சைத்தான்களின் ஆட்சியிலே

Share
 
சண்டை,மரணம் எவ்வளவு கொடூரம் எனபது தெரியும்.ஆனால் இன்றும் உலகம் முழுதும் நடக்கும் சண்டைகள் மனித வாழ்க்கையே சிதைத்துக் கொண்டு உள்ளன.அப்படிப்பட்ட யுத்தத்தின் கோர முகத்தை காட்டக்கூடிய பிரபல பத்து படங்களும் குறிப்புகளும்.  

1.The Legendary Kiss in Times Square, V-J Day, 1945
 

August 2nd 1945 இல் எடுக்கப்பட்ட படம்.இந்த படம் ஜப்பான் மீதான வெற்றியையும் உலகப்போர் 11 இன் முடிவையும் அடையாளப் படுத்தக் கூடிய ஒரு படம்.ஜப்பான் மீதான வெற்றியை ஜனாதிபதி Truman  அறிவித்தபோது பொது Times Square இல் நடந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் குறித்த ஒரு வீரர் கண்ணில் கண்ட அத்தனை பெண்களையும் (சிறுமியோ,கிழவியோ) கட்டிபிடித்து மகிழ்ச்சியை தெரிவித்த பொது எடுக்கப்பட்ட படம்.

2.The Most Reproduced Image of All Time, 1945

 

1945 இல் அமெரிக்க வீரர்களால் ஜப்பானில் உள்ள Jima என்ற இடத்தில் அமெரிக்ககொடியை ஏற்றிய போது எடுக்கப்பட்டது.ஜப்பானில் அமெரிக்கா கைப்பற்றிய  முதல் பிரதேசம் Jima என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தை கைப்பற்ற 4 நாட்கள் எடுத்ததுடன் சண்டை 1 மாதம் நீடித்தது. இவ் ஐந்து வீரர்களில் 3 வீரர்கள் சண்டையில் பின் இறந்தனர். முதலில் இவ்விடத்தில் ஏற்றப்பட்ட kodi சிறிதாக இருந்தததால் இக்கொடி ஏற்றப்பட்டது.

3.Burning Alive in Vietnam, 1972

 

1972 இல் தென்வியட்நாமிய ராணுவம் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து வட வியட்நாமிய கட்டுப்பாடுக்கு கீழ் இருந்த Trang பங் என்ற கிராமத்தில் நேப்பிய குண்டுகளை வீசியது.அதன் போது உயிருடன் எரிந்த நிலையில் ஓடி வரும் சிறுமியையே படத்தில் கானனாம். அப்போது ஒன்பது வயதாக இருந்த இந்த சிறுமி 14 மாதங்கள் சிகிச்சையின் பின் மீண்டு 1997 இல் ஒரு அறக்கட்டளை அமைத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்.

4.Saddam Hussein's Statue Toppled in Baghdad, 2003

 

சதாம் ஆட்சியில் இருந்த போது அவர் தொடர்பான படங்கள் சிலைகள் ஈராக் முழுவதும் உள்ள இடங்கள் நாணய தாள்களில் இருந்த்தது.2003 இல் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவரின் உருவ சிலை ஒன்று வீழ்த்தப் படுவதை காட்டும்  இந்த படம் “Operation Iraqi Freedom” என்ற அமெர்க்காவின் சண்டை வெற்றி அடைந்ததையும் தீவிரவாதம் அழிந் ததையும் காட்டுவதோடு இன் நிகழ்வு உலகம் முழுது நேரடி ஓளிபரப்பு செய்யப்பட்டது.


5.General Nguyen Ngoc Loan Executing a Viet Cong prisoner, Vietnam, 1968

 

General Nguyen Ngoc Loan, the Republic of Vietnam’s Chief of National Police  என்பவர் Nguyen Van Léம என்ற Vietcong படைவீரரை சுடுவதை காணலாம். சுடப்பட்டவர் சுடுபவரின் உறவினர்கள் உட்பட 35 போலிஸ் வீரர்களின் இறந்த உடல்கள் கிடந்த குழிக்கு அருகில் நின்றதால் அவர்களின் மரணத்துக்கு காரணமான சந்தேக நபராக அடையாளங் கானப்பட்டு  இந்த படத்தில் நடக்கும் சமபவம் காரணமாய் அமைந்த்தது.

