நிறுவனங்கள்,அரசுகளுக்கெதிரான தாக்குதல்கள்

Share
பலவகைப்பட்ட கணனிகள்,கணணி வலைப்பின்னல்கள் சார்ந்த தாக்குதல்கள் மலிந்து கிடக்கும் நேரத்தில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிரான cyper தாக்குதல்கள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படிப் பட்ட தாக்குதல்களில் மிக பிரபலமான Top 10 தாக்குதல்களை சுருக்கமாக பார்ப்போம்.

1 .Electronic Disturbance Theater
Zapatista என்ற மெக்சிக்கோ இல் இயங்கி வந்தத போராளி அமைப்புக்கு ஆதரவாக1998 இல் EDT வடிவமைக்கைப்பட்டு பெண்டகன்,வெள்ளை மாளிகை,அமெரிக்க பாடசாலைகள்,மெக்சிக்கோ ஜனாதிபதி அலுவலகம் ,பங்கு பரிவர்த்தனை நிலையம்  இலக்கு வைத்து தாக்கப்பட்டது.  இரு நாள் தொடர்ந்த தாக்குதலில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 600,000 தடவைகள் என்ற விகிதத்தில் இலக்குவைக்கப்பட்ட servers தாக்கபட்டுக்கொண்டிருந்த்தது.

2 .The Internet Black Tigers (Sri Lanka)
 
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலை புலி போராளி அமைப்பு Seoul,Ottowa இல் இருந்த Sri Lankan consulates மீது DOS தாக்குதலை (Denial Of Serivice ) மேற் கொண்டது இத்தாக்குதல் அதிக மின்னஞ்சல்களை காட்டாற்று வெள்ளமாக அனுப்பி  servers ஐ முடக்கியது. அந்த மின்னன்சல்கள்   கொண்டிருந்த தகவல் இது தான் "நாங்கள் இணையதள கரும்புலிகள், நாங்கள் உங்கள் தொடர்பாடலை குழப்ப இந்த தாக்குதலை மேற்றகொள்கிறோம்".

3 .Hong kong Blondes
 
இது 1999 இல் மூன்று  கண்டங்களில் பரந்து இருந்த சீன ரகசிய மாணவர் வலையமைப்பினால் சீனாவால் மேற்கத்தைய இணைய தளங்களை  பார்க்க முடியாதவாறு ஏற்படுத்தப்பட்டிருந்த பெரும் சுவர் என வர்ணிக்கப்படுகிற firewall கட்டமைபை உடைக்குமாறு cyper attack மேட்கொள்ளப்பட்டது.சீனாவின் தொடர்பாடல் செய்மதிகள் கூட செயலிழக்க செய்யப்பட்டது. இது சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தாக்குதலாக பார்க்கப்பட்டது.

4 . WANK worm 


Oct. 16, 1989 அன்று cold war நிலவிய காலபகுதியில் எந்த நேரமும் அணு ஆயுத யுத்தம் வெடிக்கும் என்று இருந்த சமயம் NASA இல் இருந்த கணனிகள் WANK worm  தாக்குதலுக்குள்ளாகின.இதன் விளைவாக NASA கணணி வல்லுனர்கள் கணணிகளை log in செய்த பொது ""Your computer has been officially WANKed. You talk of times of peace for all, and then prepare for war," and "Remember, even if you win the rat race, you're still a rat." என்ற தகவல் கணணி திரைகளில் தோன்றின

5 .Net Strike Attack
 
December 21, 1995 இல்  Strano Network  என்ற அமைப்பினால் பிரெஞ்சு அரசாங்கத்தின் அணு,சமூக கொள்கைகளுக்கு எதிராக French அரசாங்க இணையதளங்களுக்கு எதிராக இத்தாக்குதல் அமைந்தது. உலகளாவிய ரீதியில் இணையதள பாவனையாளர்கள் இலக்கு வைக்கப் பட்ட தளங்களுக்கு விசிட் பண்ணி தொடர்ச்சியாக refresh பண்ணுமாறு கேட்கப்பட்டனர். இதன் விளைவாக அதிகரித்த traffic இக்கு ஈடு கொடுக்க முடியாமல் குறிப்பிட்ட இணைய தளங்கள் முடங்கின.

