வாழ்கையில் ஒரு தடவையாவது செய்யநேரிடும் தவறுகள்

Share

வாழ்க்கையில் பலரும் பலவைகைப்பட்ட தவறுகளை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ செய்வர். பெரும்பான்மையானோர் அப்படி அவர்கள் வாழ்கையில் நிச்சயமாக ஒரு தடவையாவது செய்திருக்கக்கூடிய அல்லது எதிர்காலத்தில் செய்ய கூடிய தவறுகள்.

1 .திருமணம் செய்தல்

திருமணம் புரிந்த எல்லா ஆண்களும் திருமணம் அவர்கள் வாழ்க்கையில் விட்ட பெரிய தவறு எனக்கூற கேட்டும் நாமும் அதன் விளைவுகளை விளங்கி கொன்டாலும் நிச்சயம் செய்திருப்போம்.அல்லது எதிர்காலத்தில் செய்வோம்.

2 .ஓவர் மப்பு

நிச்சயம் அநேகமானோர் வாழ்கையில் ஏதாவது ஒரு தடவையாவது விருந்து காரணமாகவோ/அல்லது துன்பம் காரணாமாக ஓவரா அடித்துவிட்டு ரகளை பண்ணுவார் அல்லது கவிழ்ந்தடித்து எதுவுமே தெரியாமால் வீழ்ந்து கிடப்பர்.

3 .தாறு மாறா வண்டி ஓட்டல்

எந்த வகை வண்டியாவது வைத்திருக்காலாம்.ஆனால் எதோ நினைப்பில் தவறாக ஒட்டி சென்று மோதி "பேமானி ஊட்டாண்ட சொல்லிட்டு வந்தியா" என்று திட்டு வாங்கியாகனும்.அல்லது போலீசிட்ட காசை தொலைக்கணும்.

4 .பலான மேட்டர்

நிச்சயம் அநேகமானோர் பலான ஐட்டம் பாத்தே இருக்கணும். சிலவேளை களில் அந்த மாதிரி இடத்துக்கு தனியாகவோ நண்பர்களின் தூண்டுதலில் போயிருக்கலாம்.அல்லது விடினும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது.

5 .செல்லப்பிராணியை தொலைத்தல்

சிலவேளைகளில் வீட்டு உறுப்பினர்களின் குறிப்பாக குழந்தைகளின் செல்லப் பிராணிகள் பெரும் தொந்தரவாக அமையும் பட்சத்தில் எங்காவது கொண்டு போய் விட்டுட்டு வந்து "ஓடி போயிட்டுது போல" என பொய் கூறல்.

6 .நூல் விடுதல்

வேலைத்தளத்தில் அல்லது வேறு எங்காவது ஏதாவது ஒரு பொண்ணுக்கு லைன் போட்டு இருக்கலாம்.அது பொது ஆனால் வேறமாதிரி பிளானோட லைன் போட்டு மாட்டிக்கிடுதல் தான் சிறப்பாக நடக்ககூடிய ஒரு விடயம்.

7 .பாவ்லா காட்டுதல்

அனகமானோர் முதற் தடவையாக இரவு விடுதிக்கு செல்லும் போது சம்பந்த மில்லாத ஆடை அணிந்து சென்று முதற் தடவையாக முக்கி முக்கி பீர் அடித்து, ஆட தெரியாமல் ஆடி அடுத்தநாள் நண்பர்களின் கேலிக்காளாகல்.

8 .ஆப்படித்தல்

பிடிக்காத ஒருவனைப்பற்றி இரகசியங்களையோ அல்லது இல்லாததும் பொல்லாததும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி சிக்கலில்மாட்டி வைத்து வஞ்சம் தீர்த்துக்கொள்ளல்.பிறகு ஒன்றும தெரியாதது போல் சென்று நலம் விசாரித்தல்.

9 .முன் எச்சரிக்கை

அநேகமானோருக்கு இப்படி அனுபவம் இருக்கும்.இன்றைக்கு நமது பேர்ஸ் காலியாக வாய்ப்புள்ளது என உணர்ந்து வேண்ட்டுமென்றே வீட்டில் வைத்து விட்டு சென்று மறந்து வந்திட்டேண்டா மச்சான் எனல்.சென்றாலும் சொற்ப பணத்துடன் செல்லல்.

10 . பிஸி ஆக நடித்தல்

வீட்டிலோ,அல்லது கல்லூரியிலோ,அல்லது அலுவலகத்திலோ நல்ல பெயர் எடுக்கவும் மேலதிக வேலைகளை பெறுவதில் இருந்து தப்பிக்கவும் ஏதாவது ஒன்றுடன் வேலையாக இருப்பது போல காட்ட பல தில்லாலங்கடிகள் செய்தல்.

11 .இன்னொன்றுக்கு முயற்சி

ஒருவர் காதலியோ அல்லது மனைவியோ உடன் இருக்கும் போதே இவர்களை விட இன்னும் அழகான ஒரு பெண்ணை காணும் போது மயங்கி மனைவி கூட இருப்பதையும் மறந்து ஜொள்ளு விட்டு மாட்டிக்கொள்ளுதல்.

12 .கெடுத்தல்

தமது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அடுத்தவன் இதனால் பாதிக்கப் படுவான் என தெரிந்தும் நேர்மையானவர்களை கூட லஞ்சமோ அல்லது லாவகமாகவோ கதைத்து ஐஸ் வைத்து தன்பக்கம் இழுத்து காரியத்தை முடித்தல்.

இன்றைய வீடியோ (காமடி பாடகி )


.

9 comments:

ஆர்வா said...

இதுல டாப்... முதல்ல நீங்க சொல்லி இருக்கிறதுதான் தலைவா..

அன்பரசன் said...

இதுல ஆறைத்தவிர எந்த தப்பும் நான் இன்னும் பண்ணலைங்க.

Unknown said...

நல்லா விவரமாத்தான் அலசியிருக்கீங்க...

ஹரிஸ் Harish said...

பப்ளிக்..பப்ளிக்..

nis said...

வந்து, கருத்திட்டு , வாக்களித்தமைக்கு நன்றிகள்
நண்பர்கள்

கவிதை காதலன்
அன்பரசன்
கே.ஆர்.பி.செந்தில்
ஹரிஸ்

Philosophy Prabhakaran said...

நீங்க சொன்ன எல்லாவற்றையும் செய்திருக்கிறேன்... திருமணத்தை தவிர...

Unknown said...

ஹா ஹா ஹா.. கரெக்டா சொல்லியிருக்கீங்க.. :-)

அழகி said...

நான் 11 நம்ப​ரை அதிகமாக ​செய்திருக்கி​றேன்....

Ramesh said...

ha ha ha நல்லா இருக்குங்க..

Post a Comment

Related Posts with Thumbnails