தமிழ் சினிமாவில் கற்று கொண்ட பாடங்கள்

Share

தமிழ் சினிமா வரலாற்றில் காலத்துக்கு காலம் திரைப்படங்களின் போக்கு ரசிகர்களின் ரசனைக்கமைய மாறி வருகிறது என்றாலும் பலவிடயங்கள் அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக தான் உள்ளது.தமிழ் சினிமா என்றவுடன் அதில் இந்த சீன என்றால் இப்படி தான் இருக்கும் என அனைவராலும் ஒரு வகை கிண்டலுடன் கூறப்படக்கூடிய சில இங்கு உள்ளன.

நினைவுக்கு வந்தவை தான் இவை.இயக்குனர்கள் வேறு முறையில் காட்ட அடம்பிடிக்கும் இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. நினைவுக்கு வந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


1.ஹீரோ ஜெயில் இல் இருந்து தப்பி வந்தோ அல்லது தலைமறைவாகிய பின் அசால்டாக ஊருக்குள் வந்து தான் குற்றமற்றவன் என்பதற்கான ஆதாரங் களை சேர்ப்பார்.


2.ஒரு பெண் திடீரென மயங்கி வீழ்ந்தால் அல்லது வாந்தி எடுத்தால் திடீரென ஒரு பாட்டி கையை பிடித்து பார்த்து விட்டு எல்லாம் நல்ல செய்தி தான் நீ அம்மா ஆகிவிட்டாய் என்பார்.


3.ஹீரோ இரட்டையர்கள் எனும் இரட்டை வேடம் என்றால் அதில் ஒருவர் இந்த மிக மோசமான வில்லனாகவும் மற்றவர் வீராதி வீரனாகவும் நீதியின் வடிவமாகவும் வருவர்.


4.ஒரு பையனும் ஒரு பெண்ணும் காணும் இடமெல்லாம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டால் இருவருக்குமிடையில் எந்நேரமும் காதல் பற்றபோகிறது என தெரியும்.


5.அட போலிஸ் என்றால் இப்படி இறுக்க கூடாதா என என்ன தோன்றும் அளவுக்கு நல்ல போலிசாக வருபவர் நிச்சயம் வில்லனகளிடம் குண்டடிபடு வார் அல்லது இறப்பார்.


6.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறும் அம்மா நிச்சயமாக தானும் அவர்களுடன் அமர்ந்திருந்து உன்ன மாட்டார்.வீட்டில் வேலைக்காரி இருந்தும் நேரம் இல்லை.


7.ஹீரோ ரவுடிகளுடனான சண்டையில் மயங்கி வீழ்ந்தால் ஏதாவது ஒரு குரலுக்கு அல்லது தான் எழவேண்டும் என மனிதின் குரலுக்கு நினைவு திரும்பி ஆக்ரோஷமாக சண்டையிடுவார்.


8.நாயகி அல்லது நண்பனோ ஹீரோவின் நன்மைக்காக அப்படி செய்யாதே என் அவரை தடுத்தால் கன்னம் பழுக்க அறை, அதைவிட பயங்கரமான செண்டி மெண்ட் டயலாக் வரும்.


9.நாயகிக்கு வரும் ஹிந்தி பட நாயகர்களை போலிருக்கும் கோடீஸ்வர மாப்பிள்ளைகளை கணக்கெடுக்காமல் வேலை வெட்டி இல்லாத ஹீரோவை விரும்புவார்.


10.பல வேடங்களில் வரும் நாயகனை அல்லது துணை நடிகரை சின்ன குழந்தை கூட இனம் கண்டு கொள்ளும்.ஆனால் படத்தில் வரும் அவரின் தாய் கூட கண்டுபிடிக்க மாட்டார்.


11.ஹீரோவை 100 ரவுடிகள் சுற்றிவளைத்தாலும் ஒரே நேரத்தில் ஹீரோவை அடிக்க மாட்டார்கள்.ஹீரோவிடம் தனி தனியாக போய் வாங்கிகட்டிக் கொண்டு சுருண்டு வீழ்வார்.


12.நாயகி இன்னொருவருக்கு நிச்ச்ச்யார்த்தம் செய்யப்பட்டு திருமண மேடை யில் அமர்ந்திருக்கும் நிலை வந்தாலும் ஹீரோ போலிஸ், ரவுடிகளை யும் மீறி நாயகியை தூக்கி செல்வார்.


13.ஹீரோவாக வரும் போலிசுக்கு மட்டும் தண்ணி அடிக்க,தம் அடிக்க, லஞ்சம் வாங்க, ரவுடி அரசியலுக்கு அடங்க, பெண்களுடன் சேடடை விட, பொய் கேஸ் போட தெரியாது.


14.ஒரு குழந்தைக்கு அப்பா வயதில் இருக்கும் நாயகன் கல்லூரியில் படித்தால் அவரை விட ஒரு வயதாவது அதிகமுள்ளவர் அவருக்கு கல்லூரி நண்பராக வருவர்.


