KFC , MCDONALDS ,.... இன் இரகசியங்கள்

Share

KFC – Double Down

ஆரோக்யமான இளைய சமுதாயம் இன்றைய காலகட்டத்திலே தேடிச் செல்கின்ற Fast Food களில் இது முதல் இடத்தை பிடித்துள்ளது.இது 550 ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.இது cheese,sauce,fried chicken ஐ சேர்த்து ஒரு bun ஐ போன்ற வடிவத்திலே உருவாக்கின்றார்கள். இதிலே பாண் உபயோகிப்பதில்லை.இதற்கு ஒப்புடைய வேறு ஒன்றை உபயோகிக்கின்றார்கள். அதெல்லாம் தொழில் ரகசியம்ங்க,வெளியில சொல்ல கூடாது.

Pizza Hut – Double Roll Pizza

 
ஆரம்பத்தில் இருந்தே Japan ஐ அதிர்ஸ்டம் தாலாட்டி வருகிறது.பிரபல்யமான video games,Robot முதலில் Japan நாட்டு மக்களையே சென்றடைகின்றது.தற்போது இந்த Double Roll Pizza Japan நாட்டு மக்களை சென்றடைந்துள்ளது.இது 650 ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இந்த படத்திலே உள்ளவாறு இது hot dogs ஜ கொண்டுள்ளது.அத்துடன் இதனை சுற்றி soy beans, corn, garlic chips, green peppers உள்ளது. இதை பார்க்க வாயால வடியுதுங்க.

Fatburger – XXXL Burger
 
Fast food வரலாற்றிலே கண்டுபிடிக்கப்பட்ட மற்றையதொரு அருமையான உணவாகும்.இது 3 patties, eggs, bacon, cheese,சில தாவர உணவுகளையும் கொண்டுள்ளது.இது 500 க்கு மேற்பட்ட கலோரிகளை கொண்டுள்ளது. இதை சாப்பிடுவோர் சொர்க்கத்திற்கு செல்வதை போன்ற உணர்வென கூறுகின்றார்கள். இதனால் தான் நான் இதை சாப்பிடுவது கிடையாது.எனக்கு சொர்க்கம் செல்லத்தான் ஆசை , ஆனால் ஒரு 75 வருடங்களின் பின்னர் செல்வதாக உள்ளேன்.

McDonalds – McRib

Fast food உலகத்திலே இது மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது.இதை ஒரு கை பார்ப்பது உங்களுடைய தேடுகின்ற திறமையில்தான் தங்கி உள்ளது. இது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதிய உணவு நேரத்தில் தயாரிக்கபடுகிறது.இது 500 க்கு மேற்பட்ட  கலோரி ஊட்டத்தை எமக்கு தருகிறது.

Kenny Rogers Roasters - Muffin Submarine

இது பெரிதாக பிரபல்யமடையவில்லை.இது ice-cream வகையை சேர்ந்தது.மலேசிய நண்பர்கள் இதனை சுவைத்திருக்க கூடும்,மலேசியாவிலேதான் அதிகமாக விற்பனையாகின்றது.ஒரு வகையான cool தான் .3 வகையான ice-cream உருண்டைகள்  well, muffins ஐ சுற்றி போடப்பட்டுள்ளது.


[அது என்னமோ தெரியலைங்க ஒன்றை பற்றி தப்பா சொல்லிறதில
அப்படி ஒரு குதூகலம்.நான் இத இப்ப சொல்லியே ஆகணும்.]

 

McDonalds – Hula Burger

எனது பதிவிலே இந்த ஆசாமிக்குத்தான் முதலிடம்.இதனுடைய தோல்விக்கு காரணம் தவறான இலக்காகும்.பொதுவாக Roman Catholics  வெள்ளி கிழமைகளில் இறைச்சி உண்பது கிடையாது. sandwich ஆனால் இதற்குள்ளே இறைச்சிக்கு பதிலாக அன்னாசி பழ துண்டு ஒன்றை வைத்தது தான் விபரீதமாக மாறிவிட்டது.நம்ம பய பிள்ளைக Hula Burger ஐ உண்ணாது ,செம ஆப்பு வைச்சிட்டாங்கப்பா. அப்புறமென்ன Mc Donalds க்கு  தலையில துண்டுதான்.

Burger King – BK Veggie Burger

இது vegetarian களை மையமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றது.இறைச்சியை கொண்டிராவிட்டாலும் மிகவும் சுவையாக உள்ளதாக கூறுகின்றார்கள்.விதி இந்த உணவையும் விட்டு வைக்கவில்லை. இறைச்சியை கொண்டு தயாரிக்கபடும் இடத்தில் வைத்து தான் தயாரிக்கின்றார்கள் என புரளியை கிளப்பி விட அப்புறமென்ன தலையில துண்டுதான்.ஆனால் microwave ல்  வைத்துத் தான் தயாரிக்கிறோம் என விளம்பரம் செய்தாலும் பாச்சா பலிக்கவில்லை.
 
McDonalds – McLobster

இது ஆரம்பத்தில் இருந்தே அனைவராலும் விமர்சிக்கப்படுகின்ற ஒன்றாகும். இதனுடைய விற்பனையும் மிக குறைவாகவே உள்ளது.இதனுடைய தோற்றம் தான் மக்களிற்கு அருவருப்பை ஏற்படுத்துகின்றது.பழுதடைந்து சில நாட்கள் ஆகியதை போல தோற்றம் அளிக்கின்றது.
 
Chick-Fil-A – Carrot and Raisin Salad
 
இது உலகத்திலேயே மிகவும் தரம் வாய்ந்த fried-chicken sandwiches ஆகும். 170 கலோரி ஊட்டச்  சத்துகளை கொண்டுள்ளது.இருந்தாலும் என்னவோ இதுவும் எதிர் பார்த்த அளவு வருவாயை ஏற்படுத்தவில்லை.

Taco Bell – Pacific Shrimp Taco

பத்திரிகைகளில் அதிகமாக இந்த உணவை பற்றித்தான் எழுதுகின்றார்கள்.இதில் marinated shrimp, lettuce, salsa உள்ளது. இதை பார்க்கும் போது ஒரு கை பார்த்துவிடுவது போல இருந்தாலும், வாயில வைத்ததுடன் இது வாழ் நாள் எதிரி ஆகிவிடுகிறது.

இதெல்லாம் நம்மோட ECONOMY க்கு சாப்பிட சரி வராதப்பா . நமக்கு பறோட்டாதான்.

1 comments:

Mohamed Faaique said...

http://www.hollywoodbala.com/2010/01/food-inc-best-of-2009-06.html
http://www.hollywoodbala.com/2010/01/food-inc-best-of-2009-062.html

Post a Comment

Related Posts with Thumbnails