Public Bathroom இல் நடப்பவை

Share

நம்மில் பலர் வீட்டு bathroom ஐ விட public (office /campus /shops)bathroom ஐ தான் அதிகம் urine pass பண்ண பயன் படுத்துவோம்.அப்போது நாம் எப்படி behave பண்ண வேண்டு என்பதற்கான சட்டங்கள் இல்லையானாலும் எழுதப்படாத சில சட்டங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றுவது நாகரிகமான மனிதர் என்ற பெயரை பெற்று தரும்.

1 .வேலை முடிந்த பின் flush பண்ண வேண்டும்
சிலர் தமது வேலை முடிந்த பின் flush பண்ணாமல் சென்றுவிடுவர். அடுத்து வருபவர்களும் தமக்கு மட்டும் ஏன்  இந்த வேலை என செல்ல காரணமாகி இறுதியில் சூழலே நாறிவிடும்.மனித நாகரிகம் என்பது இச்சிறு விடயங்களிலே உள்ளது.

2 .எல்லா இடமும் கழிக்க கூடாது

இப்படியான இடங்களில் சிறுநீர் கழிக்கும் பொது குறித்த குழியை தவிர்ந்த மற்ற இடங்களில் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். உதாரணமாக நிலத்தில். அல்லது இடம் அசுத்தமாகி அது பின் வருபவர்களை சங்கட படுத்தக்கூடும்.

 

3 .உள்ளே யாரும் இல்லை என உறுதி செய்தல்
சில இடங்களில் சிறு அறைகளாக இருக்கும் ஆனால் பூட்டுகள் உடைந்து இருக்கும்.அப்படிப்பட்ட அறைகளின் கதவு கட்டையாக இருப்பதால்  கால்கள் கதவின் கீழாக தெரியும்.எனவே உள்ளே யாரும் உள்ளனரா என உறுதி செய்ய முடியும்.

4 .இடைவெளி பேணல்

போதிய அளவு இடங்கள் உள்ள போது ஏற்கனேவே நிற்கும் ஒருவருக்கு அருகில் போய் ஒட்டி கொண்டு நிற்காமல் இரண்டு மூன்று இடம் தள்ளி போய்  கழிப்பது தான்  நன்று.அல்லது அந்த நபர் உங்களை ஒரு மாதிரி நோக்க கூடும்.

5 .நேராக பார்க்கவும்

சிறுநீர் கழிக்கும் போது கீழே பார்க்கவும் அல்லது நேரே பார்க்கவும். அதைவிடுத்து அப்பாவித்தனமாக பக்கத்தில் நின்று கழிக்கும் நபரை/ முகத்தை பார்ப்பது நல்லதல்ல.அவர் இதனால் கோபமடைய கூடும். இப்படி நடந்துள்ளது.

 

6 .கதைக்கும் இடமல்ல
சிலர் உள்ளே நுழைந்தது தான் தாமதம் அருகில் உள்ளவர் நண்பரோ இல்லையோ கதை தொடங்கி விடுவர்.சிலர் இவ்விடத்தில் கதைப்பதை  வெறுக்கிறார்கள்.புதுப்படம் பற்றியோ,நேற்றைய மேட்ச் பற்றியோ கதைக்கும் இடமல்ல இது.

7 .கைகளை கழுவுதல்

சிறு நீர் கழித்து முடிந்த பின் விரும்பியோ  விரும்பாமலோ கைகளை அங்குள்ள wash basin இல் கழுவ மறக்க வேண்டாம்.இல்லையேல் உங்கள் நாகரிக நண்பன் உங்களை பற்றி தவறாக எடை போட்டு விடுவான்.
 

 


5 comments:

Anonymous said...

hahahahahaha so funny.......

Myooou Cyber Solutions said...

Good One.

ப.கந்தசாமி said...

Good tips

அன்பரசன் said...

very good one..

எஸ்.கே said...

அருமை!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Post a Comment

Related Posts with Thumbnails