கடலிற்குள் குடும்பம் நடத்த வேண்டிய நிலை

Share
 
இயற்கையுடன் முன்னுக்கு பின்னாக முரண்பாடாக நாம் செய்த,செய்து வரும் நடவடிக்கைகளால் இயற்கையின் சீற்றங்களை மிக விரைவில் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டிருக்கிறோம். 2012  திரைப்படத்தில் காட்டப் பட்டவாறு உலகம் அழிய வாய்ப்புகள் இருப்பதாக பயப்பட தோன்றுகிறது.  
INDONESIA வை தொடர்ந்து உலுக்கி வரும் நில நடுக்கங்கள்.மிக அண்மையில் சீனா,பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு,நில சரிவு, ரஷ்சியாவில் பரவிய காட்டுத் தீ இந்த சந்தேகங்களை உருவாக்குகிறது. இன்னொரு சுனாமியை எந்த ஒரு நாடும் தாங்கி கொள்ளும் நிலமையில் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக பல நாடுகள் கடல் நீரினுள் மூழ்கி கொள்ளும் அபாயங்களும் ஏற்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இருந்தே மாலை தீவுகள் தான் மூழ்க போவதாக கூறிவந்தாலும்,தற்போது மேலும் சில நாடுகள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

Tuvalu

இந்த இடத்தில் 10000 மக்கள் வசித்து வருகிறார்கள்.கடல்மட்டத்தில் இருந்து 2 மீற்றர்கள் மட்டுமே இடை வெளி காணப்படுகிறது.1989 ஆம் ஆண்டில் U.N இன் அறிக்கையில் இந்த இடம் 30-50 வருடங்கள் மட்டமே இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்கள்.

Egypt


இங்கும் மிகவும் வேகமாக கடல் நீரின் மட்டம் அதிகரித்து வருகிறது.மிகவும் தாழ் நிரபரப்புகளில் கட்டங்களை கட்டியும், அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருகிறமையே இதற்கான காரணமாக உள்ளது.

Philippines


இங்கு கடற் கரை ஓரமாக உள்ள மக்களை மட்டுமல்லாது,நெல் பயிர்ச்செய்கை நிலங்களையும் மூழ்கடித்து மக்களின் ஒட்டுமொத்தமான வாழ்க்கைக்கும் உலை வைத்து வருகிறது.ஆரம்பத்திலே 20% கடல் நீர் மட்டுமே உட்புகுந்திருந்தது. தற்போது இது 80% ஆகிவிட்டது.

Maldives


விரவில் கடலிற்குள் மூழ்கி விடும் நாடுகளில் இது தான் முதல் இடத்தை பெற்று கொள்கிறது.எல்லா உலக நாட்டு தலைவர்களிற்கும் முன் மாதிரியாக கடந்த வருடம் இந்த நாட்டின் அதிபர் கடலிற்கு அடியில் cabinet meeting வைத்து மற்றைய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

Barbados


இந்த சிறிய தீவு மிக முக்கியமான பொருளாதார அபிவிருத்திகளையும், கட்டடங்களையும், அதிகமான விவசாய நிலங்களும் கடற்கரைகளை அண்மித்து இருப்பதால் கடல் நீர் இவற்றை அண்மிக்கும் தறுவாயில் இங்கு மக்கள் இருக்க கூடிய சந்தர்ப்பம் முற்றிலும் இல்லாமல் போக போகிறது.


எமக்கு தெரியாமலேயே எல்லா உலக தலைவர்களுமாக சேர்ந்துகடலிற்கு அடியில் வாழ்வதற்கு சொகுசு வீடுகளையும்,நீர் மூழ்கி கப்பல்களையும் கட்ட தொடங்கி இருப்பாங்களோ? 

வாங்க எல்லோருமா ஒருக்கா கடலுக்கள்ள போய்த் தான் பார்ப்போம்.என்ன தான் கீழ பண்ணிறாங்க எண்டு. BP என்னத்த கள்ளத்தனமா கட்ட போய் வெடிச்சுதோ?

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails