கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள

Share
 
உங்களுக்கு என்று சில கனவுகள் திட்டங்கள் எதிர்கால இலக்குகள் இருக்கும்.ஆனால் அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைப்பதற்கு உள்ளாகவே இவற்றுக்கெல்லாம் உலை வைக்குமளவுக்கு உங்கள் அருகில் உள்ளவர்கள் ஏன் உங்களை நேசிப்பவர்கள் கூட அறிவுரைகள் கூற தொடங்கிவிடுவார். ஏன்? உங்ககளில் கொண்ட அக்கறையா? அல்லது நீங்கள் அப்படியெல்லாம் சாதித்து விடுவீர்கள் என்ற கடுப்பிலா?

உண்மையில் மேற்கூறிய எவையுமே இல்லை.உண்மை காரணம் உங்கள் திட்டங்கள் இலக்குகளை அவர்கள் புரிந்து கொள்ளாமையே. நீங்கள் அடைய எண்ணியுள்ள அந்த கனியை அவர்களால் பார்க்கமுடியாது.அது உங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும்.அவர்கள் உங்களை தோல்வியில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்கள்.அது உங்களை திட்டங்களை நனவா க்குவதில் இருந்து காப்பாற்றுகிறது(தடுக்கிறது)

"உங்கள் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது.எனவே மற்றவர்களின் திட்டங் களில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.அடுத்தவர்களின் எண்ணங் களுக்கு அமைய உங்கள் வாழ்க்கை இருக்க கூடாது.மற்றவர்களின் குரல் உங்கள் மனதின் குரலை மூழ்கடிக்க விட வேண்டாம். ஏனெனில் உங்கள் மனகுரலுக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று" இது Apple நிறுவன தலைவர் கூறியது.

அப்படி மற்றவர்கள் உங்களுக்கு தவறாக சொல்லக்கூடிய அறிவுரைகளை யும்,அது ஏன் தவறு என்பது பற்றியும் கீழே பார்க்கலாம்.

 
1.உன் கனவுகளை ஓரமாய் வை அதற்கு ஒரு காலம் வரும்.
 
இப்படி பொறுப்பற்ற விதமாக இருப்பதை தவிர உங்களது புது வாழ்கை அத்தியாயத்தின் முதல் நாளாக இன்றையநாளை அமைத்து கொள்ளுங்கள் .ஏனென்றால் இன்றைய நாள் மட்டுமே உறுதியாக உங்கள் கையில் உள்ள ஒன்று. நாளைய நாள் பற்றி யார் அறிவார்?வாழ்கையின் கோலங்கள் மாற கூடியது.எனவே நீங்கள் அறிந்த இன்றைய நாள் தான் உங்கள் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பிக்ககூடிய நல்ல தருணம்.

2 .ஜெஜிக்காவிட்டால் உனது வாழ்க்கையே பாழாகிவிடும்
 
இது முற்றிலும் தவறு. சரி நீங்கள் உங்கள் இலட்சிய பாதையில் இருந்து விலகி விடுகிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். ஆரம்பித்த இடத்துக்கே வந்து விடுங்கள் எல்லாம் பழைய நிலைக்கே வந்தது விடும்.உதாரணமாக தேர்தலில் அரசியல் வாதி தோற்று பெயர் நாறினாலும் அடுத்த தேர்தலுக்கு தயாராவது இல்லையா? அல்லது சொந்த வியாபாரத்தில் கவனம் செலுத்துவது இல்லையா?அது போலதான்.

3 .இன்றைய நாளை பார்த்துக்கொள்ளுவது தான் பாதுகாப்பு 
 
முன் எச்சரிக்கை என்பது புத்திசாலித்தனம் என்று அர்த்தப்படாது. அதில் தவறில்லை.ஆனால் முழு அளவில் கடைப்பிடித்தால் அறையை பூட்டி விட்டு படுத்துக்கொள்ள வேண்டியது தான்.வெளியே வர முடியாது. அத்துடன் உங்கள் கனவுகள்,இலக்குகள் ஏன் வாழ்க்கையே சூனியமாக தான் போய விடும்.எதிர்காலம் நோக்கிய சில ரிஸ்க் களை எடுக்கத்தான் வேண்டும். இன்றைய நாளை மட்டும் பார்த்துக் கொண்டால் நாளைக்கு ஒன்றும் புதிதாக பெற இல்லை.

4 .அது முடியாத காரியம் சாத்தியமற்ற வெறும் கானல் நீர்

 
ஒன்று முடியாத காரியமாகிறது எப்போது என்றால் நீங்கள் ஒன்றை முயற்சித்து பார்க்காதவரையில் தான்.சில முடியாத ஒன்றாக இருக்கிறது ஏனென்றால் ஒருவரும் அதை ஜெஜிக்கவில்லை என்பது மட்டுமே தவிர உங்களால் முடியாது என்பதில்லை. முடிவை நோக்கி உங்களை அர்ப் பணித்தால் நிச்சயம் முடிவை(வெற்றிய) அடையலாம்.ஒன்றை நிச்சயம் பெறமுடியும் என் தெரிந்த பின் செல்வதற்கு பெயர் கனவு அல்ல.அது எவரும் செய்யும் ஒன்று.

