எமது வீட்டுக்கு வந்து துவம்சம் செய்யும் மன்மதன்கள்

Share

நண்பர்களை எவ்வளவு விரும்புகிறமோ அதை விட அவர்களால் வரும் தொல்லைகளால் வெறுப்பது அதிகம்.நமது வீட்டில் நமது ஆட்சி நடந்தால் வீட்டுக்கு நண்பர்கள் வந்து போவது சகஜமாக இருக்கும்.இப்படி நமது வீட்டு படுக்கை அறை வரை வந்து போகும் உரிமையுள்ள நண்பர்களால் வரும் தொல்லைகள் வார்த்தைகளால் விபரிக்கப்பட முடியாதவை.  
 
அப்படியான நண்பர் ரகங்களும் அவ் ரகங்களால் எதிர்கொள்ள வேண்டிய தொல்லைகளும் .

1 .மன்மதன்கள் 
 
நம்ம  ஏரியாவில ஏற்கனவே நம்ம பெயர் டேமேஜ் ஆகி தான் இருக்கும். அது போதாது என்று இவனுக வேற வந்து புல்லாக பிரிச்சு மேய்ஞ்சு டுவாங்க .நண்பர்களில் சிலர் மன்மத குஞ்சுகளாக இருப்பாங்க. நம்ம  ஏரியாவில கொஞ்சம் அழகான பிகருகள் இருந்துச்சுன்னா போதும். மன்மதன்களுக்கு நம்ம வீட்டுக்கு வர்றது தான் பிரதான தொழில்.அக்கம் பக்கத்தில இருக்கிற வயதுக்கு வந்த பிள்ளைகள் தொடங்கி ஆண்டிகள் வரை இவங்க போடுற கடலைக்கு நாம தான் பலிக்கடா ஆகணும். எதோ இவங்க மன்மத காலையில் Phd வாங்கின நினைப்பு.

2 .அழுகுணிகள்
 
சோகமோ சந்தோசமோ சிலர் கோவிலுக்கு போவாங்க.சிலர் பீச் இக்கு போவாங்க.நண்பர்களில் ஒரு ரகம் நேர பைக் எடுத்துட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க.பாஸ் மேல இருக்கிற கோபத்தை காட்டுறதும், காதலிகிட்ட வாங்கின செருப்படில புலம்புறதும்,ஏன் இவங்க சந்திரனுக்கு போற கனவுகளை கொட்டுறதும் நம்ம வீட்டில தான்.என்ன கொடுமை ன்னா இங்க நம்மளுக்கு வாய் திறக்க அனுமதியில்லை.மனதுக்குள் புலம்பிய படி முக பாவங்களை அவங்களுக்கு ஏற்ற மாதிரி காட்ட வேண்டியது தான். சில சமயம் ஓசி பியருக்கு தான் அடங்குவாங்க.

3 .வீட்டு ஒனர்
 
சில நண்பர்கள் வீட்ட வந்தால் நாமளா அல்லது அவங்களா வீட்டு ஒனர் என்ற சந்தேகம் கூட வந்து விடும்.வீட்டில உள்ள பொருட்களை நாம use பண்ணுறத விட அவங்க use பண்ணுறது தான் கூடவா இருக்கும். வீட்டுக்குள்ள வந்த உடனேயே ரேடியோ வை பத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி சத்தமா வைப்பாங்க.பிறகு fridge ஐ திறந்து அததனையையும் காலி பண்ணி விடுவாங்க.நாம கூட பெரிதாக சோபாவில உட்கார மாட்டோம்.ஆனா  அவங்க படுத்து ஒரு குட்டி தூக்கமே போட்டு விடுவாங்க. அம்மாட முறைப்புக்கு நாம தான் நெளியணும்.

4 .திருடர்கள்
 
சில நண்பர்கள் வீட்டுக்கு வரும் போதே எந்த எந்த பொருட்களை இன் னைக்கு தூக்க வேண்டும் என்ற ஒரு லிஸ்ட் ஓட தான் வருவாங்க போல. அனுமதியுடன் அல்லது இல்லாமலோ அவங்க வீட்டை விட்டு போகும் போது சில பொருட்களை தியாகம் பண்ண வேண்டி வரும்.எப்படி தான் தான் பிளான் பண்ணி வருவாங்களோ அவங்க கண்ணில் பட்டால் சரி அவ்வளவு தான். போன பொருட்கள் திருப்பி வருவது என்பது சூரியன் மேற்கில் உதிப்பது போல தான். CD ,books , ஏன்  DVD player ஐ கூட கொண்டு பொய் சேர்த்து இருக்கிறாங்க.

