பெண்கள் குத்தும் குத்துகள்

Share

பெண் அடிமை  பெண் அடிமை என வாய் கிழிய கத்தினாலும் பல வீடுகளில் ஆண்கள் தான் வாயில்லா பூச்சிகளாக அடிமைகளாக போய் இருக்கிறார்கள். உண்மையில் பெண்களின் திறமை அப்படி.சர்வாதிகார தன்மை அவர்களுக்கே உரிய குணம்.அதனால் தான் பல நிறுவனங்கள் "HR manager " ஆக ஒரு பெண்ணை வைத்திருக்கின்றன.

குறிப்பாக அவர்களின் பலம் அவர்களின் வாய். ஒரு ஆராச்சி கூறுகிறது எப்படி விலங்குகள் மற்றையோரின் கவனத்தை திருப்ப சத்தமாக ஒலி எழுப்புகின் றனவோ அதேபோல்  பெண்களும் அதே திறமையை பெற்றுள்ளனர். நிலமைக் கேற்றால் போல் தொனியை மாற்றி கருத்தை திணிக்க வல்லவர்கள். வார்த்தைகள் + சத்தம் = சாதித்தல்


அப்படி பொதுவாக காதலனோ அல்லது கணவனோ தமது அன்புக்குரியவளி டமிருந்து எதிர்பார்க்கவேண்டிய வார்த்தைகளும்  அவற்றின் உண்மை யான  பயங்கர தன்மையும், எப்படிதற்காத்துக் கொள்வது எனபது பற்றியும் சுருக்கமான ஒரு பார்வை. "வருமுன் காப்பது நன்று"

1 ." இப்ப நான் கதைக்க வேண்டி இருக்கு "
 

இது தான் பெண்கள் பயன்படுத்தும் கொடிய ஆயுதம்.அதாவது ஆண்களை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து  தனது கருத்துக்களை திணிக்க பயன்படுத்தும் ஆயுதம்.புத்திசாலியான ஆண் இப்படியான ஒரு வார்த்தையை கேட்டால் தனது முழு ஆத்மாவையும் அவள் சொல்வதை கேட்கவே அர்ப் பணித்து விடுவான்.அந்நேரத்தில் Phone நோண்டுதல்,வேறு எங்காவது கவனத்தை திருப்புதல் பிழைக்க தெரியாதவன் செய்யும் வேலைகள்

2 ." நீங்கள் சொல்லுறது சரி தான் "

 

இப்படி ஒரு வார்த்தையை கேட்டாலே தலையை கொண்டது போய் சுவரோட மோத வேண்டியது தான்.அப்படி தான் செய்ய தோன்றும். ஏனென்றால் இப்படி கருத்து பட சொல்வதின் அர்த்தம் "உன்னை மாதிரி தான் உனது வேலைகளும் எப்ப தான் ஒழுங்கா செய்தாய்" என்பது தான். இதன் வலி முகத்தில இரண்டு அறை வாங்குவதிலும் அதிகம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தான் தெரியும். "போதும் பொத்திக்கிட்டு போ" என்று சொல்லாமல் சொல்வது தான் இது.

3. " என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ரொம்ப தான் முக்கியமா ? "

 

இப்படி கருத்துப்பட சொல்லும் வர்ர்தைகள் இன்னொரு தாக்குதல் வகை. அதாவது நிங்கள் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒண்ணை பண்ணிக்கொண்டு இருப்பீர்கள்.சிலவேளைகளில் அது வெட்டியாகவும் இருக்கலாம்.அது வேற கதை.ஆனால் அவளுக்கு அதனால அரு பயனும் இல்லை என்றால் அல்லது அவளுக்கு வேறு ஏதாவது வேலை உங்களால் ஆக வேண்டும் என்றால் இப்டியான வார்த்தைகளை கேட்க முடியும்.என்ன ஒரு அடக்கு முறை.

4. " நான் நல்லாத்தான் இருக்கிறன்"
 

சிலவேளைகளில் ஆண்கள் பெண்களின் மன நிலை சற்று பிழையாக இருக்கிறதே என விசாரிக்க போனால் வரும் பதில் தான் இது.அதாவது அது பற்றி உங்களுடன் கதைக்கும் மன நிலையில் இல்லை என்பது தான் அர்த்தம். ஆனால் நிச்சயமாக அவளுக்கு ஏதும் சிக்கல் இருக்கும்.ஆனால் நீ இதை பற்றி கவலைப்படாதே அது பற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என மறைமுகமாக அச்சுறுத்த வரும் வார்த்தைகளே இவை.

5. " ஒண்ணுமில்லை "
 

ஏதாவது பிரச்சனையா என கேட்கும் பொது உடனடியாக இப்படியான பதிலை கேட்க நேரிட்டால்  மனதில் அபாய சங்கு ஊத வேண்டும்.ஏனெனில் எங்கோ உள்குத்து உள்ளது என்று தான் பொருள் படும்.எனவே மீண்டு மீண்டும் அது பற்றி கேட்டு உள்ளமனதில் உள்ளதை வெளிக்கொணர வேண்டும் என்று ஒரு ஆணை Alert பண்ணுவதாக அமையும்.ஒண்ணும இல்லை என்றால் பெரிய ஆப்பு ஆகி விட்டது என்பது தான்.

6."  நீங்களே சொல்லுங்க "
 

ஆண்கள் மிகவும் இந்த வார்த்தைகள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வார்த்தைகள் தூண்டில் போன்றவை.அதாவது ஆணின் வாய் எனும் கடலில் இருந்தது "இல்லை பரவாயில்லை நீயே முடிவு செய்து கொள்" எனும் வார்த்தைகள் எனும் மீனை பிடிக்க போடப்படும் தூண்டில். எனவே ஆண்களை சிக்க வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு மயங்கி வார்த்தைகளை விட்டால் பலன் படு பயங்கரமாக இருக்கும். உடனே சரி என்று விடுங்கள்

7. " இன்னைக்கு என்ன நாள் என்று தெரியுமா? "
 

இப்படியாக நீங்கள் கேட்க நேரிட்டால் கவனமாக இருக்க வேண்டும். சில வேளைகளில் உங்களால் சொல்ல முடிந்தாலும் பல வேளைகளில் சொல்ல  முடியாது.ஆனால் முட்டாள் தனமாக தெரியாது என்று சொல்லி தொலைக் காமல் பொதுவாக சிரித்து மழுப்பி வாயை மேற்கொண்டு திறக் காமல் எஸ்கேப் ஆகி விடிவது தான் நன்று.முடிந்தால் அது என்ன நாள் என்று அவள் வாயாலேயே வருமாறு போட்டு வாங்கி விடுங்கள்.

8." நான் சொல்றதை கேட்கிறீங்களா இல்லையா "
 

இப்படியான கருத்து பட சொல்வது உங்களின் முழு கவனத்தையும் இழுப்பதற் கான அஸ்திரம்.இப்படியான வார்த்தைகளை கேட்டதும் உஷாராகி விட வேண்டும் அல்லது விடின் "நீங்க  எப்பதான் நான் சொல்றதை கேட்டிருக்கீங்க", "நான் சொல்றதை யார் கேட்கினம்", "நீங்க என்னை எங்க புரிஞ்ச்சு புரிஞ்சு கொல்றீங்க அம்மா வீட்டுக்கு போறான் "என்ற மொக்கை களுக்கு காதால் ரத்தம் வடிய நேரிடும். சோ சில நிமிடங்களை தியாகம் செய்வது future இக்கு நலம்.

மேற் கூறப்பட்டவை ஒரு துளி. மேலும் ஆயிரம் ஆயிரம் வார்த்தை கணைகள் நடை முறையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை வெளிக் கொணரும் போது தான் நாமும் அவற்றை அறிய கூடியதாக இருக்கும்.

12 comments:

எஸ்.கே said...

Nice! Nice!

Anonymous said...

super nanbaa!!!

Praveenkumar said...

அருமையாக சொல்லியிருக்கீங்க..!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பரே சூப்பரா சொல்லியிருக்கீங்க/...

அன்பரசன் said...

நல்ல கருத்துக்கள்.

சிவராம்குமார் said...

செம செம!

Unknown said...

நன்றி

ஓட்டு போட்டாச்சி

ஷஹி said...

ரொம்ப அவஸ்த பட்டிருப்பீங்க போல தெரியுது..ஆழ்ந்த அனுதாபங்கள்..(இதுல குத்தெல்லாம் ஏதும் இல்லீங்க!)

Unknown said...

அருமையா அனலைஸ் பண்ணியிருக்கீங்க.. சூப்பர் சூப்பர்..

Philosophy Prabhakaran said...

பயனுள்ள தகவல்கள்... உங்கள் சொந்த அனுபவங்களா...

Unknown said...

ஹி ..ஹி .. அனுபவம் பேசுது ..

Anonymous said...

EXTRAORDINARY.. EXCELLENT..!!!

Am gonna forward it to all of my friends..

Plz. teach some more words..

Post a Comment

Related Posts with Thumbnails