பொண்டாட்டிகிட்ட அடி வாங்கிறதே தனி சுகம் தாங்க.

Share
 
அண்மையிலே ஒரு சகோதர மொழி பிரபல்யமான தயாரிப்பாளரின் நட்புடன் எனது பாசமிகு அயல் நாட்டின்  நடிகை அசின் அம்மணியை நேரில் பார்க்கும் அதிர்ஸ்டம் என் முதுகை சுரண்டியது என்னால் மறக்க முடியாத ஒன்றாகும்.இது வரை சினிமாவில் மட்டுமே பார்த்த அசின் நியத்தில் ஜொலிக்கின்றார்.அப்படி எதைத்தான் பூசுறாவோ?.கையை நீட்டி Hi சொல்லிவிட்டு கையை பிசின் எடுத்திருந்தாலும் கட்டியணைக்கவில்லையே என மனசுக்குள்ளே கடுப்பாக இருந்தது. 
 
அப்படியே என்னை ஆசுவாசப்படுத்தி மற்ற பக்கம் பார்த்தா இது வரையிலே நான் பார்த்திராத உருவம் , அவன் மார்பு நம்ம சூர்யாவின் 6 packs ஜ போல பத்து மடங்கு பருத்து இருந்தது.இப்படி ஒரு Body Guard ஐ  இது வரையிலே நான் பார்த்திருக்கவில்லை. நாசமா போறவன் எதை திண்றானோ??. 1 மணி நேரம் அசினுடன் இருந்தாலும் ஏதோ 5 நிமிடங்கள் தான் போன்ற ஒரு உணர்வு. 
 
அப்போதுதான்  அதிர்ஸ்டம் என் பக்கம் வந்தது. நானும் அசினும் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் ஒன்றும் இராமர் கிடையாதுங்க.என்னை என்னால் control பண்ணமுடியாது போக அசினை கட்டியணைத்து முத்தம் கொடுத்துட்டங்க. Body Guard ஒருத்தன் எந்த பக்கம் இருந்து வந்தானோ,
 
"நச்சின்று இச்சொன்று தந்தானே இது போதுமா" அட நீங்க வேற பாட்டு பாடிற நேரமா இது, கன்னத்தில ஒரு Punch தாங்க கிடைச்சுது. அப்படியே அலறிக்கிட்டு முழிச்சு பார்த்தா Punch தந்தது கல்யாணங்கட்டி 10 நாள் கூட ஆகாத  பொண்டாட்டிங்க. ஏங்க சிரிக்கிறிங்க, 
 
பொண்டாட்டிகிட்ட அடி வாங்கிறதே தனி சுகம் தாங்க. இதெல்லாம் சகயம்ப்பா. ஏண்டி அடிக்கிற என கேட்க , என்னை அணைத்துகிட்டு  அசின்  அசின் ன்றீங்க .  இனி அந்த producer கேட்டாலும் அசின் பக்கம் தலை காட்டிறதே இல்லை .நம்மளால control பண்ணமுடியாதப்பா.

அதுக்கப்பிறம் என்னங்க  அன்பு மனைவியை super market க்கு துரத்திவிட்டு இந்த பிசின் Song தான் பார்க்க முடிஞ்சுது.

அன்புக்குரிய பதிவுலக  SUPER STARS நண்பர்களே ஏதாவத தவறு இருந்தால் மன்னிச்சுக்கிடுங்க.
 
நம்மளால அடி தாங்க முடியாதுங்க bcz
 
Building Strong ங்கு BASEMENT கொஞ்சம் WEEK க்கு.

4 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....

Anonymous said...

தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு.

http://bit.ly/bJHGXf

சி. கருணாகரசு said...

தொடர்ந்து அடி வாங்க என் வாழ்த்துக்கள்!!!

வார்த்தை said...

//பொண்டாட்டிகிட்ட அடி வாங்கிறதே தனி சுகம் தாங்க. //
சரியா சொன்னீங்க...
இதெல்லாம் கல்யாணம் ஆகாத மொட்ட பசங்களுக்கு எங்க தெரிய போகுது.
:)

http://vaarththai.wordpress.com

Post a Comment

Related Posts with Thumbnails