5 .குடியிருப்பாளர்
 
சில நண்பர்கள் அவர்கள் வீட்டில் இருப்பதை விட அவர்களின் நண்பர் களின் வீட்டில் இருப்பது தான் அதிகம். வீட்டுக்கு வந்தால் சில மணித்தி யாலங்கள் இருந்து விட்டு போவது தான் ஒரு விசிட்டர் இக்கு சிறப்பு. ஆனால் இது நண்பர்கள் விடயத்தில் ஒரு நாள் தொடக்கம் ஒரு கிழமை வரை நீடிக்கலாம்.அவங்க வீட்டில இவங்களை துரத்தி விடுரதாலோ அல்லது தண்ணி பில்,கரன்ட் பில்,சாப்பாட்டு செலவை குறைக்கும் கஞ்சத்தனம் என்பதோ தெரியவில்லை. நாம வெளிய போனாலும் மச்சான் நீ போட்டு வா நான் நிற்கிறான் என்று வெளிய வர கூட அடம் பிடிப்பர்.

6 .ஆப்படிப்போர்
 
நம்மளோட நல்லாத்தான் இருப்பங்க.நாமும் ஒரு பாவமும் செய்திருக்க மாட்டோம். ஆனால் நம்ம வீட்டுக்கே வந்து நமக்கு ஆப்பு வைச்சிட்டு பொய் விடுவாங்க. நம்ம வீட்டாரிட்ட நம்ம ரகசியத்தை அவிழ்த்து விடு வாங்க.அல்லது குள்ள நரி தனமாக வீட்டில் உள்ளோ ருக்கு கேட்கும் விதமாக நம்முடன் கதைக்கும் போர்வையில் ஒரு ரகசிய விஷயத்தை (காதலி) பற்றி கதைப்பாங்க. அல்லது மிகவும் ஆபாசமாக கதைத்து நம் இமேஜ்ஜை நாசம் செய்வர்.எதோ நம்ம வீட்டை தவிர ஒரு இடமும் சந்திக்கிரதில்லை என்பது போல கதைக்கக்கூடாத தெல்லாம் இங்க தான் கதைக்கிறது.

7 .பாவிகள்
 
சில பேர் இருக்காங்க. எவனோடையாவாது வம்பிழுத்து கொண்டே இருக் கிறது. நம்ம வீட்டுக்கு வரும் போது கண்ட கண்ட ஆட்களோட வந்து நம்ம வீட்டை காட்டி வைக்கிறது.அவனோட இவன் வழமை போல் ஏதா வது பண்ணி வைக்க அவன் நம்ம வீட்டுக்கு இவனை தேடி வந்து விடு வான்.அவன் நண்பன்  தானே என்று நம்மளை திட்டுவான்.சில பேர் தமது வீட்டை அடையாளம் காட்டாமல் நம்ம வீட்டில் குந்திக் கின்னு எவன் எவனையோ எல்லாம் போன் இல நம்ம வீடுக்கு கூப்பிட்டு வில்ல ங்கமான dealings களை  நடத்துறது.

8 .நாசம் செய்வோர்
 
சில நண்பர்கள் இருப்பார்கள் அவங்க வீட்டில் எப்படியோ தெரியாது ஆனா நம்ம வீட்ட ஒரு வீடு மாதிரியே கண்டுக்கிறதில்லை. அதாவது அநாகரிக மாக நடப்பது,அசுத்தம் செய்வது,பொருட்களை போட்டு உடைக்கிறது என ரகளையில் ஈடுபடுவாங்க.பியர் அடிக்கிறதெண்டா  அவன் வீட்டு மொட்  டை  மாடியில் அடிக்காமல் நம்ம ரூமில அடிப்பாங்க.சில பய புள்ளைக  இருக்கிறாங்க நம்ம வீட்ட ஆட்கள் இல்லை என்பதை மணம பிடித்து  அவங்க ஆள் என்ற பெயரில எதோ  ஒன்றை கொண்டு வந்து சேர்த்திடு வாங்க.அக்கம் பக்கம் பார்த்தால் அம்போ தான்.

இதை நீங்கள் ரசித்திருந்தால்  இன்ட்லி,தமிழ்மணம் என்பவற்றில் உங்கள் கணக்கு இருந்தால் தயவு செய்து இன்ட்லியில் ஒரு வாக்கு தமிழ்மணத்தில் ஒரு பரிந்துரை இட்டு  அன்புடன் தெரிவியுங்கள்.

3 comments:

மைந்தன் சிவா said...

இம்புட்டு ரகமா??ரொம்பவே அனுபவிச்சிருக்கீங்க போல இவங்களால??

அன்பரசன் said...

ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல.

ஹம்துன்அஷ்ரப் said...

பாவம் நீங்க....உங்க நண்பர்கள் அதைவிட பாவம்

Post a Comment

Related Posts with Thumbnails