பெண்கள் BUS ல் படுகின்ற இன்னல்களை முடிவுக்கு கொண்டுவர அற்புதமான கண்டுபிடிப்பு

Share
                                                           பறக்கும் கார்
2006 ஆம் ஆண்டில் சில engineers சேர்ந்து  Terrafugia'  எனப்படும் நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார்கள்.இவர்கள் ஏற்கனவே விமான ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.‘Terrafugia' என்றால் பூமியில் இருந்து தப்பி கொள்ளுதல் என்பதாகும். இவர்களின் கண்டு பிடிப்பே இந்த 2 நோக்கங்களிற்காக உபயோகிக்க கூடிய Flying Car . Federal Aviation Authority இதை அனுமதித்து விட்டது. நிலத்திலே ஓடுகின்ற மற்றய கார்களை போலவே இதனையும் ஓட்ட முடிகிறது.

வாகன நெரிசலான வீதிகளில் கூட இதை செலுத்துவதற்கு வசதியாக இதனுடைய செட்டைகளை [wings] இலகுவாக மடித்து விட கூடியதாக இருக்கிறது. July 2008 ஆம் ஆண்டிலே இதனுடைய உரிமையாளர்கள் காரின் தொழிற்பாடுகளை விபரித்த பின்னர் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தரையிலே காரை போல உபயோகிக்கும் போது 100mph வேகத்திலே செல்லுகின்றது.

2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சில பரிசோதனைகளை அடுத்து இதில் இருந்த சில design களை மாற்றி வீதியில் மேலும் இலகுவாக செலுத்துவதற்கு வசதியாக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் இந்த கார்களை மக்கள் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என நம்பபடுகிறது.எதிர்காலத்திலே இந்த பறக்கும் கார்களிற்கு நல்ல Demand இருக்கும் என பலராலும் எதிர்பார்கப்படுகிறது.

இதை நிலத்திற்கு இறக்கிய பின் இதனுடய 27 foot wings தன்னிச்சையாகவே சுருங்கி விடுகின்றது. ஆக கூடிய வேகம் 130mph இலும்,430 pounds நிறையையும் இது கொள்ள கூடியதாக அமைக்கப் பட்டுள்ளது.இதற்கு ஒரு தடவை fuel நிரப்பினால் 1000 miles ஐ 8 மணித்தியாலங்களிற்குள் பயணம் செய்ய கூடியதாக இருக்கிறது.இதை நிலத்தில் இருந்து மேலே எழுப்புவதற்கு குறைந்தது 2500 ft runway தேவைப்படுகிறது.

மற்றைய கார்களை போலவே இதையும்  இலகுவாக வீட்டிற்கு உள்ளே நிறுத்தி வைக்க கூடியதாக இருக்கிறது. இதை ஓட்டுவதற்கு license பெற்றுக் கொள்ள 20 மணித்தியாலங்கள் வானத்தில் ஓட்டி காட்டிய பின்னர், சிறிய practical test ஐ aircraft இல் செய்தாலே போதும்.இதனுடைய பெறுமதி $200,000 - $250,000 வரையாக உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே $16 மில்லியன்கள் பெறுமதியான  orders ஐ பெற்று மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்களாம்.

யாருக்குமே புரியாத நம்மோட நாட்டின் வரி அமைப்புகளை பார்க்கப் போனால்  இதையெல்லாம் நாம் ஓட்டுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை காலம் தான் பதில் சொல்லணும்.

நீங்க உங்க வீட்டு மொட்டை மாடியில நின்று காதல் செய்பவரா? அப்படின்னா கொஞ்சம் கவனமப்பா....யாராவது ஓட்ட தெரியாமல் ஓட்டி உங்க மண்டையில Land பண்ணிட போறாங்க.

12 comments:

பட்டாபட்டி.. said...

நீங்க உங்க வீட்டு மொட்டை மாடியில நின்று காதல் செய்பவரா? அப்படின்னா கொஞ்சம் கவனமப்பா....யாராவது ஓட்ட தெரியாமல் ஓட்டி உங்க மண்டையில Land பண்ணிட போறாங்க.
//

அது சரி..ஹா..ஹா

nis (Ravana) said...

:)

பதிவுலகில் பாபு said...

நல்லாயிருக்கு..

Anonymous said...

டேய் ... தலைப்புக்கும் நீ எழுதி இருக்கிறதுக்கும் சம்பந்த்தம் இல்லையேடா....

nis (Ravana) said...

நன்றி பாபு ,,

உங்கள் அனபுக்கு நன்றி Mr Anonymous

ரமேஷ் said...

அருமையான பதிவு...நம்ம நாட்டோட..உள்கட்டமைப்புக்கு..இதெல்லாம்..டவுட்தான் பாஸ்...வடிவம் இன்னும் சின்னதா சுருங்குனா வாய்ப்பு இருக்கு....பாப்போம்...நாம தாத்தாவாகும்போது..என்னன்ன எல்லாம் வந்து ஆச்சரியப்படுத்தப்போகுதோ...

nis (Ravana) said...

உண்மைதான் ரமேஷ் :)

Robin said...

விலை குறைந்தவுடன் சொல்லுங்கள். எனக்கும் ஓன்று வாங்கவேண்டும் :)

REPETTU... said...

தலைப்புக்கும் எழுதி இருக்கிறதுக்கும் சம்பந்த்தம் இல்லையே....

டுபாக்கூர்கந்தசாமி said...

ரைட்டு கொஞ்சம் அப்படி இப்படி தலைப்ப போட்டு நல்ல மேட்டர உள்ள போட்டு இருக்கீங்க, குட்திங்கிங் ஏன்னா வேற தலைப்ப போட்டு இருந்தீங்கனா இத நான் படிச்சி இருக்கவே மாட்டேன்.....வாழ்த்துகள்........

virutcham said...

பறக்கும் போது ... monitoring and controlling யார் பண்ணுவாங்களாம். எல்லாம் இஷடத்துக்கு பறந்து முட்டி மோதி ....

Anonymous said...

mokka pathivu.....

heheheh summaa sonnan....
paravaayilla....

Post a Comment

Related Posts with Thumbnails