வாழ்கையை புரட்டிபோட்ட இணையம்

Share

அமெரிக்க ராணுவத்தால் மட்டும் ஆரம்பத்தில் பயனபடுத்தப்பட்டுக் கொண்டி ருந்த கணணி வலையமைப்பு அதாவது இன்டர்நெட் இன்று சிறு குழந்தை முதல் முதியவர் வரை கடை முதல் நாசா வரை பல்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் உள்ளது. அதன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய எல்லோருக் கும் தெரிந்த சில சம்பவங்களை பார்க்கலாம்.
  
1962  
J .C .R Licklider (1915 -1990 ) என்பவர் உலகத்தில் உள்ள கணனிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு தகவல்கள் பரிமாறப்பட முடியும் என்பதற்கான அடிப் படையான "Intergalactic NetworK" எண்ணக்கருவை  உருவாக்கினார்.

1974 
 
Vint Cerf , Bob kahn என்பவர்கள் "Internet " என்ற சொற் பதத்தை Transmission Control Protocol பேப்பர் (இணையதளத்தின் தகவல் பரிமாற்றத்தின் போதான அடிப் படையான கட்டுப்பாட்டுக் காரணி) இல் பயன்படுத்தினர்.

1976 
 
Dr .Robert Metcalfe என்பவர் விரைவு பரிமாற்றத்துக்கு Ethernet ,Coaxial Cables ஐ கண்டு பிடித்தார். Ethernet குறுகிய எல்லை கணணி வலையமைப்பின் (வீடு, பாடசாலை, அலுவலகம்) முக்கிய பங்கு வகிக்கும் தொழில் நுட்பமாக திகழ்கிறது.

1978 
 
முதன் முதலில் E -mail Spam Gary Thuerk என்பவரால் தனது மினி கம்ப்யூட்டர் களை விளம்பரபடுத்தி   ARPANET (Advanced Research Projects Agency Network ) இல் இருத்த 400 பாவனையாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

1983 
 
1 .1 .1983 இல் ARPANET இல் இணைக்கப்பட்டிருந்த  அனைத்து கணணிகளும் TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol ) இனை பயன்படுத்த வேண்டும் என ஆக்கப்பட்டது. TCP/IP இணையத்தின் கருவாக வந்தது .

1984 
 
Dr .John Postel என்பவரால் .com ,.org ,.gov ,.edu ,.mil என்பவற்றுக்கான எண்ணக்கரு உருவாக்கதிட்டம் என்பன குறித்து Internet Engineering Task போர்சே(IETF ) இன் வெளியீடுகளில் விரிவாக விபரிக்கப்பட்டிருந்தது.

1989 
 
The World எனும் இணையதள சேவை வழங்குனரால் முதன் முதலில் மக்களுக் கான வர்த்தக ரீதியான Dial -Up இணைய சேவை வழங்கப்பட்டது. அனால் முதலாவது ISP Netom என்றாலும் மக்களுக்கு ஆனது அல்ல.

1992 
 
Corporation for Education and Research Network (CREN ) World Wide Web இனை வெளி யிட்டது. NSFNET ( The National Science Foundation Network ) 44 .739 Mbps இக்கு தரமுரத்தப்பட்டது

1993 
 
Marc Andreesson , NCSA , Illninois பல்கலைக்கழகம்  சேர்ந்து "Mosaic for X " என்ற முதலாவது WWW இக்கான Graphical Interface இனை உருவாக்கினர். Mosaic for X அக்காலத்தில் முதலாவது பரவலான பாவிப்பில் இருந்த  Web Browser ஆக இருந்தது.

1994 
 
Pizza Hut அவர்களது இணைய தளமூடான ஆர்டர் பண்ணுவதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். இது தொடக்கத்தில் பிரபலமாகவிடினும் பின் ராக்கெட் வேகத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமானது.பேசப்பட்டது

1995

  
Pierre Omidyar என்பவரால் இணையதள வியாபாரம் அறிமுகப்படுத்தப்படது. பின்னாளில் இது eBay ஆக மாறியது. .gov  , .edu  தவிர்ந்தஇலவசமாக இருந்த அனைத்து டொமைன் களுக்கும் வருடாந்த கட்டான அறவீடு ஆரம்பமாகியது.

1996 
 
Hotmail ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு Microsoft ஆல் 40 கோடி டொலர் களுக்கு  வாங்கப்பட்டது. Internet2 எனும் Network Of Research And Education Institutions உருவானது

2001

wikipedia அறிமுகமானது. ஆரம்பத்தில் விக்கிபீடியா .com என இருந்தாலும் பின்னர் இது .org என மாற்றம் பெற்று இன்று உலகளாவிய ரீதியில் தனக் கென்று தனியான ஒரு இடத்தினை பெற்றுள்ளது.

2003 
 
Apple iTunes Store இனை ஆரம்பித்தது. அப்போது வெறும் 200 000 பாடல்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் 24 மணிநேரத்துக்குள்  2 லட்சத்துக்கும் மேலான பாடல்கள் விலையாகின.

2004 
 
1 .1 .2004 இல் yahoo hotamil 2MB எனும் Storage Capacity இனை வழங்கியபோது Google gmail இனை1GB என்ற கொள்ளளவு வசதியுடன் அறிவிப்பு செய்தது .அது அப் போது April fool joke என சிலரால் கருதப்பட்டது.

2005 
 
You tube ஆரம்பிக்கப்பட்டது. இணையதளமூடான வீடியோ களுக்காக இது உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு Google இதனை 1 .6 பில்லியன் டாலர்ஸ் களுக்கு youtube இனை வாங்கியது.

2006 
 
Dom Sagolla வினால் Twitter தளம் வெளியீடு செய்யப்பட்டது. இதே வருடம் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த Facebook இல் யாரும் இணையலாம் என அறிவிக்கப்பட்டது.

2009 
 
தொலைபேசி ஊடான ஒலி பரிமாற்றத்தை விட Data பரிமாற்றத்தின் அளவு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. உலகளாவிய ரீதியில் முதன் முறையாக Data பரிமாற்றத்தின் அளவு 1exa byte (1 billion giga bytes ) என்ற எல்லையை தாண்டியது.


அதிக நேரம் Laptop Battery Charge பேண

  • CD /DVD ஐ தேவையற்ற போது  டிரைவர் இல் விட வேண்டாம்
  • wi -fi ,bluetooth , speaker களை தேவையற்ற போது  turnoff செய்க
  • display brightness இனை குறைவாக பேணுதல்
  • தேவையற்ற போது  mouse,speakers,USB இணைக்க வேண்டாம்
  • Hibernate ஆனது standby ஐ விட அதிகம் சேமிக்கும்
   
வாசிக்கவில்லையா  Fuse போன "சண் டிவி"  

9 comments:

Praveenkumar said...

அவசியம் அறிய வேண்டிய பயனுள்ள கட்டுரை தொகுப்பு. பாராட்டுகள் நண்பரே..!

Unknown said...

ஒரு தகவல் களஞ்சியமாவே இருக்கீங்களே..

நல்ல பயனுள்ள பதிவு நண்பரே.. நன்றி..

nis said...

மிகவும் நன்றி நண்பர்கள்

பிரவின்குமார்
பதிவுலகில் பாபு

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் தொகுப்பு ...

nis said...

நன்றி Bharani

அன்பரசன் said...

பயனுள்ள தகவல்

ராஜ நடராஜன் said...

Wow!Lovely.

எஸ்.கே said...

மிக பயனுள்ள புதிய தகவல்கள்!

ஹரிஸ் Harish said...

தகவல்கள் அருமை..

Post a Comment

Related Posts with Thumbnails