5 .சில அதிஷ்டசாலிகளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று

 
அதிஷ்டம் இருந்ததால் தான் அவர்கள் அப்படி முயன்று வென்றார்கள். நீங்களும் அவர்கள் வரிசையில் சேர போகும்  ஒருவர் தான்.அது உங் களை பொறுத்தது. நீங்கள் மட்டுமே  உங்கள் அதிஷ்டத்தை தீர்மானிக்க முடியும்.உங்களுக்கு அதிஷ்டம் உள்ளதா இல்லையா என மற்றவர்கள் நிரூபிக்க முடியாது. அம்பானி சாத்திரம் பார்த்துவிட்டா வியாபாரம் தொடங்கினார்?கஷ்டப்பட்டு ஜெஜித்தால் அவன் தான் அதிஸ்டக்காரன்

6 .நீ தோற்க வாய்ப்புள்ளது அது உனக்கு தேவையற்ற ஒன்று
 
தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என கூறுவார்.அதில் நிறைய பாடங்களை கற்க முடியும்.உதாரணம் எடிசன்.தோல்விக்கு பயந்தது ஒன்றும் செய்யாமல் இருப்பது தான் செய்யும் மிக பெரிய தவறு. தோல்வியை சமாளிக்க முடியாத ஒருவனால் நிச்சயம் வெற்றியபெற முடியாது பெற்றாலும் நிச்சயம் அதை தவற விடுவான்.பெரிய கொமபனி interview போனால் reject ஆவோம் என்பதற்காக போகாமல் இருப்பதா?

7 .லட்சியத்தை அடைய தேவையான வசதிகள் உன்னிடம் இல்லை

 
வசதி வாய்ப்புகள் என்பது தடையாக ஒருபோதும் அமைவதில்லை. ஆபிரஹாம் லிங்கன் ஏழையாக பிறந்தாலும் பல முறைகள் தேர்தலில் தோற்றாலும் ஜனாதிபதியாக வரவில்லையா.நம்மிடம் தெளிவான எண்ணம் திட்டம் இருக்கும் போது நிச்சயம் அதற்கான வழிகள்  இருக்கும் அவற்றை தேடுவதில் தான் கவனம் இருக்க வேண்டும். பல வெற்றி யாளர்கள் ஆரம்பத்தில் நம்மை விட மோசமான நிலையில் இருந்து தான் முன்னுக்கு வந்தவர்கள்.

8 .முதல் அடி வைக்க முதல் அதிகபணம் சேமிப்பில் இருக்க வேண்டும்
 
அதிக பணம் முக்கியமல்ல.திட்டம் தான் தேவை.முதலில் அன்றாட வாழ்கையை கொண்டு செல்ல தேவையான பணம்,ஏனையவை கணக்கிட்டு அதை தொடர்ச்சியாக பெறக்கூடியவாறு திட்டமிட்டு உறுதி செய்த பின்பு எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை நோக்கி சிறிது சிறிதாக அடி எடுத்து வைக்கலாம்.முதல் அடி தான் முக்கியம்.அளவல்ல. ஒரு வேலையில் இருந்து கொண்டே சொந்தமாக சிறிய அளவில் தொழில் தொடங்கலாம்.

9 .உதவி என்பது தேவையில்லை தனியாக ஜெஜிப்பது தான் நன்று

 
தேவையற்ற மனிதர்களுடன் கூட்டு சேர்வது நிச்சயம் எம்மை மழுங்கடிக் கதான் செய்யும். உங்கள் இலக்குகளை அடைய தனியே செயற்படுவதை விட  உங்களை விட உங்கள் துறையில் வல்லுனர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிச்சயம் அதீத பலத்தை பெறுவதுடன் இலகுவாக உங்கள் கனவுகள் நனவாகிகொண்டு வரும். உதவி இயக்குனர்  பெரிய இயக்குனர்  கீழ் இருக்கும் போது தான் அவரும் ஒரு பெரிய இயக்குனராய் வருகின்றார்.

10 .நீ நினைத்து பார்க்க முடியாத அதிக கடின உழைப்பு வேண்டும்
 
வாழ்க்கையின் வெற்றியின் ரகசியமே மனத்தால் விரும்பி கடினமாக உழைப்பது தான்.இப்படி செயற்படும் போது உங்கள் இலட்சியங்களை அடைவதட்கான் சரியான பாதையில் இலகுவாக சென்று கொண்டு இருப்பீர்கள். உதாரணமாக எதோ குப்பை கொட்டுகிறோம் எனும் அரச ஊழியர்களுக்கும்(சிலர்) அதேநேரம் கனவுகளுடன் நாள் முழுதும்  ஆர்வமாக கடினமாக உழைக்கும் IT துறையினருக்கும் உள்ள வேறு பாட்டை நீங்கள் காணலாம்.

"கனவு நனவாவது  என்பது எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கிறோம் என்பதை பொறுத்து தான் "

மேற்கூறிய விடயங்களை நீங்கள் ரசித்திருந்தால் அதை இன்ட்லி இல் ஒரு வாக்காக இட்டு அன்பாக இன்ட்லியில் தெரிவியுங்கள்.

2 comments:

Anonymous said...

மிக அருமையான தகவல்

jabar said...

மிக அருமையான தகவல்

Post a Comment

Related Posts with Thumbnails