அதென்னமோ தெரியல பொண்ணுங்கள பற்றி எழுதிற அப்படியொரு கிளு,கிளுப்பு. தப்பா எழுதினால் தானே அடி விழும்.பெண்களிடம் அடி வாங்கிறது ஒன்றும் புதியது ஒன்று இல்ல. "அதிகமா ஆசைப்படுகிற பொம்பிளங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல". இரவு பகலா கஸ்டப்பட்டு யோசிச்சு எழுதினது. யாராவது சுட்டப்போடங்கப்பா.
வயசு பொண்ணுங்க பொதுவாக விடுகிற தவறுகள்
Gym
சில பெண்கள் பக்கத்து வீட்டு மாமியுடன் போட்டி போட்டு உடலை குறைக்கிறேன் என்ற பெயரில் treadmill ஐ வீட்டிலே வாங்கி வைத்துவிட்டு அதில மரதன் ஓட்டம் ஓடினால் மரணம் தான் நெருங்கும்.அதிகமாக உடற்பயிற்சி செய்வதை விட , அதனை நுட்பமாக செய்வதே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.எதையும் வைத்தியரின் ஆலோசனையுடன் செய்வதே நல்லதாகும்.
Non Believer
பொதுவாக பெண்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டு கொள்கிறார்கள்.ஆனால் மன ரீதியாக இவர்கள் நினைப்பதை விட பலசாலிகளாகவே இருப்பதை உணராமையே இவர்கள் எதிர் நோக்கும் மிக பிரச்சனையாக உள்ளது.தாங்கள் ஏற்கனவே செய்ததையே மீண்டும் மீண்டும் செய்கிறார்களே தவிர அதற்கடுத்த கட்டத்திற்கு செல்வதை தவிர்த்து கொள்கிறார்கள்.
Expectation
ஒரு விடயத்தை ஆரம்பித்த மறுகணமே அதற்கான பலன் உடனே கிடைக்க வேண்டும் என்றே பல பெண்கள் நினைக்கின்றார்கள்.இந்த பதற்றம் செய்து முடிக்க வேண்டிய விடயத்தை திசை மாற செய்துவிடுகிறது.எந்த விடயம் மிக அவசியமானதும், குறிப்பிட்ட காலத்தில் முடிக்க கூடியதுமானவற்றை செய்வதே ஆரோக்கியமானதாகும்.
Mirror
பெண்கள் வீட்டிலே இருக்கின்றபோது கண்ணாடிக்கு நல்ல வேலைதான்.எத்தனை தரம் பார்த்தாலும் தெரிய போவது ஒரு உருவம் தான்.தங்களுடைய உடல் பருமனை பற்றி தான் அதிகம் கவலைப் பட்டு கொள்கிறார்கள்.பொதுவாகவே உடல் பருமனில் மாற்றம் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. நீர், அணியும் ஆடைகள், ஓய்வு நேரம் இதிலே செல்வாக்கு செலுத்துகிறது.
Strength Training
பெண்கள் தங்களுடய உடல் கட்டமைப்பு சூர்யா போன்றோ, ஆர்னோல்ட் போன்றோ இருப்பதை விரும்புவதில்லை.எனக்கு தெரிந்த அளவில் Muscles உள்ள ஓட்ட வீராங்கனை ஒருவர் இருக்கிறார். இந்த பயத்தினால் பெண்கள் strength training ஐ செய்வது குறைவாகவே உள்ளது.இவற்றை செய்ய தவறுவதால் பெண்களின் கால் தொடையின் பருமன் அதிகரித்து விடுகிறது.
0 comments:
Post a Comment