உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமா?

Share
 
நாம் ஒருவரை முதல் முறையாக சந்தித்தால் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து விட்டு அடுத்ததாக கேட்பது "உங்களுடய Facebook  a/c என்ன?". எங்களில் எத்தனை பேர் ஒன்றிற்கு மேற்பட்ட a/c வைத்திருக்கின்றோம்?.
 
பொது இடம் ஒன்றிலே 2 அம்மணிகள் கதைக்கிறார்கள், ஒரு 10 நிமிடம்  Facebook  ல் என்னுடைய மகன் இருக்கவிடுறானா?அவன தூங்க வைச்சிட்டு Farmville  விளையாடுவதற்குள் போதும் என்றாகிவிடுகிறது. சத்தியமா நான் ஒன்றும் ஒட்டுக் கேட்கலெங்க.

5 வயதுடைய பிள்ளைகள் கூட  தங்களுடைய சகோதர,சகோதரிகளின் பிறந்த ஆண்டை குறிப்பிட்டு a/c ஐ உருவாக்கிவிட்டு, இவங்க Facebook ஐ யே அதிர வைக்கிறாங்கப்பா. உண்மையை சொல்ல வேண்டுமானால் நாங்கள் எல்லாவேளைகளிலும், எல்லோரிடதிலும் நட்புடன் இருப்பதில்லை.
 
பிரச்சனைகள் வரும்போது எங்களுடைய பலத்தையோ, வார்த்தைகளையோ எல்லோரிடமும் நேரடியாக பிரயோகிக்க முடியாது. கோபத்தில் உங்களுடைய மனைவியை உதைத்தீர்களானால் அவள் பெட்டி படுக்கைகளுடன் அம்மா வீட்டிற்கு கிழம்பி விட்டால் பிறகு வயித்தில ஈர துண்டுதான்.

உங்கள் கோபத்தையோ,மகிழ்ச்சியையோ காட்டுவதற்கு இருக்கவே இருக்கு Facebook Emoticons

 
Cute Animated Emoticons
 
இது வழமையான சிரித்த முக அமைப்புகளை கொண்டிராது, வித்தியாசமான மிருகங்களின் அமைப்பையும்,சிறு குழந்தைகளின் உருவ அமைப்பையும் கொண்டுள்ளது.உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குரிய பல அரிதாக கிடைக்க கூடிய பல உருவங்களை பெற்று கொள்ள முடிகிறது.

Moods
 
எங்களின் உணர்வுகளை இந்த Moods application ஊடாக வெளிப்படுத்த கூடியதாக உள்ளது.Facebook லே இருக்க கூடிய போலியில்லாத ,உண்மையான ஒன்று.இதிலே பெரிய வடிவத்திலான முக வடிவங்களையும் பெற்று கொள்ள முடிகிறது.பதிவேடு ஒன்றின் ஊடாக கடந்த தினங்களில் எப்படியான Mood ல் இருந்து அறிய முடிகிறது. 44725 பேர் இதில் இணைந்துள்ளார்கள்.

Facemoods
 
Facebook இலே இருக்கின்ற emoticons application களில் இது முக்கியமான இடத்தை வகிக்கின்றது.பல்வேறு வடிவான உருவங்களை நாம் இதிலிருந்து எடுத்து கொள்ள முடிகிறது. 4,264,531 பேர் இதில் இணைந்துள்ளார்கள். 2009 ஆம் ஆண்டிலே இது Facebook ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Facebook Emoticons.com
 
இந்த இணைய தளத்தில் மற்றைய இடங்களில் எடுக்க முடியாத Pacman,shark போன்றவற்றை பெற்று கொள்ள முடிகிறது.87,724 fans ஐ இது கொண்டுள்ளது.

Monkey Faces
 
இது எல்லோரையும் வசீகரிக்கின்ற ஒன்றாகும்.இது Indonesian மொழியில் அமைக்கப்பட்டுள்ளது. 2360 பேர் இதில் இணைந்திருக்கிறார்கள்.

Facicons
 
இந்த browser add ஐ இலகுவாக எங்களுடைய Facebook updates ல் சேர்க்க முடிகிறது.விரைவானதும், இலகுவானதுமான பாவனைக்காக இது toolbar இலே சேர்க்கபட்டுள்ளது.

Emoticons
 
இது codes, tips ஐ தருகிறது.இதன் ஊடாக இந்த வடிவங்கள் பதிவுகளிற்கு முன்னே தோன்றுகிறது.இதுவும் பல்வேறு பட்ட வடிவங்களை தருகிறது.இதிலே jester, cheeseburger என்பவை குறிப்பிடதக்கவையாகும்.9865 fans ஐ கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails