காதலிகளின் இம்சைகள்

Share
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது.அதிலும் சாமர்த்தியமாக முதலிலேயே "உங்களிற்கு எந்த விளையாட்டு, எந்த அணி,எந்த வீரர் பிடிக்கும்" என போட்டு வாங்கி விட்டு "ஐயோ எனக்கும் இது தாங்க பிடிக்கும், என்ன ஒரு பொருத்தம்" என பாசாங்கு காட்டுறது.

 பெண்கள் தங்களுடய காதலன் தன்னை தவிர மற்றைய பெண்களை பார்க்க கூடாது என்ற எண்ணத்தை கொண்டவர்கள். காதலிக்க ஆரம்பித்த மறுகணமே ஆப்பு வைச்சிடுவாங்க.எவ்வளவு நேரம் தான் ஒரு முகத்தையே பார்ப்பது என்று,பக்கத்தாலே போற பெண்களை சைற் அடித்தால், காதலித்த புதுசில் கண்டும் காணாதது போல தான் இருப்பாங்க, போக போக தான் காதலியின் சுயரூபம் தெரியும்.இன்னொரு சொர்ணா தான்.பிறகென்ன Road ல மண்ணை பார்த்த படி தான் போகணும்.

ஆண்கள் எப்பவுமே பாவமப்பா.நாங்கள் ஒரு பெண்ணை பார்த்தால் ,முகம் பொசுங்கிற அளவிற்கு முறைச்சு பார்க்கிறது.ஆனால் தாங்க மட்டும் தங்களுடைய நண்பர்களை கண்டால் மட்டும் பாய்ந்தடித்து கட்டியணைப்பது. யாரு என்று கேட்டால் நண்பன் என்பது.எங்களுக்கு தானே தெரியும் அந்த நண்பன் எப்படியான மன்மதன் என்று.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".

 பெண்கள் சொல்லும் பொய்களில் இது தான் மிகவும் முக்கியமானது.எவ்வளவு தான் பிடித்து இருந்தாலும்,பிடிக்காதது போல காட்டி வெறுப்பேற்ற செய்வதில் இவர்களிற்கு அப்படி ஒரு கொண்டாட்டம். பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்.தாங்கள் எப்போதுமே Serious ஆக இருப்பதாக காட்டி கொள்வதற்காக காரணமே இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய காரணத்தை சாட்டாக வைத்து உயிரை எடுக்கிறது.

பெண்கள் காதலிக்க ஆரம்பித்தவுடன், காதலனனின் நண்பர்கள் அதிக நேரம் தங்களுடன் இருப்பதை விரும்புவது கிடையாது.இதையும் மீறி படம் பார்க்கவோ அல்லது மது அருந்தவோ தினமும் நண்பனின் வீட்டிற்கு சென்றால் மறைமுகமான தாக்குதல்களை எதிர் கொள்ள நேரிடும். 
 
இப்படித்தான் எனது நணபன் ஒருவன் தனது நண்பனின் வீட்டுக்கு மல்யுத்த விளையாட்டு TV யில பார்க்க போய் முகம் எல்லாம் இரத்தமா வந்தான். என்னடா இப்படி வாற மல்யுத்த விளையாட்டை பார்த்து உணர்ச்சி வசப் பட்டு மண்டையை எங்காவது மோதி விட்டாயா என கேட்க அவன் சொன்னான் "படுபாவி அவள் வேண்டுமென்றே நிலத்தில தண்ணிய ஊத்தி விழ வைச்சிட்டாளடா"

காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான்.ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் அவஸ்தைகள் பல.
 
இதை எழுதேக்க எனக்கும் மன்மதனை போல மூக்கால இரத்தம் வருது.வெளியில போனா பிறகு எங்கயெல்லாம் இரத்தம் வர போதோ?.

10 comments:

"தாரிஸன் " said...

சாருக்கு...நிறைய அனுபவமோ.........

dheva said...

பின் புலத்தில் சரியான அனுபவம் இருக்கிறது போல....ஹா...ஹா..ஹா...வாழ்த்துக்கள்!

RVS said...

இந்த மாதிரி பண்றதெல்லாம் காதல் பிசாசுங்க... சரியா... உதித் னாரயன் மாதிரி "காதல் பிசாசே.. காதல் பிசாசே .... பருவாயில்லை..." பாடினா அடங்கிடும். சரியா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

னாரயன் இல்லை. நாராயண் அப்படின்னு முன்னாடி போட்ட பின்னூட்டத்துக்கு இது ரீஜாயின்டர்.

அன்புடன் ஆர்.வி.எஸ்

nis (Ravana) said...

நன்றி தாரிஸன்,dheva,RVS

பதிவுலகில் பாபு said...

ரசிச்சு படிக்கறமாதிரி இருந்தது..

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

nis (Ravana) said...

நன்றி பாபு

அஹமது இர்ஷாத் said...

ம்ம்ம்..

Balaji saravana said...

:)

Post a Comment

Related Posts with Thumbnails