெடிப்புகள் , அழிவு களால் இந்த நகரம் மிகவும் மாசு பட்டு உள்ளது . நீரின் தரம் மிகவும் குறை வாக உள்ளதால் நீர் சம்பத்தப்பட்ட நோய்கள் பரவி வருகிறது. 2007 ஆம் ஆண்டு காலத்தில் இங்குள்ள பல இடங்களில் Cholera நோய் பரவியதை அனைவரும் அறிந்திருப்போம் . இங்கு எண்ணெய் தயாரிப்பில் அதிக நிறுவனங்கள் ஈடுபடுவதால் இங்குள்ள காற்று அதிக அளவில் மாசுபட காரணமாக அமைகிறது .

 
New Delhi - India
 
இங்குள்ள குப்பைகள் , கழிவு நீர் ;  நீர் சம்பத்தப்பட்ட நோய்களை உருவாக்கி ,பிறக்கும் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பெரும் கெடுதலை விளைவிக் கிறது .உலகத்திலேயே இதுதான் மிகவும் மாசுபட்ட நகரம் என கூறப்படு கிறது.இங்கு தினமும் அதிகரித்து செல்லும் வாகனங்களின்  எண்ணிக்கையே மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது .தினமும் 1000 வாகனங்கள் அதி கரித்து செல்கிறது .தினமும் 3000 ton குப்பைகள் நிறுவங்களின் செயல் பாட்டால் காற்றில் கலக்கிறது. 13 % ஆன வளி மாசு பட  காரணம் இங்குள்ள Thermal power plants

 
Mexico City - Mexico
 
Mexico வின் தலை நகரமான Mexico City யில் 1940 ஆம் ஆண்டில் சராசரி யான பார்வை தூரம் 100 km .ஆனால் தற்போது இது 1 .5 km கள் மட்டுமே . அந்த அளவுக்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது .ஆரம்பகாலத்தில் இதன் ஒரு பகுதி பனி மலைகளாக இருந்தது . இப்போது அவற்றை காண்பது அரிது . சர்வதேச சட்டங்கள் நிர்ணயித்த அளவை விட 2 ,3 மடங்கு  nitrogen dioxide [ NO2 ] இன் அளவும் வெளியேறுகிறது .

 
Karachi - Pakistan
 
Karachi பாகிஸ்தானின் வர்த்தக நகரமாக காணப்படுகிறது .கட்டுபடுத்த முடியாத அளவில் அதிகரிக்கும் வளி மாசடைதல் ,சத்தங்கள் என்பவற்றால் இங்கு வாழும் மக்களின் சுகாதார நிலைமை மிகவும் கேள்வி குறியாகவே உள்ளது .35 % ஆன மக்கள் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ நுரையீரல் ,கண்,தோல் நோய்களுக்கு உள்ளாகி உள்ளார்கள் . ஆராய்சிகளின் படி தின மும் 1 .5 மில்லியன் வாகனங்கள் வீதியை கடந்து செல்வதாக கூறப்படுகிறது
  
கொழும்பு  - இலங்கை
 
வீடுகளுக்கு பக்கத்தால ஓடுகிற சில வாய்க்கால்களால தான் [ Canal ] பெரிய பிரச்சனை , நுளம்பு தொல்லை தங்க முடியவில்லை .
.

9 comments:

Unknown said...

கொடுமை!

nis said...

ம்ம் :((

Unknown said...

ரொம்பக் கஷ்டம்தாங்க..

Philosophy Prabhakaran said...

டெல்லி கழிவுகளை குறிப்பதற்காக இணைத்திருக்கும் படம் பதற வைக்கிறது...

nis said...

@பதிவுலகில் பாபு
ம் :(

@philosophy prabhakaran
கொடுமைதான் :(

அன்பரசன் said...

சிரமந்தான்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ennaththa solla..

ஆமினா said...

கொடுமையான விஷயம்......

nis said...

நன்றி

அன்பரசன்
வெறும்பய
ஆமினா

:((

Post a Comment

Related Posts with Thumbnails