இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள்

Share
 
ஒவ்வொரு ஆணும் குறிப்பாக இளையோர் நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். இவை அனைத்தையும் சிலரால் செய்ய முடியாவிட்டாலும் ஆக குறைந்த்தது  முயற்சியாவது பண்ணி பாருங்களேன். நிச்சயம் உங்களில் பலர் இவை அனைத்திலும் எக்ஸ்பெர்ட் ஆக இருப்பீர்கள் என தெரியும். வாழ்த்துக்கள்

1 .தனியாக தங்கும் அல்லது மனைவி பகிஷ்கரிப்பு செய்யும் வேளைகளில் எளிமையான ஏதாவது ஒரு உணவு சரி தயாரிக்க தெரியனும்.

 
2 .மற்றயோரை கவர்வதில் முக அழகு முக்கியம் என்பதால் ஒழுங்காக சீரான முறையில் முகச்சவரம் செய்ய பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

 
3 .பலவேளைகளில் நண்பர்களை நாம் தான் வரவேற்கவேண்டிய சூழ்நிலை இருப்பதால் ருசியான தேநீர்/குடிவகை தாயாரிக்க பழக வேண்டும்.

 
4 .உங்கள்/உறவினர் குழந்தைக்கு நிச்சயம் கக்கா கழுவவேண்டிய சந்தர்ப்பம் வரும்.அப்போது முகம் சுளிக்காமல்/ மறுக்காமல் கழுவிவிட தெரிய வேண்டும்.

 
5 .கும்மிருட்டிலோ, கடும் மழையிலோ அல்லது அழகான பிகரை காணும் போதோ மனம் சிதறாமல் ஒழுங்காக வண்டி ஒட்டி வீடு போகணும் GH இக்கல்ல.

 
6 .காதலியோ அல்லது மனைவியோ பொய் சொல்லும் போதோ,நடிக்கும் போதோ,ஐஸ் வைக்கும் போதோ அதை கண்டுபிடிக்க வேண்டும்.

 
7 .அந்த மாதிரி தளங்களுக்கு சென்று விட்டு history ,cookies , போன்ற தடயங்களை அழித்து விட்டு ஒண்ணுமஅறியா பாப்பா போல இருக்க தெரியனும்.

 
8 .பரிசுப்பொருட்களின் பிரியர்களான பெண்களுக்கு சிறந்த பொருத்தமான ஆனால் குறைந்த விலை பொருட்களை வாங்கி கொடுத்து அசத்த தெரிய வேண்டும்.

 
9 .முழு மப்பு என்றாலும் பத்திரமாக வீடு வந்து ஒருத்தரையும் தொந்தரவு செய்யாமால் அடுத்தநாள் எழுந்து ஒண்ணும தெரியாதது போல் ஹாய் சொல்லலாம்.

 
10 .டிராபிக் போலீஸ் உடன் எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல ஒரு டீலை ஒழுங்காக பேசி முடித்து பிரச்னையை அங்கேயே முடிக்கணும்.

 
11 .ஆண் என்றாலே இது தான் அழகு என்னவென்றால் பீர் போத்தலை இரண்டு தட்டு தட்டியோ அல்லது வாயாலையோ திறக்க தெரியனும்.

 
12 .மனமுவந்து மனைவிக்கு(or எதிர்கால) பிரா,ரவிக்கை கூக்கிகளை போட்டு விடவும் முடிந்தால் சேலை கட்ட உதவி செய்யவும் பழகி கொள்தல் நன்று.

 
13 .ஆடை கிழியும் போதோ அல்லது வண்டி வைத்து button தெறிக்கும் போதோ அதனை சுயமாக தைத்துக்கொள்ள தெரிந்திருத்தல்  வேண்டும்.

 
14 .பொது இடங்களை/போது சொத்துகளை  பயன்படுத்தும் போது சில எழுதப்படாத விதிகளை  கடைப்பிடித்து மரியாதையை காப்பாற்ற வேண்டும்.

 
15 .பெண்கள் அதிகம் கோடீஸ்வரர்கள் போல காட்ட பல யுக்திகளை கையாண்டாலும் அவர்களின் சுயரூபத்தை ஓரளவு தன்னும் தெரிய பழக வேண்டும்.

 
16 .இரவுக்கேளிக்கைவிடுதிகள்,விருந்துகள் செல்லும் போது பொருத்தமான உடை அணிந்து சென்று எப்படி அங்கு நடக்க வேண்டும் என தெரியனும்.

 
17 .ஹோட்டல்கள் அல்லது உயர் மட்ட விருந்துகளில் கலந்து கொள்ளும் போது அவ்விடத்துக்கேற்ற நாகரிகமானமுறையில் உணவருந்த வேண்டும்.

 
18 .இது நம் வேலையில்லை என்றாலும் நாமிருக்கும் சூழலை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பேண பழக்கப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

 
19 .பெண்களும் நைட் கிளப்ஸ் களில்  பட்டையை கிளப்பும் காலத்தில் வாழ்வதால் அப்படிப்பட்ட இடங்களில் நாமும் டான்ஸ்(டப்பாங்குத்தல்ல)  ஆட தெரியனும்.

 
20 .சிக்ஸ் பக் இல்லை எண்டாலும் பரவாயில்லை பண்டிக்குட்டி மாதிரி  இல்லாமல் இருக்க பாஸ்ட் பூட் கடைப்பக்கம் போவதை குறைக்க பழகணும்.