15.அனேகமாக படத்தில் வரும் அம்மா வேடங்களில் வரும் அம்மணிகள் மட்டும் எந்நேரமும் சமையற்கட்டில் நின்றால் கூட திருமணத்துக்கு செல்வது போல ஆடை ஆபரணமணிந்து இருப்பர்.


16.நீதி மன்றத்தில் ஒருவர் விடும் மொக்கை ஜோக்குகளுக்கு மற்றையவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய நீதிபதி மூன்று தரம் சுத்தியலால் தட்டி விட்டு இருந்து விடுவார்.


17.கதாநாயகிக்கு தந்தையாராக வருபவர் சாதாரண தந்தை போல் இல்லாமல் ரவுடியாகவோ அல்லது டம்மி பீஸ் போலவோ நாயகனின் தேவைகேற்ப வருவார்.


18.அனேகமாக நாயகனுக்கு முதன் முறையாக நாயகியை பார்க்கும் போது மட்டும் தான் வாழ்கையில் முதன் முதன் முறையாக ஒரு பெண்ணை பார்த்தது போல் உணரவுகளை காட்டுவார்.


19.கல்லூரிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது பாட முடிவு மணியடித் தால் சொல்லிக்கொண்டிருந்த வாக்கியத்தை கூட முடிக்காமல் நிறுத்தி விட்டு சென்றுவிடுவர்.


20.கார் சேஷ் இல் இரண்டு கார்கள் மோதினால் நிச்சயம் அவற்றில் ஒன்று 100 அடி உயரத்துக்கு பறந்து விழும் . அல்லது பெட்ரோல் டாங்கரில் மோதி எரியும்.


21.முதலிரவு என்றால் பட்டு வேட்டி சட்டை மாப்பிள்ளை, பட்டு சேலை பெண், அலங்கரிக்கப்பட்ட கட்டில், சில சம்பிரதாயங்கள், இருவரும் அணைப்பதுடன் சீன் முடியும்.


வீடியோ ( இப்பவே ஆரம்பிச்சிட்டானுக )



 .

25 comments:

இளங்கோ said...

அப்புறம் ஒபெனிங் சாங்.
ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொண்டால் வெளிநாட்டுக்கு பாட்டுப் பாட போய் விடுவது. :)

எஸ்.கே said...

உண்மைதான்! ஆனால் இதில்லாமல் படம் முழுமையடைவதில்லை என அவர்களுக்கு தோன்றுகிறதோ என்னவோ!:-)

சிவராம்குமார் said...

செம நக்கலுங்க! ஆனா எல்லாம் நம்ம சினிமாவோட அடையாளம்!

பிச்சைக்காரன் said...

சூப்பர்

Anonymous said...

அருமை !

ஹரிஸ் Harish said...

:)..சூப்பர்..எப்படி பாஸ்?

nis said...

கருத்திற்கு நன்றிகள்

இளங்கோ
எஸ்.கே
சிவா என்கிற சிவராம்குமார்
பிச்சைக்காரன்
padaipali
ஹரிஸ்

@இளங்கோ நீங்கள் கூறியதுதான் மிக்கியமானது
@எஸ்.கே ஆமாம்
@சிவா என்கிற சிவராம்குமார்,,ம்ம் சினிமாவோட அடையாளம்
@ஹரிஸ் :)))

Philosophy Prabhakaran said...

// நாயகிக்கு வரும் ஹிந்தி பட நாயகர்களை போலிருக்கும் கோடீஸ்வர மாப்பிள்ளைகளை கணக்கெடுக்காமல் வேலை வெட்டி இல்லாத ஹீரோவை விரும்புவார். //
செம காமெடி...

நூறு வாடிக்கையாளர்களை தாண்டிவிட்டீர்கள் போல... வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...

Nice

Arun said...

வித்தியாசமான கண்ணோட்டம் !! அருமை !!

Unknown said...

எல்லாம் சரிதான்.. :-)

Unknown said...

என்ன தான் ஹீரோ மொக்க போட்டாலும் அவரோட கூடவே வர நண்பர்கள் சண்டைன்னா மட்டும் flight புடிச்சி கண் காணாத தேசம் சென்று விடுவார்கள்.

nis said...

கருத்துகளிற்கு நன்றிகள் நண்பர்கள்

philosophy prabhakaran
சசி
Arun
பாபு
விக்கி உலகம்

@விக்கி உலகம் நீங்கள் கூறியது மிக்கியமானது

Jayadev Das said...

இதை விஷயத்தை ஹிந்தி படங்களை நக்கலடித்து யாரோ எனக்கு அனுப்பியிருந்தார்கள். தமிழ் டைரக்டர்கள் ஆங்கிலப் படங்களை காப்பியடிப்பது போல நீங்களும் அதைக் காப்பியடித்து விட்டீர்களா? சுயமாக சிந்திக்கவே முடியாதா?

