பாடசாலைகளில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் விட்ட தவறுகள்

Share
 
நாம் கற்ற, காதால் அறிந்த விடயங்களில் பல தவறானவை.தவறான புரிதல்களுக்கு உட்பட்டு உலாவருகின்றன. இவற்றில் பல நாம் பாடசாலை நாட்களில் அறிந்தவை.சிலவேளைகளில் பின்னாளில் அவை தவறென அறிந்திருப்போம் .

ஆசிரியர்கள், ஆசிரியைகள்  கூறியவை சரியான தகவல்கள் என நினைத்து நாம் தவறாக விளங்கி வைத்திருக்கும் சில தகவல்கள்.


1 .வானத்தை பிரதிபலிப்பதால் கடல் நீர் நீலம்
 

உண்மையில் தூய நீர் நீல நிற இரசாயன பொருள். நீரின் மூலககட்டமைப்பு ஒளியின் நீலம் தவிர்ந்த அனைத்து நிறங்களையும் உறிஞ்சி விட்டு நீலத்தை மட்டும் வெளிவிடுகிறது.கோப்பை ஒன்றில் உள்ள நீர் அளவு குறை வென்பதா ல் வெளியாகும் நீலம் கண்ணுக்கு தெரியாது என்பதால் அது நீலமாக தெரிவ தில்லை.

2 .பிரதான நிறங்கள் - சிவப்பு மஞ்சள் நீலம்
 

உண்மையில் பிரதான நிறங்கள் சிவப்பு பச்சை நீலம் (RGB) ஆகும்.இவை தான் ஒளியின் பிரதான கட்டமைப்பு நிறங்கள் ஆகும். பாடசாலையில் சிவப்பு மஞ்சள் நீலம் கொண்டு பல நிறங்களை ஆக்கலாம் என கூறப்பட்டாலும் உண்மையில் RGB கொண்டு ஆக்க கூடிய நிறங்களை RYB கொண்டு ஆக்க முடியாது.

3 .சீன பெரும் சுவர் விண்வெளியில் தெரியும்
 

உலகில் நீளமான மனித படைப்பான இது வெண்வெளியில் (9000Km )இருந்து அதுவும் சந்திரனில் இருந்து பார்க்கமுடியும் என பரவலாக கருதப்பட்டாலும் வெறும் 10 மீட்டர் அகலமான இதனை காண்பது சாத்தியமே அல்ல என நாசா கூறுகிறது.இது 2700 Km அப்பால் இருந்து ஒரு தலை முடியை பார்ப்பதற்கு ஒப்பானது.

4 .கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார்
 

கொலம்பஸ் 1492 இல் அங்கு போக முதலே அமெரிக்காவில்  ஆதிவாசிகள் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது. போர்த்துக்கேயர்கயர்கள் 1424 இல் போயு ள்ளனர்.மேலும் பல ஆதாரங்கள் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிக்க முதலே பலர் அங்கு போயுள்ளனர் அல்லது வசித்துள்ளனர் என கூறுகின்றன.

5 .எடிசன் மின்குமிழை கண்டு பிடித்தார்

 

எடிசனுக்கு முதலிலேயே 22 இக்கும் மேற்பட்ட வேறுபட்ட வகை விளக்கு கண்டு பிடிப்புகள் உள்ளன.குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு தொடக்கபகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட Humphry Davy இனது.ஆனால் எடிசன் October 1879, இல் அன்றாட வாழ்கையில் நீண்ட காலம் பாவிக்ககூடிய மின் விளக்குகளையே கண்து பிடித்தார்.

6 .வௌவால்கள் குருடு

இது வரையில் கண்டு பிடிக்கப்பட்ட 1100 இக்கும் மேற்பட்ட வௌவால் வகைகளில் அனைத்துக்குமே பார்வை திறன் உள்ளன. அவை எதிரொலியை பிரதானமாக பயன்படுத்தினாலும் சில வகை கண்களையே பிரதானமாக பாவிக்கின்றன.அவற்றால கண்களால் வடிவம்,நிறம் என்பவற்றை கூட வேறுபடுத்தி காண முடியும் .