 
21 .காரோ பைக்கோ நடுவழியில் மக்கர் பண்ணும் போது சரிப்படுத்த தெரியனும். குறிப்பாக அதிக தூரம் பயணிப்பவர்கள்  கார் சக்கரம் மாற்ற பழக வேண்டும்.

 
22 .எவனாவது பேட்டை ரவுடி பிலிம் காட்டி சொறிந்தால் தைரியமாக அவன் மூக்கை குறிபார்த்து இரண்டு போட்டு கூட்டத்தை கூட்டி எஸ்கேப் ஆகணும்.

 
23 .கடைப்பக்கம் அதிகம் செல்ல வேண்டி உள்ளதால் தரமான பொருளை குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி பணத்தை சேமிக்க பழகணும்.

 
24 .ஆடை பாதி மனிதன் பாதி என்பார்கள்.எளிமையான ஆடை என்றாலும் நேர்த்தியாக பொருத்தமாக அணிய, குறிப்பாக அழகாக டை கட்ட தெரியணும்.

 
25.எப்படியாவது கால்ல கையில விழுந்தாவது விளையாட தெரியாவிடினும் உள்ளூர் விளையாட்டு அணி ஒன்றுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

 
26 .வீட்டு இலத்திரனியல் உபகரணங்கள் குறிப்பாக கணணி மக்கர் பண்ணும் போது நாமே அதை இயலுமானவரை சரி செய்து பணம்,நேரத்தை சேமிக்கணும்
 
 
27 .மிக முக்கியமானது மன்மதக்கலை தானாக வருவது என்றாலும் படு வீக் ஆக இருப்போர் இணையம்,நண்பர்கள் உதவியுடன் நல்ல அறிவு,திறன் பேண வேண்டும்.

 
28 .எவனாவது காதலி/மனைவி முன்னால் வந்தது பிலிம் காட்டினால் கோபப்படாமல் அவன் வழியில் சென்று மூக்குடைத்து ஓட வைக்க தெரியணும்.

 
29 .நாம் டாக்டரோ நேசோ இல்லை என்றாலும் ஏதாவது சிக்கல் வேளைகளில் ஒருவருக்கு தேவையான முதலுதவி செய்து வைத்தியசாலையில் சேர்க்கணும்.

 
30 .காலையில் அதிக நேரம் தின்னும் இஸ்திரி போடும் வேலைகளுக்கு அடுத்தவரை எதிரர்பார்க்காமால் முதல் நாளே நாமே போட்டு வைக்கணும்.

 
31 .பாஸ்ட் பூட் கடைகளில்  பொருத்தமான உணவு,சரியான அளவு உடைகள்,தரமான பொருட்கள்,குறிப்பாக உயர் ரக குடிவகை தெரிவு செய்ய தெரியணும்.

 
32 .மனைவி / காதலி இக்கு சில சமயங்களில் பெரும் தன்மையாக விட்டுக்கொடுக்க தெரிவதோடு வேண்டிய வேளைகளில் கண்டிப்பாக நடக்கவும் தெரியனும்.

 
33 .இருக்கும் சூழலை கலகலப்பாக வைத்திருக்க பழகி கொள்ளுதல் அதிக கூட்டத்தை அன்பை சேர்க்கும்.சுற்றுலா ஒன்றை ஒழுங்கு படுத்தல்.

 
34 .பெண்களுடன் அதிகம் வழியாமலும், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாமல் , உணர்ச்சியே அற்றவன் போல் பழகாமலும் சகஜமாக பழக தெரியனும்.

 
35 .தமிழன் என்பதற்கான முக்கிய அடையாளமே இதுதான். தலைவர் பட first ஷோவுக்கு அடிபட்டு டிக்கெட் எடுத்து நண்பர்களுடன் விசில் அடித்து பார்க்கணும்.

14 comments:

இளங்கோ said...

:)

LK said...

ஹஹஅஹா இவ்ளோ பண்ணனுமா

nis said...

வந்து கருத்திட்டு வாக்ளித்தமைக்கு நன்றி நண்பர்கள்

இளங்கோ
LK

@LK :)))

Anonymous said...

அருமை நண்பா

ஹரிஸ் said...

இவ்ளோ இருக்கா..

//அந்த மாதிரி தளங்களுக்கு சென்று விட்டு history ,cookies , போன்ற தடயங்களை அழித்து விட்டு ஒண்ணுமஅறியா பாப்பா போல இருக்க தெரியனும்.
//

இத மட்டும் நான் கரெக்டா பண்னுவேன்..

அன்பரசன் said...

இவ்ளோ விசயம் இருக்கா..

Anonymous said...

enakkup pidiththathu 7 :)

Vinoth said...

ம்ம்ம்...

பதிவுலகில் பாபு said...

ரைட்டு.. :-)

rajvel said...

ஏதாவது ஒரு உணவு தயாரிக்க தெரியனும்.

Anonymous said...

serupala adi nayae

Durai Manickam said...

//அந்த மாதிரி தளங்களுக்கு சென்று விட்டு history ,cookies , போன்ற தடயங்களை அழித்து விட்டு ஒண்ணுமஅறியா பாப்பா போல இருக்க தெரியனும்.
//
I am always doing this
www.funtamilvideos.com/kids

Anonymous said...

Hello to every body, it's my first pay a visit of this web site; this web site carries awesome and genuinely fine material for readers.

Review my blog post acoustic guitar a chord

muthamilan mline said...

Super

Post a Comment

Related Posts with Thumbnails