இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் தொலைகாட்சி ,தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

Share

எல்லா அப்பா , அம்மா களுக்கும் தங்களுடைய பிள்ளைகள் எல்லாவற்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கூறி விட்டு , சில அப்பா,அம்மா கள் தங்களுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து TV பார்த்து பிள்ளைகளை பாதிக்க செய்கிறார்கள்.தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கி சிறுவர்களுக்கு உரிய TV நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பதே நல்லது.


தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் சில
விளைவுகளை இங்கு பார்க்கலாம்

முரட்டுத்தனம்
 
ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200 000  சண்டை காட்சி களையும் , 50 000 கொலைகளையும்   தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது ,  1 - 3 மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும்,22 .5 % ஆன  சிறுவர்கள் மற்றயவர்களுடன் சண்டை,களவு என்பவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். 

05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22 .5 % - 28 .8 % க்கு உயர்வடைகிறது .இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும்  குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5 .7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கை களில் ஈடுபடுகிறார்கள் . இதற்கு, வீடுகளில் சிறுவர்கள் பெற்றோரால் துன்புறுத்தப்படுவதும் ஒரு காரணியாக அமைகிறது .

 
தனிமை போல உணருதல்

சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் மாட்டுபட்டு இருப்பது போல காட்டுவார்கள் . அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள் . 

படமாக இருந்ததால் 02 மணித்தி யாலங்களுக்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடு படுவது போல காட்டுவார்கள்.
இவ்வாறான படங்களயும் , நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக நடிகைககளை Role Model ஆக பின்பற்றும் இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள் ., காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் [ விளையாட்டு பொருட்கள்  ] கதைத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் .

 
ஒரு விடயத்தில் கவனம் [ concentration ] செலுத்த முடியாமை
 
சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சி நிகழ்சிகள் மிகவும் வேகமாகவும், நிறங்கள் அதிகமானதாகவும் , மிகவும் தெளிவாகவும் காட்டப்பட்டு இருக்கும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள். பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாகவும் , குறைந்த நேரம் மட்டுமே படிப்பிக்க வேண்டும் என இந்த சிறுவர்கள் எதிர் பார்க்கிறார்கள் .

சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறு கிறார்கள்.ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணித்தியாலங்கள் சிறுவர் களுக்கு TV பார்க்கவும் ,Games விளையாடவும் கொடுத்தபோது அநேக மானோர் சிறிது நாட்களின் பின்னர் பாடங்களில் கவனம் செலுத்த சிரமப் பட்டுள்ளார்கள்.

 
கனவுகளை மாற்றுகிறது
 
எங்களில் அநேகமானோருக்கு கனவுகள் [Dreams ]கருப்பு வெள்ளையில் தான் வருகிறது . 50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி  [ இவர்களில் பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் , பாதிபேர் 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் ] ,இவர்கள் காணும் கனவுகளை ஒரு புத்தகத்தில் குறித்து வைக்க கூறி உள்ளார்கள் .

இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேக மானோர்  கண்ட கனவுகள் பல நிறங்களாக  [colourful ] உள்ளது . 55 வயதுக்கு மேற் பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் வந்துள்ளது .55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது .

 
என்ன பார்க்கிறோம் என அறியாத வயது
 
தற்போது குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் தொலைகாட்சிகளில் போகும் பாட்டுகளுக்கு தனது கால்களை அசைத்து நடனம் ஆடுகிறது .இதை வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் பெற்றோர்கள் பெருமையாக சொல் கிறார்கள்.29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,

அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் கணக்கு பாடத்தில் குறைவான புள்ளிகளையும் , வகுப்பறைகளில் சோம்பலாகவும் இருப்பதாக கூறுகிறார்கள் .பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது .

 
உடல் பருமன்
 
TV ஐ தொடர்ந்து பார்ப்பதால் நாம் மற்றைய வேலைகளை செய்யாது ஒரே இடத்தில் இருந்து கொண்டு நொறுக்கு பண்டங்களை சாப்பிடும் போது calories இழக்கப்படாது உடல் பருமன் அசுர வேகத்தில் கூடி விடுகிறது . நடத்தப்பட்ட ஆராச்சியில் TV ஐ குறைவாக பார்த்தோர் , தினமும் 05 மணித்தியாலங்கள்  TV ஐ பார்த்தோரை விட 120 calories ஐ இழந்துள்ளார்கள்.

இவற்றில் இருந்து விடுபட ஒரு வழி இருக்கின்றது
TV ஐ பார்க்காமல் என்னுடைய Blog ஐ வந்து பாருங்கோ :))
.

10 comments:

Philosophy Prabhakaran said...

ஆபாச நிகழ்ச்சிகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே... ஏன்...?

Philosophy Prabhakaran said...

// இவற்றில் இருந்து விடுபட ஒரு வழி இருக்கின்றது TV ஐ பார்க்காமல் என்னுடைய Blog ஐ வந்து பாருங்கோ :)) //'

செம டச்...

nis said...

முதல் வருகைக்கு நன்றி philosophy prabhakaran
அடுத்த பதிவில் எழுதுவம் :)

அன்பரசன் said...

//TV ஐ பார்க்காமல் என்னுடைய Blog ஐ வந்து பாருங்கோ //

:)

nis said...

@ அன்பரசன் :))

தல தளபதி said...

நல்ல ஆய்வுங்க! நன்றி!

சசிகுமார் said...

அனைவரும் பார்க்க வேண்டிய இடுகை

தமிழ்வாசி said...

super reserch

nis said...

கருத்திற்கு நன்றி நண்பர்

தல தளபதி
சசிகுமார்
தமிழ்வாசி

Madurai pandi said...

Gud and useful one... but the question mark is how many people will follow this?? :)

Post a Comment

Related Posts with Thumbnails