இன்றைய அவசர உலகத்தில் கடனட்டைகள் அத்தியாவசிய தேவையும் பாதுகாப்பானதும் கூட. தவிர்க்கப்பட முடியாததும் கூட. அன்றாட வருமானம் உள்ளவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை கடனட்டைகள் பரந்து கிடக்கின்றன.ஆனால இங்கு அலசப்போவது சாதாரண மனிதர் களின் கடனட்டை பாவனை பற்றி.
காலை சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ கடன் அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கோல் வரும். சரி ஆசைப்பட்டு அதை நாமும் பெற்று கொண்டால் சிக்கல் இங்கு தான் தொடங்கும் நாமும் குஜாலா செலவழித்து விட்டு திக்கு முக்காடுவோம். அப்போது தான உங்கள் இதைய துடிப்பை அறிந்தவர்கள் என்று சொல்லி அட்டைய தந்தவர்கள் உங்கள் இதைய துடிப்பை நிறுத்த கூலிபடைய அனுப்பு வார்கள். அது தினமும் காண்கிற ஒன்று.
இது போன்ற அவமானம் எல்லாம் கௌரவமான குடும்பத்தை சேர்ந்த வர்களுக்கு தேவையா. அதற்காக இந்த அட்டை எல்லாம் வேண்டாம் என்றால் "தக்கன பிழைத்தல்" என்ற டாவின்சி கோட்பாடுக்கு மைய காணாமல் போக வேண்டியது தான். ஆகவே எப்படி தந்திரோபாயமான கடனட்டை பயன்பாடு குறித்த சில டிப்ஸ்
1 )கடனட்டைகளின் எண்ணிக்கை
எத்தனை கடன் அட்டைகள் வைத்திருக்கிரீர்கள் என்பது தான் முக்கியம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகளை வைத்திருப்பது சகஜம். ஆனால் அதற்கு மேல் வைத்திருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும். ஏனெனில் எந்த அட்டைக்கு எவ்வளவு கடன் எந்த திகதிக்கு முதல் கட்டவேண்டும் போன்ற விடயங்களை கையாளவது கடினம்.
2 )உச்ச கடன் எல்லை
உங்கள் கடனட்டையின் உச்ச கடன் அளவு சாதரணமாக இருத்தல் வேண்டும். இது பணத்தை கம்பெனிக்கு மீள செலுத்துவது சுலபம். அதே சமயம் தேவையற்ற செலவு செய்தல் குறையும். சிறிய கடன் எல்லை கொண்ட அட்டையை பாவிப்பது பொருட்களை வாங்கும் போது சுதந்திரமாக இருக்க முடியாது என்று நினைப்பது தவறு.
3 )குறித்த பொருட்களுக்கு மட்டும்
கடனட்டையை எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு பயன்படுத்தாமல் சில பொருட்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். அதற்காக கடனட்டை பாவித்து வாங்கும் பொருட்களின் லிஸ்ட் ஒன்றை நிர்ணயிக்க வேண்டும். அந்த லிஸ்ட் இல் இல்லாத பொருட்களை வாங்க கடனட்டையை பாவிக்க கூடாது.
4 )பணத்தை பாவியுங்கள்
இயலுமான வரை ஒரு பெரிய தொகைக்கு பேர்ச்சஸ் பண்ணும் போது பணத்தை பாவிப்பது தேவையற்ற சுமையை குறைப்பதோடு கடனட் டையில் செலவளிக்கப்பட்ட அளவினை குறைந்த அளவில் பேனா உதவும். அப்படியான நேரம் கடனட்டையை வீட்டில் விட்டு செல்லுங்கள். இது நல்ல பயனளிக்கும்.
5 )கையில் வைத்திருக்க வேண்ட்டாம்
எபோதும் கடனட்டையை போகும் இடம் எல்லாம் உங்கள் பக்கெட் இல் கொண்டது செல்ல வேண்ட்டாம். ஒன்று செய்யலாம் கடனட்டையை உங்கள் அம்மாவிடம் கொடுத்து வைக்கலாம். இன்று கடட்டை நிச்சயம் தேவைப்படும் எனும் போதுமட்டும் அதை அம்மாவிடம் இருந்து வாங்கி செல்லுங்கள்.
6 )ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்ட்டாம்
வியாபார நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்யும் offers உடன் உங்கள் கடனட்டையை இலக்கு வைத்து அணுகுவார்கள். அவர்களுக்கு நோ சொல்ல பழகுங்கள். சொல்லுவார்கள் TV ஒன்றை வாங்குங்கள் வட்டி இல்லை ஒரு வருட தவணை முறையில் கட்டலாம். இவை இறுதில் உங்களை கடனாளியாக்கி விடும்.
7 )நேரத்துக்கு கடனை செலுத்தி விடுங்கள்
நீங்கள் செலவழித்த பண தொகையை நேரத்துடன் திருப்பி செலுத்த கற்றுகொள்ளுங்கள். இது கட்டுவதற்கு சுலபமாக இருக்கும். இல்லா விடின் இறுதியாக பெரிய தொகை சேர்ந்து கட்டவே முடியாத அளவுக்கு போய் பெரிய கிக்களில் உங்களை மாட்டி விடும். எனவே கடனை ஒவோருமாதமும் செலுத்த வேண்டிய ஒரு திகதியை நிர்ணயியுங்கள்.
8 comments:
Good tips.
Thanks.
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
இளங்கோ
சிறப்பான பயனுள்ள தகவல்கள்! அருமை! வாழ்த்துக்கள்!
நீங்க சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை..
நிறைய பேர் கடனட்டை வைச்சிருக்கறதை ஒரு பெருமையாக நினைக்கறாங்க.. ஆனால் டியூ மிஸ் ஆயிடுச்சுனாதான் தெரியும் சங்கதி..
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
நல்லா இருக்கணும்னா ஒன்னோட நிறுத்திக்கணும் (கடன் அட்டை) இல்லன்னா கஷ்டம் தான்
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
எஸ்.கே
பாபு
மனசாட்சியே நண்பன்
அருமை ..
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
புதிய மனிதா
Post a Comment