வேலை தளங்களில் வேலையில் மட்டுமே குறியாக உள்ளீர்களா

Share

பொருளாதார நெருக்கடிகளால் பல நிறுவங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் ஓய்வு வழங்கி விட்டு , மிகுதியாக உள்ள ஊழியர்களை கசக்கி புழி கிறார்கள் .இதனால் சில ஊழியர்கள் பல நாட்களுக்கு தினமும் 12 மணித் தியாலங்களுக்கு மேல் அலுவலகங்களில் வேலை செய்ய நேரிடுகிறது . இவ்வாறு அதிக நேரம் வேலை செய்கையில் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவர்களால் effective ஆக வேலை செய்ய முடியாது போகிறது 


இவ்வாறு அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய சில விளைவு களையும் , இந்த விளைவுகளில் இருந்து  எவ்வாறு  தப்பித்து கொள்வது என்பதை பார்க்கலாம் .

 

தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஊழியருக்கு ஏற்படக் கூடிய விளைவுகள்

*உடற்பயிற்சி இல்லாமையால் உடல் நிலை மோசமடைதல்

*Heart attack , heart disease , Stroke
*வயிற்று வலி
*மனைவியை பிரிந்து வாழ வேண்டிய நிலை [ Divorce ]
*பிள்ளைகளின் நலத்தில் கவனம் கொள்ளாமை
*சமூக வாழ்க்கை பாதிக்கப் படுத்தல்

வேலை வழங்குவோருக்கு [ Employer ]ஏற்படக் கூடிய பாதிப்பு



*ஊழியர்கள் தங்களால் செய்யகூடிய வேலைகளை விட அதிக வேலைகளை செய்ய ஒத்து கொள்கிறார்கள்

*இவ்வாறான ஊழியர்கள் மற்றைய ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புவது இல்லை .

 

எப்படி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது


*முதலில் எந்த வேலைகளை நாங்கள் நிறுத்த வேண்டும் என்பதை குறித்து கொள்ள வேண்டும் . சிறிய வெற்றிகளை தரக்கூடிய வேளைகளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும் .

*சில வரையறைகளை [ Boundaries ] நிர்ணயித்து கொள்ள வேண்டும் .எல்லா வேலைகளயும் செய்து கொடுக்காது எங்களுக்கு என்ன பகுதி கொடுக்கப் பட்டுள்ளதோ அதை மட்டுமே செய்ய வேண்டும் . மற்றயவைக்கு :" NO " கூறி விடுங்கள்.ஆனால் இதை  நடைமுறையில் செய்வது கடினம் .

  
*சில விடயங்களை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்க முடியாது . இதனால் முதலில் எவற்றை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்கலாமோ அவற்றை செய்வதே நல்லது .

  
*செய்ய வேண்டிய வேலைகளை தனியாக செய்யாது ஒரு 5 அல்லது 6 பேருடன் பகிர்ந்து ,சேர்ந்து செய்ய  பழகி கொள்ள வேண்டும் .

  
*நீங்கள் நினைக்கும் எதையும் அடையக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவசரப் படாது , நிதானத்துடன் ,செல்லும் பாதையை மாற்றாது உங்களின் இலக்கை வெற்றியுடன் சென்று அடையுங்கள் .

  
*தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களை ஆரம்பித்திலேயே plan பண்ணி விட்டு , அதனை செயல்படுத்த கூடியவாறு நடைமுறை வடிவத் திற்கு மாற்றி அமையுங்கள் .

  
*சில வேலைகளை ஒரே நேரத்தில் ஒன்றாக செய்யகூடியதாக இருக்கும் எனவே இவற்றை தனித்தனியே செய்வதை விட , இவ்வாறான விடயங் களை முதலிலே கண்டறிந்து ஒன்றாக செய்ய பழகிக் கொள்ளவேண்டும்

  
*சிலர் வேலைத்தளத்தில் இருந்து வீடுக்கு வந்தாலோ அல்லது விடுமுறை காலங்களிலோ , அப்போதும் கூட அலுவலகத்தையே நினைத்து கொண்டு இருக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட பழகி கொள்ள வேண்டும்

  
*சில வேலைகளை செய்வதில் எங்களுக்கு ஆர்வம் இருப்பது இல்லை. எனவே எந்த வேலையை செய்யும் போது எங்களுக்கு பூரண திருப்தி வருகிறதோ அவற்றை செய்வதே நல்லது .

