கடுப்பு பிடித்தவர்களுக்கு இப்படி தான் செய்ய தோணும்

Share

உலகில் பல மூலைகளிலும் பல குற்றங்கள் ஒவ்வொரு நொடியும் நடந்து கொண்டிருக்கும்.அவை நம் காதுகளை எட்டும் பொது நம்மை முகம் சுளிக்க வைக்கும் ஆனால் சில நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து காமடி பீசு என சொல்ல வைக்கும்.அப்படிப்பட்ட அண்மையில் நடந்த சில காமடி குற்றங்கள்.நடந்தது என்ன? வாசியுங்கள்.


1 .இனிப்புத்திருடன்

Florida வை சேர்ந்த 47 வயதான DiVanna,என்பவர் அயலவரிடம் இனிப்பு கேட்டு இருக்கிறார்.அயலவர்கள் கொடுக்க மறுக்க விரக்தியடைந்த இவர் குழந்தைகள் போல உடையணிந்து அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகளால் அழுதவாறு கேட்டுக்கொண்டபோது போலிஸ் கைது செய்து இருக்கிறது.இவர் பம்பர் வேற கட்டி இருந்தாராம்.


2 .மனிதன் - நாய் காதல்

Georgia, இல் உள்ள ஒரு இடத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டடத்தின் அயல வர்கள் உள்ளிருந்து பெரிய விசித்திரமான சத்தங்கள் வருவதை அவதானித்து போலிசை அழைத்திருக்கிறார்கள்.போலிஸ் உள்ளே நுழைந்த பொது 39 வயதான Henry Ivey என்பவர் நாய் ஒன்றுடன் செக்ஸ் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அந்நபரை கைது செய்தனர்.


3 .சைக்கிள் திருடன்

New York சேர்ந்த ஒருவர் சைக்கிள் இல் சென்று கொண்டிருந்த பொது சேவல் வேடமிட்ட மூன்று நபர்கள் அவரைதாக்கி அவரது சைக்கிளை திருடி சென்று விட்டனர்.யாரவது சேவல் அல்லது கொரில்லா வேடமிட்ட நபர்களை கண்டால் தமக்கு அறியத்தருமாறு போலிஸ் மக்களை கேட்டுள்ளது. நம்ம" கந்தசாமி வடிவேலா "இருக்குமோ?.


4 .போலிஸ் கிட்டயே

California வை சேர்ந்த 19 வதுடைய Ongley Raymond என்ற நபர் இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்து வீடு போகும் பொது போலிஸ் கார் போவதை கண்டு மரத்து லிப்ட் கேட்டிருக்கிறார்.போலிஸ் ஏற்ற முதல் எதாவது ஆபத்தானது வைத்து ள்ளாயா என கேட்க மப்பில் கொக்கைன் தான் உள்ளது என கூற ஜெயில்  இல் இருக்கிறார் பாவம்.


5 .நீ அந்த வேலைக்கு சரிவர மாட்டாய்

Virginia வை சேர்ந்த ஒரு உணவகத்தின் ஒரு முன்னாள் ஊழியர் திருடும் நோக்கத்தில் உணவகத்தின் காற்றோட்டத்துக்கான பாதை வழியாக உள் நுளைந்திருக்கிறார்.ஆனால் அவரது பெரிய உடற்பருமன் காரணமாக உள்ளே சிக்கி கொண்ட அவரை எட்டு மணிகளின் பின் போலிஸ் மீட்டு ஜெயில் இல் போட்டுள்ளது.


6 .ஒத்துக்கிறன் உன்னது பெரிசு தான்

நபர் ஒருவர் தனது ஜாக்கெட்டின் உள்ளே போதத்தால் ஒன்றை வைத்து எதோ ஆயுதம் ஒன்று உள்ளே உள்ளது போல பில்ட் அப் கொடுத்து திருடப்போக எரிபொருள் நிரப்பு நிலைய காரன் நிஜ துப்பாக்கிய தூக்க சரண்டர் அக்கிட்டுது. ஒரு படத்தில் வடிவேலு கத்தியை காட்ட கண்டக்டர் அரிவாளை தூக்குவரே அதுபோல.


7 .அஜாரகம்

Florida வை சேர்ந்த ஒரு நபர் தனது வீடு முற்றத்தில் அழகாக்கும் வகையில் கஞ்சா செடிகளை பய்ரிட்டு இருக்கிறார்.ஆனா போலிஸ் மனதில என்ன தோணிச்சோ ஆளை தொக்கி கொண்டது பொய் கஞ்சா கேசில உள்ள போட்டுட்டுது. இவர் கஞ்சா நடுவார் போலிஸ் என்ன வந்து உரமா போடும் உள்ள தான் போடும்.


8 .இப்படியும் ஊழியர்களா

Chicago வை சேர்ந்த மூன்று பேர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பில் கட்டாமல் கம்பி நீட்ட உணவக ஊழியர் ஒருவர் Peter Crotty இவர்களை துரத்தி சென்று இவர்களின் கார் மேல் ஏறிவிட்டார்.போலிசும் யாருடா இவன் கார் மேல தொங்கிகிட்டு போறான் என காரை மறிக்க மூணு பெரும் மாட்டிக் கிட்டாங்க.இவருக்கு அக்ஷன் பட வாய்ப்பு உள்ளது.


9 .பிளான் பண்ணி பண்ணாட்டி இப்படி தான்

36 வயதுடைய Gregory Liascos என்பவர் ராணுவ சினைப்பர் வீரன் போல உடை அணிந்து அரும் பொருட் காட்சியகம் ஒன்றின் பாத்ரூம் இலிருந்து தங்க குவியல் உள்ள இடத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளார்.ஆனால் இவர் தோண்டிய இடத்தை சுத்தப்படுத்தாதால் பாதுகாப்பு ஊழியார் கண்டது பிடித்து போலிசை வரவழைத்து விட்டார்.


10 .வந்த வந்த வேலைய மட்டும்

Chicago வில் நடந்த விருந்து ஒன்றில் 21 வயதுடைய Reyes, என்பவர் சூப்பர் மான் வேடமிட்டு விருந்தினரை மகிழ்ச்சிபடுத்த வந்தார்.ஆனால் விருந்தில் அப்படி இப்படி என்று கொஞ்சம் இருக்க மப்பு ஓவராய் போய் சுபெர்மன் bad man ஆகி விட்டார்.சோடா பாட்டில் சைக்கிள் செயின் என்று கலாட்டா பண்ண இரவு முழுக்க ஜெயில் இல கிடந்தார்.

பிழையாக விழும் தகர்க்கப்பட்ட கோபுரம் - வீடியோ



.

5 comments:

Anonymous said...

//ஆளை தொக்கி கொண்டது பொய் கஞ்சா கேசில உள்ள போட்டுட்டுது //

what's this? hah

venkat said...

நல்லா இருக்கு ..

Philosophy Prabhakaran said...

எங்கே இருந்து சார் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி நியூஸ் எல்லாம் கெடைக்குது... கலக்குறீங்க போங்க...

ஹரிஸ் Harish said...

தகவல்கள் புதுமையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தன,,தொடருங்கள்..

அன்பரசன் said...

நல்ல தகவல்கள்

Post a Comment

Related Posts with Thumbnails