6.Falling Soldier, Spanish Civil War, 1936

 

“Loyalist Militiaman at the Moment of Death” எனபது தான் இந்த படத்தின்  உத்தியோக பூர்வமான பெயர். ஸ்பெயின் இல் நடந்த சிவில் யுத்தத்தின் போது Federico Borrell கார்சியா என்ற நபர் (panish Republican and anarchist படைவீரர்) படத்தில் வீழ்வதை காணலாம். அதாவது ஒரு போர் வீரன் குண்டடி பட்டு விழும் இறுதி தருணங்களை காட்டக்கூடிய இந்த படம் மிக பிரபலமான ஒன்று. ஆனாலும் இந்த படம் ஜோடிக்கப்பட்ட அதாவது நடிக்கப்பட படம் என கூறுவோரும் உண்டு.

7.Omaha Beach, D-Day 1944

 

உலகப்போர் இரண்டின் போது June 6th 1944 இல் Nazi கட்டுப்பாட்டில் இருந்த  Normandy இல் ஊடுருவும் அமெரிக்க இங்கிலாந்து படையினரை காட்டும் இந்த படம் ஹங்கேரிய நாட்டு Robert Capa என்ற புகைப்பட பிடிப்பாலரால் எடுக்கப்பட்டது.Omaha beach இல் படையினர் கடும் பீரங்கி சுடுதல்களுக்கிடையில் முன்னேறும் காட்சியை காட்டும் படமாக இது அமைகிறது.ஆனால் கமராவை ஆட்டி இப்படி ஒரு தோற்றத்தை கொடுத்ததாக சொல்வோரும் உண்டு.

8.Civilian Resistance, 1943

 

1940 இல் Naazi கடுப்பாடில் இருந்த Warsaw ghetto எனற இடத்தில் 400 000 இற்கும் மேற்பட்ட யூதர்கள் மதில் முள்வேலிகள் உள அடைக்கப்பட்ட போது 1943 இல் யூதர்கள் ஒரு கலவரம் (world-famous Warsaw resistance எப்போர்ட்) செய்த  பின் நாசி படையினரால் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட தருணத்தை   காட்டும் இந்த படம் ஒரு  நாசி வீரரால் எடுக்கப் பட்டது.இதன்போது 13000 பேர் கொல்லப்பட்டனர்.


9.Dr Fritz Klein stands in a mass grave in Belsen

 

நாசிகளால் கொல்லப்பட்ட  யூதர்களின் பிண குவியல்களின் மீது நின்று Dr Fritz Klein என்ற வைத்தியர் போஸ் கொடுப்பதை காணலாம். இவரின் வேலை விஷ வாயு கூடத்துக்கு ஆட்களை அனுப்ப தெரிவு செய்வது தான்.கைதிகள் அதிக வேலை செய்ய பணிக்கப்படனர் முடியாத வர்கள் வாயு கூடத்துக்கு அனுப்பப்பட்டனர். யூதர்கள் , ஊன முற்றோர் ,ஜோகொவாவின் சாட்சிகள் , ஓரின சேர்க்கை யாளர்கள்,அரசியல் எதிரிகள் கைதிகள் ஆயினர்.

10.Fat Man Bomb, Japan, 1945

 

August 9th, 1945. உலக சண்டை  இறுதி கட்டத்தின் போது அமெரிக் காவினால் ஜப்பான் இல் வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதல் .அப்போது இந்தப்படம் அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது .ஆனால் இதன் பின்னணியில் நிகழ்ந்த கொடூரத்தின் உண்மை நில வரங்கள் வெளி வர தொடங்கியபோது இந்த படம் யூத்ததின் உண்மை யான கோர முகத்தை பிரதிபலிக்கும் படமாக மைந்து விட்டது.

9 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாம் கொடுமையான படங்களா இருக்கே...

nis said...

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி நண்பர்

http://verumpaye.blogspot.com

ம் கொஞ்சம் கொடுமையாகதான் உள்ளது.

அழகி said...

சாரி பாஸ்.. 4 படங்களுக்கு ​மேல என்னால பாக்க முடியல.. ​ரொம்ப ​​கொடு​மையா இருக்கு.

Anonymous said...

touchy

அன்பரசன் said...

படங்கள் கொடுமைங்க.

சசிகுமார் said...

அப்பா படங்கள் கொடுரம்

nis said...

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி

அன்பரசன்
சசிகுமார்

ம் கொடுமையாகதான் உள்ளது

புதிய மனிதா. said...

horror வாரமா ...

abdul said...

end of the world is very near

Post a Comment

Related Posts with Thumbnails