மரணிக்கும் 7 வயது சிறுமியை இம்சை படுத்திய ராட்சசி

Share
Jennifer Lyn Petkovenum  எனும் பெண்மணி உலக வரலாற்றில் மிக மோசமான பெண்ணாக கருதப்பட முடியும். இவர் தனது காட்டு மிராண்டித்தனத்தை இரண்டு வருடங்களின் முன்பு 7 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமி Kathleen எட்வர்ட்ஸின் பெற்றோர் நிகழ்வொன்றை Trenton, மிசிகனில் உள்ள தமது வீட்டில் நடத்தியதை தொடர்ந்தது  கட்டவிழ்த்து விட்டார்.

சிறுமி Kathleen இன் வீடு உள்ள அதே வீதியில் வசிக்கும் இந்தJennifer (ராட்சசி) தனது பிள்ளைகளுடன் அந்நிகழ்வுக்கு தானும் வரமுடியுமா என  Kathleen இன் பாட்டியான  Rebecca Rosea  ஐ sms மூலம்  கேட்டுள்ளார்.

ஆனால் சிறுமியின் பாட்டியான  Rebecca உடனடியாக பதில் எதுவும் அளிக்க வில்லை. அவர் அன்றைய நிகழ்வு தொடர்பான வேலைப்பளு காரணமாக பதில் அளிக்க முடியாமல் போயிருக்கலாம். இது அரக்கி Jennifer ஐ கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதை தொடர்ந்து வந்த இரண்டு வருடங்களையும் இந்த குடும்பத்தை பழி வாங்கும் முகமாக செலவழித்துள்ளார்.

சிறுமி Kathleen பற்றி கூறக்கூடிய ஒரு விடயம் நெஞ்சை உருக்க கூடியது. அதாவது இச்சிறுமி degenerative brain disorder எனும் நோய் உடையவர். இந்நோய் வந்ததால் மரணம் என்றநிலையில் தனது மரணத்துக்கான நாளை எண்ணிக்கொண்டு இருக்கிறார் . சிறுமி தனது நோயின் இறுதி கட்டத்தி இருக்கிறார். சிறுமியின் தாய் கூட இதே நோயால் சில காலத்தின் முன்பு இறந்து போனது குறிப்பிடக்கூடிய விடயம்.

ஒரு சாதாரண இரக்க குணமுள்ள பெண் என்றால மரணிக்கும் நிலையில் சிறமி உள்ள இந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்திருப்பார். ஆனால் Jennifer  தான் அரக்கியாச்சே. இவர் என்ன செய்தார் என்றால் facebook  இல் ஒரு page  ஒன்றை உருவாக்கி சிறுமியினதும் தாயினதும் படங்களை போட்டு அவர்களை மனம் நோகடிக்க கூடிய வகையில் அந்த page ஐ பயன்படுத்தினார். அதில் ஒரு படம் சிறுமியின் குறுக்காக எலும்புகள் உளது போல உள்ளது. (அபாய எச்சரிக்கை சின்னம் போல). சிறுமியின் தாய் ஒரு சூனிய காரனுடன்  கட்டி பிடித்துக்கொண்டு நிற்பது போலவும் ஒரு படத்தை அந்த page இல் upload  பண்ணி உள்ளார். அது மட்டும் இல்லாமல் தனது கணவன் Scott  உடன் சேர்ந்து சிறுமியின் வீட்டுக்கு முன்னாள் ஒரு truck ஒன்றை நிறுத்தி விட்டு homemade coffin ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் பரவிய உடன் ஆத்திரமுற்ற பலர் Jennifer  இக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர். வீடு கல் வீச்சு , முட்டை வீச்சு இக்கு உள்ளானது. தினமும் கொலை மிரட்டல்களை எதிர் நோக்கினர். நிலைமை மோசமாவதை கண்ட கணவனும் மனைவியும் பீதி கொண்டனர்.

Jennifer  இன் கணவன் உடனடியாக மன்னிப்பு கோரினான் நடந்த எல்லாவற்றுக்கும்.  சிறுமியின் வீட்டு முனனால் நடத்திய வியாபாரத்தை கை விட்டனர். சிறுமியின் குடும்பத்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகி கொண்டனர்.
 
ஆனால் Jennifer   குடும்பத்துக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் தொடர்கின்றன. ஒரு இறந்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி சிறுமியை கொடுமை படு தியவர்களின் வீடுக்கு கல் எறிவது மட்டும் அவர்களுக்கு வழங்கப்படும் போதுமான தண்டனை அல்ல.

சிறுமிக்கு ஆதரவான facebook  group  
http://www.facebook.com/group.php?gid=123801807673623#!/group.php?gid=123801807673623

jennifer இக்கு எதிரான  facebook  group 
http://www.facebook.com/group.php?gid=101871706546156

9 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

மனிதரில் தான் எத்தனை வகை....

வெறும்பய said...

இந்த சின்ன உலகத்தில் தான் எத்தனை விதமான மனிதர்கள்..

asiya omar said...

கொடிய மனிதர்கள் எத்த்னை விதமாய் வளம்வருகிறார்கள்.ரொம்ப உஷாராக இருக்கணும் போல.

அன்னு said...

ஹ....இப்படியும் நடந்து கொள்ள முடிகிறது ஏற்கனவே குழந்தைகளைப் பெற்ரிருந்தும்....இவளெல்லாம் தாயா? வெட்கக்கேடு!!

பார்வையாளன் said...

மிருகங்கள் கூட இப்படி நடந்து கொள்வதில்லை

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

nis said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்

ம.தி.சுதா http://mathisutha.blogspot.com/

வெறும்பய http://verumpaye.blogspot.com/

asiya omar http://asiyaomar.blogspot.com/

அன்னு http://mydeartamilnadu.blogspot.com/

பார்வையாளன் http://pichaikaaran.blogspot.com/

Post a Comment

Related Posts with Thumbnails