6 .UrBaN KaOs
 
June 30th, 1997,இல் Portuguese hacking group UrBaN Ka0s ஆல் இந்தநோஷியா அரசாங்க வெளிவிகார அமைச்சினதும் ஏனைய 25 ராணுவ அரசாங்க கணனிகள் இணையதளங்கள் தாக்கப்பட்டன. இது உலகின் கவனத்தை இந்தநோசிய அரசாங்கத்தால் தசாப்தங்களாக துன்பபட்டு கொண்டிருந்த தீமோர் மக்களின் பிரச்சனை மீது திருப்பவே மேற் கொள்ளப்பட்டது .இது முதலாவது மிக பெரியளவில் நடந்த கக்கிங் நடவடிக்கை என கருதபடுகின்றது.

7 .Toy Wars
 
1999 இல் etoys என்ற இணைய நிறுவனம்(etoys.com )இவர்கள் வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முதலே etoy.com என்ற தளம் வைத்திருந்தவர்களுக்கு எதிராக வழக்கு போட்டு etoy .com   ஐ முடக்கினர் Nov29 இல். அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்த etoy .com உரிமையாளர்கள் etoys.com தளத்தை Dec. 15-25 கிறிஸ்மஸ் காலத்தில் தாக்கினர். இது நிறுனத்தின் stcok இருப்பை குறைத்து காட்டுவது போல் இருந்தது. அதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நிறுவனம் மூடப்பட்டது

8 .The World 's Fanatabulous Defacers
 
2000 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை 400  இக்கும் மேற்பட்ட இணைய தளங்களை ஊடுருவி தமது நோக்கத்தை நிறைவேற்றியது. இந்த attack  ஊடுருவிய இணையதளங்களில் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரும் வகையிலான  flash videos, audio files என்பவற்றை இணைத்தது.இந்த பாக்கிஸ்தான் அமைப்பு 2002 இல் தனது நடவடிக்கையை நிறுத்தியது.Cricketbulls.com என்ற இந்திய தளமும் பாதிக்கப்பட்டதில் ஒன்று.

9 .Project   Chanology
 
Project   Chanology  ஒரு எதிர்ப்பு அமைப்பு Church of Scientology இன் நடவடிக்கைகளுக்கு எதிரான. இது பெரிய அளவில் ஒழங்கு படுத்தப்படாத ஒரு இணைய அமைப்பு, இது 2008 ஆரம்பத்தில் தொடங்கியது Church of Scientology  இன் நடவடிக்கைகளை குழப்பும் வகையிலான Denial Of Serivice Attack போன்ற செயல்கள் தான் இந்த அமைப்பின் நடவடிக்கை. Church of Scientology  தற்காப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 .Operation Payback is A Bitch
 
இது சில கிழமைகளுக்கு முதல் மீண்டும் அவதானிக்கப்பட்டது. இது RIAA (Recording Industry Association of America) and MPAA (Motion Picture Association of America) இன் Torrent Sites கலை முடக்கும் நடவடிக்கைகளுக்கு எதரொலியாக இருக்கிறது. இந்த நிறுவனங்களின் இணையதளங்கள் பல மணித்தியாலங்களாக முடக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் காப்புரிமையை மீறும் நபர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதில் தாக்குதலே இது.
 

2 comments:

எஸ்.கே said...

இத்தனை நிகழ்வுகளா! தகவல்களுக்கு நன்றி!

nis said...

வருகைக்கும் கருத்திற்கும் வாக்களித்தமைக்கும் நன்றிகள்

எஸ்.கே

Post a Comment

Related Posts with Thumbnails