விளையாடி முடிந்த பின் நடக்கும் விளையாட்டுகள்

Share
 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் [சில அப்பா, அம்மாக்களை தவிர ] வரை Sports என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் சிலர் இருக்கிறாங்கப்பா வெறித்தனமா சில விளையாட்டு அணிகளை விரும்புவாங்க. அவங்க support பண்ற அணியை பற்றி தப்பா கதைச்சிட்டா மண்டையையே  பிளந்திடுவாங்கப்பா.ஒவ்வொரு விளையாட்டிலும் விளையாட்டுடன் முற்றிலும் சம்பந்தப்படாத சிலவற்றை பாரம்பரியமாக  செய்துவருகிறார்கள்.

Haka

நியூசிலாந்தில் உள்ள Maori இனத்தவர்களின் பாரம்பரிய ஒரு நடனமாகும்.தற்போது நியூசிலாந்தின் rugby வீரர்கள் விளையாட ஆரம்பிக்க முன்னர் இந்த நடனத்தை ஆடுகிறார்கள். இந்த நடனத்தின் முக அசைவகளும், உடல் அசைவகளும் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது.1885 ஆம் ஆண்டு  rugby விளையாட ஆரம்பிக்க முன்னர் இது ஆடப்பட்டது .இன்று வரை தொடர்கிறது.International Rugby Federation இந்த நடனத்திற்கு ஆப்பு வைக்க போறாங்க என்று தான் நினைக்கிறன்.

Pie in the Face

இது baseball ல் மட்டும் தான் நடக்கிறது என நினைக்கின்றேன்.இதிலிருந்து விளையாட்டு வீரர் தப்பித்து கொள்ளாதிருக்க விளையாட்டு முடிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்தினை தெரிவிக்கும் போது படத்தில் உள்ளவாறு முகத்திலே பூசி விடுகிறாங்க.இதற்காக shaving cream ஐ பாவிக்கிறாங்க. Cricket முடிந்த பின்னர் Captain  பேட்டி கொடுக்கும் போது சந்தர்ப்பம் கிடைச்சா யாராவது பூசி விடுங்கப்பா.

Champion

இதை சிலர் மூட நம்பிக்கை என்று கூறினாலும், இன்று வரை இதை செய்து வருகிறார்கள். 1800 ம் ஆண்டளவிலே இது பல்கலைகளகங்களில் தான் ஆரம்பிக்கப்பட்டது. "Play Like a Champion Today" என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதை கையால் தொட்டு விட்டு சென்றால் வெல்ல கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம்.இது ஒரு ஊக்குவிப்பு காரணியாக இருந்து வருகிறது.

Jerseys

இரு அணி வீரர்களும்  தாங்கள் அணிகின்ற உடைகளை தங்களிற்குள்ளே மாற்றிக்கொள்வது பொதுவாக உதைபந்தாட்டத்திலேயே[Foot Ball] இருந்துவருகிறது.1931 ஆம் ஆண்டிலே பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 5 கோல்கள் அடித்து வென்ற பின்னர் , பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியின் Jerseys ஐ கேட்டுள்ளது. அது என்னமோ தெரியல FIFA இதை அனுமதிப்பதாக தெரியவில்லை. வீரர்கள் நட்பா இருந்தால் இவங்களிற்கு பிடிக்காதே.

Beards

hockey அணியினர் ஆட்டம் ஒன்றிலே தோற்று விட்டால் , அடுத்த ஆட்டத்தில் வெல்லும் வரை இவர்கள் தங்களது தாடியை [Beards] எடுக்க முடியாது.1980 ஆம் ஆண்டிலே New York ல் இருந்தவர்களால் தான் தாடி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் சில துணிச்சலால வீரர்கள் இதை பின்பற்றாது டிமிக்கி காட்டிவடுகிறார்கள். 6% வீரர்கள் மட்டுமே இதை பின்பற்றி இருக்கிறாங்க.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails