தில்லாலங்கடி வேலைகளுக்கு உதவும் Email சேவைகள்

Share

ஒரு தளத்திலே இணைய வேண்டிய நிலைமை வரும் போது , நாங்கள் email கொண்டு sign up செய்ய வேண்டிய நிலைமை வருகிறது . நாம் தற்செயலாக எமது வேலைத்தள email A /C , தனிப்பட்ட தேவைக்கு வைத்திருக் கும் email A /C ஐ கொடுத்து மாட்டுபட்டு விடுகிறோம் . பின்னர் விளம் பரங்கள், SPAM தொல்லைகள் தான் .

இவற்றில் இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email address ].இந்த சேவைகளை வழங்குவோரை [ Free disposable email address provider ] பற்றி  பார்க்கலாம் .

Mailinator
 
Mailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை  02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு  registration verification links , email களையும் இந்த  முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் . 

எதிர் காலத்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள்  Mailinator க்கு  Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .

 
MintEmail
 
பாவித்து விட்டு அழித்து விட கூடிய email சேவைகளை இலவசமாக வழங்கும் நிறுவனங்களின் [disposable email address provider ]சேவைகளி ல்  மிகவும் சிறிய வேறுபாடுகளே காணப்படுகிறது. ஆனால் MintEmail மற்றவைகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு வசதியை தருகிறது. இதனுடைய முகப்பு [ Interface ] மிகவும் தெளிவானதாக உள்ளது . எங்களின் Inbox க்கு mail வந்தவுடன் , முகப்பில் இருந்தவாறே அறிய முடிகிறது . 

இது புதிய web compatibility formats வசதிகளை கொண்டு இருப்பதால் தொடர்ச்சியாக Inbox ஐ  update செய்து வருகிறது .எனவே நாங்கள் ஏதாவது புதிய mail வந்து இருக்கிறதா என பார்க்க Refresh செய்ய தேவையில்லை . முக்கியமாக இது  page இன் title ஐ update செய்வதால், நாங்கள் இன்னொரு tab இல்  வேலை செய்து கொண்டே mail வந்து இருக்கிறதா என் அறியலாம். இந்த வசதியை Gmail கொண்டுள்ளது அனைவருக்கும் தெரியும்

 
Guerilla Mail
 
இங்கு நாம் பெறும் Mail களுக்கு நாங்கள் மறு பதில் அளிக்க கூடிய வசதி இதில் மட்டுமே உள்ளது .சில இணைய தளங்கள் verify பண்ணுவதற்காக  written reply கேட்பார்கள் .அந்த இடத்தில் இது மட்டுமே மிகவும் உதவியாக இருக்கும்.one-time reply நிலைமையில், தொடர்பு கொள்ளுவதற்குஇது  proxy email address ஆகவும் செயல்படுகிறது .

எனவே  Gmail இலோ hotmail இலோ  இன்னொரு A/C   ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .


My Trash Mail
 
இது Mailinator போலவே செயல்படுகிறது .இதிலும் எங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முகவரியை உருவாக்கி கொள்ளலாம் . automatic ஆக இணைய தளத் தில்  பதிவு செய்வதற்காக yourname@thankyou2010.com ஐ பயன்படுத்தி, எங்களுக்கு  தேவையான verification emails , Serial code ஐ பெறலாம் .இந்த   My Trash Mail ஆனது தனிப்பட்ட ,பொதுவான[ private , public ] கணக்குகளை வழங்குகிறது .

 
Dodgelt
 
இதுவும் மற்றயவை போல ஒரே சேவைகளை வழங்கினாலும் ,RSS வசதியை இங்கு குறிப்பிட்டு சொல்லலாம் . இது மிகவும் அடிப்படையான ஒரு interface   ஐ  கொண்டுள்ளது . இதில் எழுத்துகளும் , சில வரி  விளம்பரங் களையுமே கொண்டுள்ளது . இவர்களுடைய Premium சேவையில்  நாங்கள் password ஐயும் உருவாக்கி  கொள்ள முடிகிறது . தற்காலிக email இலும் பாதுகாப்பு தேவை என நீங்கள் நினைத்தால் இதை பயன்படுத்துங்கள் .

மேலும்  குறிப்பிட கூடிய சில
 
*http://www.mail-temporaire.fr
*http://onewaymail.com.
*http://umail.net
 -friedbeef.com-
நல்லவேலைகளுக்கு பயன்படுத்துவதும் , ஏடாகூடமான வேலைகளுக்கு பயன்படுத்துவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது :)

20 comments:

ம.தி.சுதா said...

மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி சகோதரம்...

மதி.சுதா.

நனைவோமா ?

nis said...

நன்றி சுதா

தொடர்ந்து நனைந்து சளி பிடிச்சு போட்டு சுதா :))

kirush said...

சிறந்த தகவல்
நன்றி நட்பு

அன்பரசன் said...

நல்ல தகவல்.

nis said...

நன்றி

Kirush
அன்பரசன்

nis said...

@வெறும்பய
மிகவும் நன்றி

Unknown said...

நல்ல தகவல்..நன்றி பாஸ்

சசிகுமார் said...

Thanks

நிகழ்காலத்தில்... said...

http://knsankar.blogspot.com/2010/12/blog-post.html

nis said...

நான் இந்த தகவல்களை மேலே குறிப்பிட்டு உள்ளது போல -friedbeef.com- என்ற ஆங்கில இணையதளத்தில் பெற்று கொண்டேன் .
நான் உங்களுடைய தளத்திற்கு முதன் முறையாக தான் வந்து இருந்தேன் .நிச்சயமாக உங்களுடைய தளத்தில் இருந்து copy பண்ணவில்லை.
இருந்தாலும் எனது பதிவுக்கு கீழே உங்கள் பதிவின் link ஐ கொடுக்கிறேன்

mkr said...

it is very useful information.thanks for sharing ji(i forward this msg to my contacts- if it is wrong pls forgive)

nis said...

@ mkr thanks

nis said...

நன்றி

மைந்தன் சிவா
சசிகுமார்

nis said...

@ mkr
no problem , u can forward
and thanks

ம.தி.சுதா said...

எல்லாம் ஒரே மூலம் தான் சகோதரம்...
எனக்கு புது தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள்..

Unknown said...

ரொம்ப யூஸ்புல்லான விசயங்க.. நன்றி..

nis said...

நன்றி

ம.தி.சுதா
பதிவுலகில் பாபு

Ravi kumar Karunanithi said...

aen indha thiruttu work'u..

nis said...

@Ravi kumar Karunanithi

technology ஐ நான் ஒன்றும் புதுசா கண்டு பிடிக்க முடியாது
ஆங்கில இணைய தளங்களில் இருந்து மொழிபெயர்ப்பது ஒன்றும் தப்பில்லை

ஆமினா said...

நல்ல தகவல்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails