குறைந்த செலவில் காதலியை பராமரிக்க

Share
சனி,ஞாயிற்று கிழமைகளில் கடல் கரைக்கு சென்று சும்மா மணலிலோ, மறைவாகவோ உட்கார்ந்து இருக்காமல், கடலிற்கு போகும் போதே உங்கள் காரிலே Boat ஐ எடுத்து சென்று இரவாகும் வரை நடுக்கடலில் சுற்றி வந்தால் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாது, தானாகவே ஏதாவது அரிய வகை கடல் பொருட்கள் வந்து சிக்கி கொள்ளும் . 

சும்மா கடைக்கு சென்று இதய வடிவான பொருட்களை வாங்கி கொடுப்பதை விட, நடு கடலில் வைத்து கடலில் இருந்து எடுத்த அரிய வகை பொருட்களை பரிசாக கொடுத்தால் உங்கள் காதலின் ஆழத்தை காட்டவும் ஒரு சந்தர்ப்பம். சுனாமி வந்தால் சுனாமி வேகத்தில பத்திரமா கரைக்கு வந்து சேந்திடுங்கோ.

 வார இறுதி நாட்களில் உணவு விடுதிகளிற்கும்,களியாட்ட விடுதிகளிற்கும் செல்லாமல் உங்கள் காதலியை உங்களின் வீட்டிலோ அல்லது காதலியின் வீட்டிலோ முழு நேரத்தையும் செலவிடுங்கள்.இரவு சாப்பாட்டை நீங்களே தயாரித்து விடுங்கள். சமைப்பதிலில் வல்லுனராக இல்லா விட்டாலும் பரவாயில்லை.

உணவு விடுதிகளில் நாய்,பூனையை பயன்படுத்துவதால் அவர்களின் சாப்பாட்டை போல எம்மால் ருசியாக[Taste] சமைக்க முடியாது தான். எப்பாடு பட்டாவது உங்கள் சமையலையும், அந்த நாட்களையும் மறக்காத அழவிற்கு காதலிக்கு ஏதாவது ஏடா கூடமாக செய்து விடுங்கள். அப்புறமென்ன உங்களின் வீட்டலேயே காதலியின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வையுங்கள்.

மிருக காட்சி சாலைக்கு சென்றால் எல்லா வகையான மிருகங்களையும், வித்தியாசமான மரங்களை பார்க்கலாமே தவிர அவற்றை வாங்கித்தா என கேட்க முடியாது.உங்களுடன் உடன் பட்டு கொள்ள முடியாத சில விடயங்களை அப்படியே புல் தரையிலே இருந்து பேசி தீர்த்து விடுங்கள்.

இல்லாவிடில் புடவை கடைக்கோ, அழகு சாதன கடைக்கோ சென்று பல ஆயிரங்களையோ, $ களையோ செலவிட நேரிடும்.மிருகங்களை பற்றி அவ்வளவாக ஒரு விடயங்களும் தெரியா விட்டாலும், எதையாவது சொல்லி உங்களை Active ஆக காட்டி கொள்ளுங்கள். உங்களிற்கு சண்டை போட ஆசையாக இருந்தால் அங்குள்ள குரங்கையும் காதலியையும் ஒப்பிட்டு பாடல் ஒன்றை பாடிவிடுங்கள்.

அனேகமான பெண்களிற்கு Cricket என்றாலே கடுப்பாகி விடுவாங்க. பொழுதை போக்க  Cricket  விளையாட கூப்பிட்டால் Bat ஆல மண்டையில போட்டு விடுவாங்க வேலைக்கு சென்று திரும்பி வரும் வழியிலேயே மடக்கி பிடித்து உங்களை அழகு சாதன கடைகளிற்கு அழைத்து சென்று விட்டால் , பணப்பைக்கு சங்குதான், Pool விளையாட்டை பல பெண்கள் விரும்புவதால்

இரவிற்கு Pool Club ற்கு அழத்து சென்று விடுங்கள். நீங்கள் இதில் Expert ஆக இருந்தால் விளையாட ஆரம்பிக்க முன்னரே Bet கட்டி விடுங்கள்.காதலியின் தோற்ற பணத்தை கொண்டே இன்னொரு நாளிற்கு வருந்து வையுங்கள்.சாப்பாட்டு விருந்தா? அல்லது வேறு ஏதாவது விருந்தா என நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா.

திரைஅரங்குகள் படம் பார்க்க உதவுவதோடு மட்டுமட்டமல்லாமல், காதலை செங்கல் வைத்து வானுயர கட்டி எழுப்பவும் உதவுகிறது.பகலில் செல்வதை விட இரவில் செல்வதே இன்னமும் உதவியாக இருக்கும்.படம் தொடங்கிய உடனேயே காதலியின் வாயக்குள் Soda வையும்,கைக்குள் pop corn ஐயும் திணித்து விடுங்கள்,

இதை விடவா எங்களிற்கு குறைந்த விலையில் திரை அரங்கில் உணவு கிடைக்க போது.கொலைகள் கூடிய வன்முறையான படங்களிற்கு அழைத்து சென்றால் படம் முடிந்த பின் இரவில் அங்கே இங்க சுத்த கேட்காமல் வீட்டுக்கே வர வைத்து விடலாம்.இதை தொடர்ந்து செய்து வந்து காதலியிடம் மாட்டிக் கிட்டால் கும்மாங் குத்து தான்.

15 comments:

சிங்கக்குட்டி said...

:-)

அன்பரசன் said...

//கொலைகள் கூடிய வன்முறையான படங்களிற்கு அழைத்து சென்றால் படம் முடிந்த பின் இரவில் அங்கே இங்க சுத்த கேட்காமல் வீட்டுக்கே வர வைத்து விடலாம்.இதை தொடர்ந்து செய்து வந்து காதலியிடம் மாட்டிக் கிட்டால் கும்மாங் குத்து தான்.//

Super maa..

புதிய மனிதா said...

அசத்திட்டீங்க ..

dheva said...

நீங்க சொல்றது எல்லாம் சரி பாஸ்... இது எல்லாம் வீட்டம்மாவிற்கு தெரிஞ்சா இல்ல தெரியாம செய்யணுமா? அவ்வ்வ்வ்வ்வ்!

நல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கு !

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

எல்லாத்தையும் ரெடிபண்ணிட்டேன்

ஆள் கிடைச்சா ட்ரை பண்ணி பாத்திடுவேன்

Anonymous said...

ஏம்பா இவ்வளவு முக்க வேணும்? ஒரு பணக்கார குட்டிய பாத்து மடக்கி போட்டால் ஒரு பிரச்சனையும் இல்லையே

nis (Ravana) said...

நன்றி சிங்கக்குட்டி,அன்பரசன்,புதிய மனிதா,dheva ,VELU.G

@dheva எல்லாம் திருட்டுதனமாத் தான் :)

@VELU.G ட்ரை பண்ணுங்க :)

@Anonymous பாத்து, முரட்டு அண்ணாமார் இருப்பாங்க. அப்புறம் கஞ்சா Case தான்

ம.தி.சுதா said...

அசத்திறிங்கப்பா.... எனக்கு வாக்கிட்ட ஒரு குற்றத்திற்காக தமிழ் 10 ல் உள்ள உங்க முழு ஆக்கமும் பார்த்து ஓட்டு குத்தி விட்டிருக்கிறேன்....

பதிவுலகில் பாபு said...

Nice post..

nis (Ravana) said...

நன்றி சுதா :)
நன்றி பாபு

RVS said...

ம்.. நல்லா இருக்கு.. நீங்க இதெல்லாம் ட்ரை பண்ணிட்டீங்களா? :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

nis (Ravana) said...

@ RVS நன்றி .
இன்னும் இல்லை :)

சிறுவாணிக் கரையினிலே... said...

காதலிகளுக்கும் இதே மாதிரி டிப்ஸ் கொடுப்பீங்களா. தாய்க்குலம் பாவம் அதான்

வேனு said...

சொந்த அனுபவம் போல தெரிகிறதே ?,..... எத்தனை பேர் ? அன்பரே !

ராசராசசோழன் said...

ம்...நல்ல அனுபவம் தான்

Post a Comment

Related Posts with Thumbnails