7 .தாவரங்கள் இரவில் சுவாசிக்கிறன
 

தாவரங்கள் பகலில் மட்டும் சூரிய ஓளி உதவியுடன் ஒளித்தொகுப்பு செய் கின்றன.ஆனால் ஏனைய உயிர்களை போல அவை எந்நேரமும் அதாவது இரவு பகலாக சுவாசிக்கின்றன. நாம் கற்றது போல இரவில் மட்டும் தாவரங் கள் சுவாசிப்பதில்லை.எனவே இரவு பகலாக அவை ஓட்சிசனை உள்ளெடுத்து CO2 வை  வெளிவிடுகின்றன.

8 .10 % மூளையை தான் பயன்படுத்துகிறோம்
 

குறித்த ஒரு நேரத்தில் பத்து விகித மூளை பயன் பயன்படுவது சரியாக இருக்கலாம்.ஆனால் ஒரு நாள் முடிவில் பார்த்தால் எமது மூளையின் அனைத்து பகுதிகளும் ஏதாவது ஒரு தருணத்தில் பயன் பட்டு இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு மூளை பகுதியை பயன்படுத்துகின்றன.

9 .வட துருவ நட்சத்திரமே பிரகாசமானது
 

Polaris, அதாவது வட துருவ நட்சத்திரம் என அழைக்கப்படும் இது தான் மிக பிரகாசமானது என பல இடங்களில் கற்பிக்கப்பட்டாலும் உண்மையில் வீட்டு முற்றத்தில் இருந்து இதை அவதானிப்பதே கடினம். மங்கலான ஒரு நட்சத் திரம். வானத்தில் உள்ள மிக பிரகாசமான நட்சத்திரம் சூரியனை தவிர்த்து Sirius, ஆகும்.

10 .நெப்போலியன் குள்ளமானவர்
 

உண்மையில் நெப்போலியன் கிட்டத்தட்ட 6 அடி உயரமானவர். ஆனால் உயர அளவு முறை வேறுபாடுகளால் இவரது உயரம் பற்றி தவறான எண்ணங்கள் உலாவுகின்றன. The Little Corporal என அவர் அழைக்கப்பட்டதும்,அவர் உயரமான மெயகாவலர்களால் சூழப்பட்டு இருந்தமையும் இவ்வதந்திக்கு காரணமாயின.

11 .பாணுக்கு பதில் கேக்
 

பிரான்சில் பாண் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் அரசி Marie Antoinette பாணை விடுத்து கேக் சாப்பிட சொன்ன கல் நெஞ்ச காரி என தூற்றப்படுபவர். உண்மை யில் அக்காலப்பகுதியில் அவர் பத்து வயதான சிறுமியாகவே இருந்தார். எனவே இவர் இவ்வார்த்தைகளை கூறியிருக்க வாய்ப்பில்லை.

12 .Cleopatra எகிப்தியர்
 

ஜூலியஸ் சீசரின் மனைவி அழகி Cleopatra ஒரு எகிப்திய நாட்டவரே அல்லர். கிரேக்க நாகரிகத்தை உடையவர்.ஆனால் எகிப்திய மொழி தெரிந்ததா வெகு சில ஆட்சியாளர்களில் இவரும்  ஒருவர். Cleopatra  ஒரு எகிப்திய ராணி என கற்பிக்கப்பட்டது தவறு.பலர் அவ்வாறு தான் நினைக்கின்றனர்.

16 comments:

Anonymous said...

நல்ல கருத்துகளை அறிய தந்தீர்கள்..அருமை..தொடருங்கள்

nis said...

மிகவும் நன்றி நண்பர் padaipali

ஹரிஸ் said...

நல்ல பதிவு..பகிர்வுக்கு நன்றி..

நீச்சல்காரன் said...