 

இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து வருபவர்களுக்கு

*எங்களின் உயர் அதிகாரியுடனோ ,அல்லது மேற்பார்வையாளருடனோ  பிரச்சனைகளை கலந்துரையாடி தனியாக நேரம் செலவிடவேண்டி உள்ளதை குறிப்பிடலாம் .

*குறுகிய கால இலக்குகளில் அதிக கவனத்தை செலுத்தாது ,நீண்ட கால இலக்குகளில் கவனத்தை செலுத்துவதே நல்லது . எது முக்கியமான விடயம் என்பதை மீண்டும் , மீண்டும் பரிசீலிக்க வேண்டும் .

*வீட்டில் உள்ள போது இயலுமான அளவு தேவையற்ற அலுவலக தொலை பேசி அழைப்புகளை தவிர்த்து கொள்வதே நல்லது. சில வேலைகளுக்கு இது சரி வராது

*உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஏனோ தானோ என்றில்லாமல் , அதிக அளவு நேரத்தை செலவிட வேண்டும்

*வேலை செய்யாத நேரங்களில் படுத்து நித்திரை கொள்ளாமல் , சமூக இணைய தளங்களிலோ அல்லது வேறு எதாவது பொழுது போக்கு நடவடிக் கைகளில் ஈடுபடுவதே நல்லதாகும் .

*எவ்வளவு வேலை பளு இருந்தாலும்  காலையிலும் , மாலையிலும் உடற் பயிற்சி செய்வதை மறந்துவிட கூடாது .
  
*தேவையான அளவு நித்திரையை கொள்ள வேண்டும் , காலை உணவை உண்ணாது விடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் .

*உங்களுக்கு தரப்படும் இடைவேளை நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் .மதிய இடைவேளையின் போது சிறிதளவு தூரம் நடப்பது மிகவும் சிறந்தது

 

வருடத்திற்கு அதிக அளவு நேரம் வேலை செய்யும் ஊழியர்களை கொண்டுள்ள சில நாடுகள்
 

*Russia
*Greece
*Japan
*Turkey
*China
*India

        .

11 comments:

Unknown said...

வேலையே செய்யாம இருக்கனும்னா.. இதெல்லாம் விட ஒரே வழி மேலதிகாரிகளைக் காக்கா பிடிக்கனும்.. அதுதான் நமக்கு வராதே.. :-)

nis said...

உண்மைதான் பாபு :)

Unknown said...

எனக்கும் 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒரு BPO வில் வேலை செய்த அனுபவம் உண்டு. ஒழுங்கற்ற தூக்கம், உணவுப்பழக்கம் காரணமாக வேலையை விட்டா பின்னரும் 2 மாதங்கள் அந்த தாக்கத்திலிருந்து விடுபடவில்லை! :-)

அன்பரசன் said...

அவசியமான பதிவு...

Philosophy Prabhakaran said...

தொடர்ச்சியாக ஏழு மாதங்கள் நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு இப்போது இரவுகளில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...

nis said...

@ஜீ...
@philosophy prabhakaran
ம்ம் பாதிப்புதான் .

நன்றி அன்பரசன்

Anonymous said...

ஆரோக்கியமான பதிவு..அருமை!

ஆமினா said...

நல்ல பதிவுங்க. பாபு சொன்ன மாதிரி காக்கா பிடிக்கிறது தான் நல்ல டிப்ஸ்!!!!

சசிகுமார் said...

உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நச், நான் விரும்பி படிக்கும் தளங்களில் உங்களின் தளமும் ஒன்று.

nis said...

மிகவும் நன்றி நண்பர்கள்

padaipali
ஆமினா
சசிகுமார்
:)))

Unknown said...

All are good friend.

Watch Tamil Rhymes online www.funtamilvideos.com/kids

Post a Comment

Related Posts with Thumbnails