ஆச்சாரமான மனிதர்களின் தில்லாலங்கடி அம்பலம்

Share

சைவ உணவு மட்டுமே உண்போர் பலர் உள்ளனர்.அதாவது மிருகங்களை கொன்று புலால் ருசிப்பதை வெறுப்போர்.ஆனால் இவர்களும் கூட மிருகங் களிளின் கொலையில் மறைமுகமாக சம்பந்தப்படுகின்றனர். அவற்றினை அவற்றிலிருந்து தயாரான பொருட்களை கையாள்கின்றனர். 
 
எனவே ஆச்சாரமான மனிதர் என்று எவருமே இங்கில்லை.அப்படிஅமைய காரண மாகும் உங்களது அன்றாட பாவனையில் உள்ள விலங்குப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிரபல 9 பொருட்களை பற்றி பார்ப்போம்.

1.Plastic Bags
 

அநேக பிளாஸ்டிக் விசேடமாக பொலித்தீன் பைகள் உருகி விடாமல் இருக்க 'slip agents' என்ற பொருள் சேர்க்கப்படுகிறது.இந்த பொருள் தயாரிக்க பயன் படும் பிரதான மூலப்பொருள் மிருகங்களின்  கொழுப்பு.

 


 2.Car And Bike Tires
 

வாகன சக்கரங்களில் உள்ள ரப்பர் வெயிலில் உருகாமல் திடமாக இருக்க விலங்குகளை அடிப்படையாக கொண்ட stearic acid, பயன்படுத்தப் படுகிறது.இல்லாவிடின் டயர் சிறிது வெப்பத்துக்கு கூட தனது வடிவத்தை இழந்து விடும்.

 

3.Glue in Wood Work and Musical Instruments
 

மரத்தளபாடங்களில்ஒட்டுவேலைக்கு, வயலின்,பியானோ போன்ற மர இசைக்கருவிகளின் ஒட்டு வேலைக்கு பல பசைகள் பயன்பட்டாலும் பிரபலமாக பயன் படும் பசை விலங்குகளின் தசை,எலும்புகளை கொதிக்கவிட்டு தயாரிக்கப்படுகிறது


4.Bio fuels
 

சீனி,மா என்பன Bio fuels இன் தயாரிப்பின் மூல பொருட்களாக அறியப் பட்டாலும் அண்மைக்காலமாக விலங்கு கொழுப்பின் பயன்பாடு அதிகரி க்கப்பட்டுள்ளது.உண்மையில் beef biodiesel , chicken biodiesel என்று தான் அழைக்கப்பட வேண்டும்.

 

5.Fireworks
 

டயர் உற்பத்தியில் பயன் படும் அதே விலங்கு  "stearic அசிட்" தான் பட்டாசுகளிலும் பயன்படுகிறது.பட்டாசுகளில் உள்ள உலோக துகள்கள் பளுதடையாமால் ( oxidation, அடையாமல்) அதிக காலம் இருப்பதற்கா க stearic அசிட் பூசப்படுகிறது.


6.Fabric Softener
 

ஆடைகளை துவக்கும் போது பயன்படுத்தப்படும் இதில் Dihydrogenated tallow dimethyl ammonium chloride,  என்ற பொருள் உள்ளது.இது செம்மறியாடு,குதிரை,மாடு என்பவற்றில் இருந்து எடுக்கப்பட பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாராகிறது.

 

7.Shampoo & Conditioner
 

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்போ இல் இருபதுக்கும் மேற்பட்ட விலங்கு களில் இருந்து தயாரான பொருட்கள் உள்ளன. உதாரணமாக "Panthenol" "Amino acids", or "Vitamin B" போன்றன உள்ளடக்கங்களில் தயாரி ப்பில் விலங்கு பொருட்கள் உள்ளன.

 

8.Toothpaste
 

Glycerin என்பது தாவர கொழுப்பிலோ அல்லது விலங்கு கொழுப்பிலோ இருந்து தயாராகும் பொருள். உங்கள் பட்பசையின் ஒரு உள்ளடக்கமான Glycerin தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அறிய வாய்ப்பில்லை.

 

9.White and Brown Sugar
 

சில சீனி ஆலைகளில் தயாராகும் சீனி அசைவம் என்று தான் கருதப்பட வேண்டும்.ஏனெனில் சீனி தயாரிப்பு படி முறைகளின் போது வடிகட்டப் படும் படி முறையில் போது விலங்கு எலும்பு தூள்கள்(எலும்பு சாம்பல்) பயன்படுகிறது.

4 comments:

எஸ்.கே said...

உண்மைதான்! ரொம்ப சுத்தபத்தமாக இருக்கிறேன் என யாராலும் சொல்ல முடியாதுதான்!

இரவு வானம் said...

விலங்குகள் இல்லைன்னா மனுசன் எதையுமே யூஸ் பண்ண முடியாது போல் இருக்கே?

nis said...

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்

எஸ்.கே
இரவு வானம்

@இரவு வானம்
//விலங்குகள் இல்லைன்னா மனுசன் எதையுமே யூஸ் பண்ண முடியாது போல் இருக்கே//

:)))))

ரஹீம் கஸாலி said...

முக்கியமாக, நாம் அன்றாடம் பயன் படுத்தும் தண்ணீரை விட்டுவிட்டீர்களே? அதில் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் (தா)ஏராளமாக இருக்கிறதே? அதை கொதிக்க வைத்து குடித்தால் அந்த உயிரிகளை சூப் செய்து சாப்பிட்டது போலத்தான். பால் கூட அப்படித்தான்.

Post a Comment

Related Posts with Thumbnails