நல்ல தகவல்கள் தான் பிடித்திருக்கு. ஆனால் ஆசிரியர்களை தவறு சொல்ல வேண்டாமே

அன்பரசன் said...

நல்ல தகவல்கள்.

பதிவுலகில் பாபு said...

அருமையான பதிவு..

பதிவுலகில் பாபு said...

வெளவ்வாலுக்கு கண்ணுத் தெரியாதுன்னு தானே இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருந்தேன்..

:-))

சசிகுமார் said...

உண்மையில் ரசித்து படித்தேன் நண்பா. அருமையான தகவல்கள்

Thomas Ruban said...

நல்ல தகவல்கள், இதில் சில தகவல்கள் சரி சில தகவல்களை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சரி என்கிறீர்கள் என்று விளக்கினால் பயனுள்ளதாக அமையும்.

பகிர்வுக்கு நன்றி சார்.

nis said...

நன்றி
padaipali
ஹரிஸ்
நீச்சல்காரன்
அன்பரசன்
பதிவுலகில் பாபு
சசிகுமார்
Thomas Ruban

@ நீச்சல்காரன் உடன் படுகிறேன்
@Thomas Ruban நிச்சயமாக

ஆனந்தி.. said...

ரொம்ப நல்ல தகவல்கள்...(சில விஷயங்களை மண்ணு மாதிரியே கிளிபிள்ளை மாதிரி உள்நோக்கம் புரியாமல் படிசுடுறோம்...இப்போ புரியுது சில விஷயங்களில் முரண்பாடுகள் இருக்குங்கிறது...)

எஸ்.கே said...

மிக புதுமையான தகவல்கள்!
மூளை பற்றி சொல்லியதை நானும் படித்திருக்கிறேன். அதாவது மூளையில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பகுதி வேலை செய்கிறது. மூளையின் நினைவகங்கள் எல்லா பகுதிகளிலும் உள்ளன. எல்லாப் பகுதிகளிலும் செய்திகள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் அப்படி பயன்படுத்தப்பட்டவைகளின் சதவீதம் 10%ஆகவே இருக்கிறது.

அன்புடன் அருணா said...

100 marks!

THOPPITHOPPI said...

புதுமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

டயஷா said...

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு,மஞ்சள், நீலம். இதில் எந்த கலப்பும் இல்லை அதனால் இதற்கு தூயவர்ணம் என்றும் சொல்வர், இதனை வைத்துக்கொண்டு வர்ணச்சக்கரத்தை உருவாக்கலாம். ஆனால்.... பச்சை ஒரு கலப்பு வர்ணம்(மஞ்சள்+நீலம்)

ஆசிரிய,ஆசிரியைகளை குறை கூறுவது தவறு, அமெரிக்காவை கொலம்பஸ், மின்குமிழை எடிஷன் கண்டு பிடித்தார்கள் என்பது உலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம், அதற்கு முன்னர் மக்கள் இருந்தார்களா? மின்குமிழ் இருந்ததா? என்பது பற்றி துருவி அலைசி ஆராய்ந்தவர்கள் ஏன் அதை அப்போது மறுக்கவில்லை?

அறிவாற்றலில் நாம் சராசரியாக 10% மான மூளையை பயன்படுத்துகின்றோம் என்பது பொதுவான கருத்து.... இதனை எந்த ஆசிரியரும் பாடத்திட்டதுக்கு அமைய கற்பித்து இருக்க மாட்டார்....

பாலர் வகுப்பில் ஆசிரியை பாட்டி வடை சுட்ட கதை சொன்னார்.... இப்போ வந்து நரி கதைக்குமா? ஆசிரியை பொய் சொல்லி போட்டா... என்று சொல்லலாமா?

High school katttimedu said...

பயனுடைய செய்திகள் ஆனால் தலைப்பை மாற்றுங்களேன் ! ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்ட்டதும் அப்படியே !

Post a Comment

Related Posts with Thumbnails