Rusaith Kicku said...

nalla vele naan yetheyum paakkala.
rusaith.blogspot.com

nis said...

@ Jayadev Das

don;t write stupid things ,, if u have any evidence i ask u to disclose that information.
i know how to think on my own . in the cinema films there is always comedy,love fight. so if we want to write about cinema we can;t think in a different manner, whether it is ஹிந்தி/tamil.

we all have same idea about tamil cinema, so if we write all the things will be a same.

Jayadev Das said...

என்னம்மா கண்ணு, இங்கிலிபீசுல எல்லாம் வெளுத்து வாங்குறியே என்ன விகானந்தா இன்சூட்டா? நானு என்ன உன்ன மாதிரி டுபாகூரு பார்ட்டின்னு நினசுகிட்டியா? ஆதாரமா வேணும்? இந்த புடிச்சுக்கோ!

Things You Wouldn't Know Without Movies
-It is always possible to park directly outside any building you are visiting.
-A detective can only solve a case once he has been suspended from duty.

-If you decide to start dancing in the street, everyone you bump into will know all the steps.

-Most laptop computers are powerful enough to override the communication systems of any invading alien civilization.

-It does not matter if you are heavily outnumbered in a fight involving martial arts - your enemies will wait patiently to attack you one by one by dancing around in a threatening manner until you have knocked out their predecessors.

-When a person is knocked unconscious by a blow to the head, they will never suffer a concussion or brain damage.

-No one involved in a car chase, hijacking, explosion, volcanic eruption or alien invasion will ever go into shock.

-Police Departments give their officers personality tests to make sure they are deliberately assigned a partner who is their total opposite.

-When they are alone, all foreigners prefer to speak English to each other.

-You can always find a chainsaw when you need one.

-Any lock can be picked by a credit card or a paper clip in seconds, unless it's the door to a burning building with a child trapped inside.

-An electric fence, powerful enough to kill a dinosaur will cause no lasting damage to an eight-year-old child.

-Television news bulletins usually contain a story that affects you personally at that precise moment you turn the television on.

Jayadev Das said...

இன்னும் ஆதாரம் இந்தா பாத்துக்கோ, விவேகானந்தா இஞ்ஜுட்டு காரரே!

http://tjenarvi.com/10-unique-things-only-in-india-bollywood-movies
http://www.india-forums.com/forum_posts.asp?TID=1323154
இந்த மாதிரி இடத்துல இருந்து பாத்து உமக்கு எவனோ தமிழிலில் மொழி மாற்றம் பண்ணி போட்டிருப்பான், அதை காப்பியடிச்சுட்டு, நீர் இங்கிலிபீசுல பீஸ் பீஸா போலந்து கட்டிக்கிட்டு இருக்கீங்க, என்ன கலி காலம்டா இது!

மத்த இடத்துல இருந்து காப்பியடிக்கிறது பெரிய விஷயமில்ல, எங்கயிருந்து எடுத்தேன்னு ஒரு வார்த்தை சொன்னா கஷ்டப்பட்டு முதலில் எழுதியவனுக்கும் பெருமை போய்ச் சேரும்.

Jayadev Das said...

http://apnifilmcity.com/board/showthread.php?tid=289

ம.தி.சுதா said...

ரசனைக்குரிய பதிவு.... தொடருங்கள் சகோதரம்...
காய்க்கம் மரங்கள் கல்லெறி வாங்கத் தான் செய்யும்...

nis said...

I already clearly stated that all cinema contain same things whether it is tamil movie/ singla movie/ hindi movie.

so if we want to criticize the cinema , we can't say any thing in a different manner .

hero/heroine dance together in all movie, all commen scence people know this. so if 2 person are given the heading to criticize the cinema ,both guys are intend to say that "both will dance in another movie also"

i have just visited to that link

how can you assure that person didn't copy from a another site???????????

nis said...

@ ம.தி.சுதா

Special thanks to u in favour to me

Jayadev Das said...

இதே விஷயம் ஏதோ தமிழ் வார இதழ்களில் கூட படித்த மாதிரி ஞாபகம். நீங்கள் நிஜமாகவே சொந்தமாகத்தான் எழுதியுள்ளீர்கள் என்றால் மகிழ்ச்சியே.

nis said...

நான் முழுவதும் சுயமாக யோசித்து எழுதினேன் என கூற முடியாது நண்பர் Jayadev Das

ஆனால் 3/4 பங்கு நான் பார்த்த சினிமா அனுபவத்தை கொண்டு எழுதியது.
எனது comment ல் ஏதாவது கூடாத வார்த்தை இருந்திருந்தால் sorry .

Saravanan said...

இடுகையும் உங்கள் பின்னூட்ட ஒட்டங்களும் நன்றாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails