நெடுஞ்சாலை மர்மங்கள்

Share

1 .North Youngas Road , Boliviya
35-mile நீளமான இந்த சாலை “Road of Death,” என அழைக்கப் படுகின்றது.வருடத்துக்கு நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ காராணம் மூடு பனி, நீர்வீழ்ச்சிகளின் சாரல்கள், திடீர் திருப்பங்கள். பிரதேச வனப்பு கொள்ளை கொள்ள கூடியது .

2 .Lena Highway , Russia
"நரகத்திலிருந்து நெடுஞ்சாலை" என அழைக்கபடுகின்ற இது ஆற்றுக்கு சமாந்தரமாக செல்கின்றது. சாலை சேறாகி விடுவதால் சிக்கல்.ஆனால் பனி காலத்தில் ஐஸ் கட்டிகளின் மீது வாகனம் ஓட்டுவது சுலபம். 

3 .Sino -Nepal Friendship Highway
கடல் மட்டத்தில் இருந்தது 4,000 மீட்டர்கள் உயரத்தில் உள்ள இந்த சாலையின் இரு மருங்கிலும் உள்ள வனப்பு பலரை இங்கு அழைத்தாலும் மயிர் கூச்செறியும் மண் சரிவுகள் தான் கிலி ஏற்படுத்துகின்றன.

4 .Stelvio Pass Road , Europe
1820 and 1825 இடையே கட்டப்பட்ட இது கடல் மட்டத்தில் இருந்தது 2,758 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது.180 பாகைகள் கொண்ட வளைவுகள் தான் பல மரணங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

5 .Sichuan - Tibet Highway , China
2,412 நீளமான இந்த சாலை 14 பெரிய மலைத்தொடர்கள,ஆறுகள் காடுகள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. பயணிப்பவர்களுக்கு மண் சரிவு  பாறைகளின் உடைவு ,ஆனால் நல்ல சூழல் காத்திருக் கின்றன. 

6 .Patiopoulo - Perdikaki Road , Greece
ஒடுக்கமான இந்த சாலையின் இருமருங்கிலும் உள்ள கூரான கற்கள் வாகன டயர்களுக்கு சேதம் விளைவிக்க காத்து இருக்கின்றன. சாலையின் வளைவுகளில் தவறும் வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன.

7 .Trollstigen , Norway
1930 இல் மன்னன் ஒருவனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சாலை Norway இன் வட மேற்கு பகுதியில் அமைந்த்துள்ளது. ஏராளமான உல்லாச பயனிகள் தமது உயிரை துச்சமாக மதித்து இவ்விடத்தை காண வருகின்றனர்.

8 .Col de Turini , France
தெற்கு பிரான்ஸ் இல் உள்ள இந்த சாலையின் மிக மோசமான வளை வுகள் தான சாரதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்கின்றன. ஒருபாகம் பாறை தொடரும் மறு பக்கம் ஆறும் உள்ளது.

9 .Luxor-al-Hurghada Road, Egypt

Egypt இல் உள்ள புராதன நகரங்களான Luxor and Hurghada ஐ இணைக்கும் நெடுஞ்சாலை. பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சம் கடத்தல்காரர்கள்,  ஏனைய வாகனங்களை இனம்  காண முடியாது என்பது தான் சிக்கல்.
 
10 .Leh-Manali Highway, India

479Km நீளமான  இது ராணுவத்தின் பராமரிப்பில் உள்ளது.June to August வரையே பாவனைக்கு திறந்து விடப்படும். காரணம் மிகுதி நாளில் பயங்கர பனிப்பொழிவு,தாள் காற்று அழுத்தம் இருக்கும் என்பதால்.

5 comments:

எஸ்.கே said...

புதிய பல தகவல்கள் நன்றி!

Philosophy Prabhakaran said...

தகவல்களுக்கு நன்றி... படங்களுடன் வெளியிட்டது இடுகைக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது...

அன்பரசன் said...

very nice..

ம.தி.சுதா said...

எனக்க Sino -Nepal Friendship Highway தான் ரொம்பப் பிடிச்சிருக்கு.. காரணம் என்போன்ற ஓட்ட வீரருக்க நல்ல உடற்பயிற்சி தரக் கூடிய இடமாகும்...

nis said...

நன்றி

philosophy prabhakaran
அன்பரசன்
ம.தி.சுதா

சுதா உங்களின் ஓட்ட பயிற்சி தொடர வாழ்த்துகள்

Post a Comment

Related Posts with Thumbnails