தற்போதைய பொருளாதார நிலையில் பல தனியார் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியாது மூடு விழா நடந்துள்ளது.அதுவும் சிறிய அழவில் நடாத்தப்படும் நிறுவனங்களிற்குத்தான் மரண அடி தொடர்ந்துவருகிறது.உரிமையாளர்கள், முகாமையாளர்கள் செலவினை குறைப்பதில் தாங்கள் ஈடுபடுவதாக சொல்லி புதிதாக வேலைக்கு செல்பவர்களை "வீட்டிலே மனைவிக்கு துணையாக இரு" என்ற நல்ல எண்ணமோ தெரியவில்லை வேலையிலிருந்து சாணக்கியமாக கழற்றி விடுறாங்க.
வாழ் நாள் முழுவதும் செலவில்லாது உபயோகிக்க கூடிய Free Software கிடைக்கும் தருணத்தல , ஊழியர்களிற்கான ஊதியத்தை விட பல மடங்கு செலவை ஏற்படுத்தும் Software களில் வீணாக பணத்தினை முடக்குகிறார்கள் சின்னப்பிள்ளதனமா
இந்த open-source களை, மிகவும் செலவு வாய்ந்த Microsoft Office, Windows OS, Adobe Photo shop, Microsoft Exchange server ற்கு பதிலாக பயன்படுத்த முடிகிறது.
Zimbra
இது ஒரு free email and calendar client.எந்த ஒரு Windows, Apple, Linux லும் இயங்ககூடியது.online,offline ஆகவும் POP email account ,Yahoo! Mail உடனும் இயங்ககூடியது.தற்போதைய தொலைபேசிகளிலும் இதனை செயற்படுத்த முடிகிறது.
Clam Win
இது ஒரு open source antivirus program. இதனை Microsoft Windows 7 / Vista / XP / Me / 2000 / 98 and Windows Server 2008 and 2003 ற்கு பயன்படுத்தமுடிகிறது. பொதுவாக இது real-time scanner ஆக தொழிற்படுவதில்லை.virus ஐ இல்லாது ஒழிக்க manual ஆக scan செய்து கொள்ளமுடியும்.
Open Proj
இது open source project management desktop software.இதனை Microsoft Project க்கு பதிலாக பயன்படுத்த முடிகிறது.இதன் ஊடாக project ல் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை திருத்த முடிகிறது.Windows, Mac, Unix , Linux ல் செயல்படுத்த முடிகிறது.
Ubuntu
இந்த open-source free operating system ;windows ஐ விட தெளிமையாகவும் விரைவாகவும் செயல்படுகிறது.chat,email, office apps, Firefox போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
Gnu Cash
இந்த personal small-business financial-accounting software ஐ Linux, BSD, Solaris , Mac OS X Microsoft Windows என்பவற்றில் உபயோகிக்க முடிகிறது.bank accounts, stocks, income expenses எனபவற்றை மிகவும் இலகுவான முறையில் உபயோகிக்க முடிகிறது.double-entry accounting, stock bond mutual fund accounts இதிலே மிக முக்கிய பங்காற்றுகிறது.
சுட்டதில் எனக்கு றொம்பவே பிடித்த 5 FREE open-source ஐ உங்களுடன் வெட்கத்தை விட்டு பகிர்ந்தேன்ங்க.
கெட்டவார்த்தையால திட்டுறது இங்க கேட்குதுங்க.
3 comments:
திட்டுதான்... :-)
சிறிய அழவில் நடாத்தப்படும் - சிறிய அளவில் நடத்தப்படும்
இங்கே மட்டுமல்ல.. தலைப்பை இண்ட்லியிலும் மாற்றிவிடுங்கள். உடனே... :-)
அருமையான பதிவு.. நன்றி :-)
நன்றி நண்பரே
இனி வரும் காலங்களில் பிழைகள் ஏற்படுவதை குறைத்து கொள்கிறேன்
Post a Comment