தப்பித்துக் கொண்ட இலங்கையின் (DEHIWALA ZOO) மிருக காட்சி சாலை

Share

நாய்க்கு சோறு வைச்சா சாவும் வர வாலாட்டும் என கவிஞர் பாடல் எழுதியிருக்கிறார். சிங்கம்,புலி,கரடி க்கு வைச்சா என்ன நடக்கும் என ஒருவரும் பாடல்  எழுதவில்லை. அனேகமாக கொலை தான் விழும். மிருகங்களை மிருக காட்சி சாலையில் பராமரிக்கிறோம் என்று கூறி பணம் சம்பாதிப்பது போக , 

வாயில்லா பிராணிகளிற்கு சத்தான உணவுகள்,நீர்,மருந்துகள் கொடுப்பதாக தெரியவில்லை.பாவி பசங்க மிருகங்களிற்கான உணவையும் சாப்பிட்டு ஏப்பம் விடுவாங்களோ???.இதனால் தானோ தெரியவில்லை மிருக காட்சி சாலை ஊழியர்களும்  சிங்கம்,புலி,கரடி போன்றே முரட்டு பய பிள்ளகளாக இருக்காங்க.

அன்பான அப்பா பதிபவர்களே, அம்மா பதிபவர்களே, அண்ணா பதிபவர்களே,தம்பி பதிபவர்களே, சகோதரி பதிபவர்களே இந்த  Zoo க்களுக்கு உங்க பிள்ளைகளை கூட்டிச் சென்று விடாதீர்கள்.

Dhaka Zoo (Bangladesh)

2009 ஆம் ஆண்டில் இங்கு பெரும் தொகையான மிருகங்கள் இறந்துள்ளன. 21 வகையான அரிய வகை உயிரினங்களும்,ஒருஅரிய வகை ஒட்டகமும் உயிர் இழந்துள்ளது.மிருக காட்சி சாலைக்கு பொறுப்பானவர்கள் பணி நீக்கப்பட்டு , இன்று வரை இறந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டதாக தெரியவில்லை.இங்கு 2000 ற்கு மேற்பட்ட மிருகங்கள் இருக்கறதாம்.

Bowman ville Zoo (Ontario, Canada)

கடந்த யூலை மாதம் மிருகங்களை Nova Scotia ல் இருந்து Bowmanville Zoo க்கு மாற்றும்போது களவாடி பசங்க புலி ஒன்றையும் ,2 ஒட்டகங்களையும் திருடியது மிகவும் பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டது.இவற்றை மீட்க மிருக காட்சி சாலை $20000 ஐ அறிவித்திருந்தது. களவாடி பசங்க மிருகங்களை நாடு கடத்தினால் இதை விட 10  மடங்கு தொகையை பெற முடியும்.

Shenyang Forest Wild Animal Zoo (China)

கடந்த 3 மாதங்களில் 11 அரிய வகை Siberian புலிகள் இந்த மிருக காட்சிசாலையில் இறந்துள்ளன. அங்குள்ள ஊழியர்கள் இவை நோய்களால் இறந்துள்ளன என கூறினாலும், வனலாக அதிகாரிகளும் சமூக பாதுகாவலர்களும் இவை போதிய அழவு ஊட்டச் சத்து இல்லாமையால் இறந்துள்ளது என்கிறார்கள்.China விலே இன்னமும் 50 புலிகளே உள்ளமை குறிப்பிடதக்கது.               Read

Kiev Zoo (Ukraine)

2008 ம் ஆண்டிலே இங்கு 30 மிருகங்கள் இறந்துள்ளன.கடந்த சில மாதங்களில் 39 வயதுடைய யானை, வெள்ளை ஒட்டகம்,காண்டா மிருகம் இறந்துள்ளது. Zoo அதிகாரிகள் யாரோ ஒரு மர்ப நபர் நஞ்சு கலந்துள்ளதாக கூறினாலும், அதிகாரிகளிற்கு மிருகங்களை பராமரிக்க அனுபவம் போதமையே காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Giza Zoo (Egypt)
கடந்த சில வருடங்களாக இங்குள்ள மிருகங்கள் பல சிக்கல்களிற்கு உள்ளாகி வருகின்றன.மனிதாபமற்ற முறையிலே 2 குரங்குகளை கொன்றமை, சுகாதாரமாக வைத்திருக்க தவறியமையால் ,2004 ம் ஆண்டிலே இது உலக மிருக காட்சிசாலை அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.2006 ம் ஆண்டிலே பறவைகள் Avian Flu ஆல் பாதிக்கப்பட்டு இறந்தன.2008 ம் ஆண்டிலே 2 பாவி பசங்க Zoo வை உடைத்து 2 ஒட்டகத்தை கொண்டுபுட்டாங்கப்பா.ரத்த காட்டேரியா இருப்பாங்களோ??


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails