உங்கள் வீட்டில் பப்பி உள்ளதா?நிச்சயம் இதை படியுங்க.....

Share
நாய்கள் பொதுவாக நன்றாக உண்ணக்கூடியவை.. ஆனால் வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் நாய்கள் செல்லம் கூடி(கொழுப்பு)சாப்பிட அடம்பிடிக்கும் அப்படிப்பட்ட உங்கள் செல்லபிராணி நாயை எப்படி உங்க்கள் வழிக்கு கொண்டுவருவது என்பதற்கான சில டிப்ஸ் இந்த பதிவில் வழங்கப்படுகிறது.

முதலில் பிராணியின் உடல் சார்ந்த நோய்கள் குறிப்பாக சமிபாடு சிக்கல் இருந்தால கண்டுபிடித்து சிகிச்சை அளியுங்கள். மிருக வைத்தியர் உங்கள் செல்லப்பிராணி உடல் நலம் தொடர்பாக திருப்தி கொள்வாரானால் கீழ்வரும் முறைகளை பின்பற்றி பாருங்கள்
1  )விசேட விருந்தை  நிறுத்துக - நீங்கள் இடைக்கிடையில் வழங்கும் விசேட உணவால்( இறைச்சி  கறி)  உங்கள் பப்பி தனது வழமையான உணவை இந்த விசேட உணவுடன் ஒப்பிட்டு பார்க்க தொடங்கி இந்த சுவைக்கு அடம் பிடித்து தனது வழமையான உணவை புறக்கணிக்கும்.

2 )அளவான உடற்பயிட்சி - உங்கள் பப்பியுடன் மாலையில் சிறிது நேரம் செலவிடுங்கள். அது விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு உதவி செய்யுங்கள். இது அதற்கு  பசி ஏற்படுத்த உதவுவதுடன் அதன் உடலை ஆரோக்கியமாக பேண உதவும்.

3 )கருத்தடை - செல்லப் பிராணிக்கு இது தொடர்பான சிகிச்சை மேற்கொள்வது வருடம் முழுதும் குழப்படியில்லாம சமத்தாக சீரான முறையில் உணவுவுன்னும். இது மேலும் பல நன்மைகளை ஏற்படுத்தக்கூடியது

4  )அமைதியான சூழல் - உங்கள் பப்பி சாப்பிடும் இடம் அமைதியான இடமாக இருக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் , ஏனைய நாய்கள் தொந்தரவற்ற சூழலாக இருப்பது நன்று.

5 )அடிக்கடி வையுங்கள்  - சிறிய சிறிய அளவில் தினமும் மூன்று நான்கு தடவைகள் அவரின் அன்றைய உணவை கொடுங்கள்.

6 )அன்பாக உணவு - உணவு கொடுக்கும் நேரத்தில் சுமூகமான உறவை பேணுங்கள். அவர் தன்னை நீங்கள் மரியாதை இன்றி , தண்டிக்கும் முகமாக நடத்துகிறீர்கள் என்று நினைத்தால் அன்றைய சாப்பாடு அம்பேல் தான்.

7 )விரும்பிய நேரம் - ஒவ்வொரு நாயும் குறிப்பிட்ட ஒரு நேரம் உண்பதில் அதிக நாட்டம் செலுத்தும். சில காலை சில மதியம். சில இரவு.  உன்கள் பப்பி உணவு உண்ண விரும்பும் நேரத்தை கண்டு பிடியுங்கள்.

8 )அப்போதும் முடியவில்லையானால் உங்கள் உணவை(இறைச்சி  கறி) சிறிது கலந்து கொடுத்து பாருங்கள்.ஆனால் இது தற்காலிகமானது. அனெனில் அவருக்கு காலப்போக்கில் இதுவும் சலித்து விடலாம்


செல்லப்பிராணி நாய்க்கு அளவான பொருத்தமான உணவு கொடுத்தல் தான் அதன தேக ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி. இல்லாவிடின் நிறை குறைந்த ஒன்றாகி விடலாம் அல்லது எஜமான் கொடுக்கும் நொறுக்கு தீனி சாப்பிட்டே பண்ணிக்குட்டியாகி விடும். நிறை குறைந்த பிராணி ஈரல,சிறுநீரக,தோல் வருத்தங்களுக்கு உள்ளாகும். பன்னிக்குட்டி போல் நிற்கும் பப்பி இதயம் தொடர்பான் நோயதாக்கங்களுக்கு ஆளாகும்.

எனவே உங்கள் செல்லப்பிராணி பப்பியின் உஅனவு தொடர்பாக கவனம் எடுத்தால் அதுவே உங்கள் செல்ப்பிராணி உங்கள் மேல் கொண்ட அன்புக்கு நீங்கள் செய்யும் நன்றி கடன்.

ரகசியம் - இது ஒன்னுமே சரி வரல என்று வச்சு கொள்ளுங்களேன் இப்படி பண்ணுங்க. சாப்பாடு வைக்க முதல் உணவு தட்டை உங்கள் முகத்துக்கு கிட்டே கொண்டு சென்று "ஆஹா என்ன  ருசி ஆகா " என்று சொல்லி சாப்பிடுவது போல பாவ்லா பண்ணுங்க...... முக்கியமா உங்களை யாரும் பார்க்காம பாத்து கொள்ளுங்க உங்க ப்பிய திவிர... அது பாவம் வாயில்லா ஜீவன்...  போட்டுகுடுக்கவா போகுது....

2 comments:

இளங்கோ said...

Nice one. Thanks

எஸ்.கே said...

நல்ல கட்டுரை! நன்றிங்க!

Post a Comment

Related Posts with Thumbnails