இந்த தசாப்தம் (2000-2010) பல நூற்றுக்கணக்கான ஹாலிவுட் படங்களை  தந்துள்ளது. சில தோற்றன சில வென்றன இப்படி பல்வேறு வகைகளில் வந்து வர்த்த  ரீதியில் மிக பெரும் வெற்றி பெற்ற, மக்களின் பேராதரவு பெற்ற , விருதுகளை  வென்ற, விமர்சன குழுக்களின்  பாராட்டை பெற்ற இந்த பத்து ஆண்டுகளில் வந்த  டாப் பதினைந்து படங்களும் சிறிய குறிப்பும்.  
1. Toy Story 3 (2010)
Toy Story Series  இல் வந்த மூன்றாவதும்  இறுதியுமான மிக அற்புதமான அனிமேஷன் திரைப்படமாகும்.முதல் இரண்டு  பாகங்களிலும் காட்டப்பட்ட சிறுவன் வளர்ந்து கல்லூரிக்கு செல்லவுள்ளவனாகவும்  இன்னும் அவன் எப்படி அவனது விளையாட்டுப்பொருடகளை நேசிக்கிறான் என்பதை  சம்பவங் களூடாக மிக அருமையாக இப்படத்தில் காட்டியுள்ளார்கள். 
2. The Dark Knight (2008)
நகர  வீதிகளில் மலிந்தது கிடக்கும் குற்ற செயல்களை புரியும் குமபல்களை  ஒழித்துக்கட்டும் யுத்தம் ஒன்றை ஆரம்பிக்கிறார் வௌவால் மனிதன்.அவரது  நோக்கங்களுக்கு Lieutenant உம District Attorney  உம உதவுகின்றனர்.இதனை கருவாக வைத்து Christopher Nolan  இயக்குனர் Christian Bale,Heath Ledger ,  Aaron Eckha  ஐ வைத்து படமாக்கியுள்ளார்.
3. The Social Network (2010)
இன்று  உலகளாவிய ரீதியில் மிக பிரபலமடைந்த்துள்ள சமூக வலைத் தளமான Facebook  இன்  நிறுவனர்களை அடிப்படையாக கொண்டு உருவான கதை.Facebook  இன் உருவாக்கம்  எப்படி பலசட்ட சிக்கல்களை ஏற்படுத்தியது என்பதையும் அழகாக வர்த்தக ரீதியில்  பெரும் வெற்றி அடைந்த இந்த படத்தில்  காட்டியுள்ளார்கள்.
4. The Lord Of The Rings: The Two Towers (2002)
J.  R. R. Tolkien என்பவரால் எழுதப்பட்ட The Lord of the Rings  எனும் நாவலின்  இரண்டாம் பாகத்தை  அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.Peter ஜாக்சன்  ஆல் இப்படம் இயக்கப்பட்டுள்ளது.2001  இல் வெளியான “The Fellowship of the  Ring” எனும் படத்தின் கதை இதில் தொடர்வதாக இப்படம் அமைந்துள்ளது. 2003  இல்  The Return of the King இறுதி பாகமாக வந்தது.
5. Wall-E (2008)
அனிமேஷன்  படமான இதன் கதை இது. பூமியில் மனிதர்கள் விட்ட தவறு  களால் வாழமுடியாத சூழல்  ஏற்பட்டு விண்வெளியில் வசித்து வரும் நிலையில் பூமியில் உள்ள கழிவுகளை  அகற்ற Wall- E எனும் ரோபோ வடிவமை க்கப்படுகிறது. இந்நிலையில் Eve  எனும்  ரோபோ பூமிக்கு அனுப்பப் படுகையில் Wall -E  காதலில் விழுகிறது. அப்புறம்  என்ன?
6. Inception (2010)
மனிதனின் மனம்,கனவுகளில் நுழையக்கூடிய தொழில் நுட்பம் ஒன்றை  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனும் அடிப்படையில் உள்ள இது படம் பார்ப்போரை  புதிய தொழில் நுட்ப,நம்பமுடியாத விஞ்ஞான உலகுக்கு கொண்டு செல்கிறது.  ஷங்கர் மூன்று வருடம் எடுத்தால் இவர்கள் இப்படத்துக்காக ஒன்பது வருடம்  உழைத்து இருக்கின்றனர்.
7. No Country For Old Men (2007)
அமெரிக்க crime -thriller  படமான இது ஒரு வேட்டைக்காரன் செல்லும் வழியில்  போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சண்டையில் ஏற்பட்ட கைவிடப்பட்ட பிணங்கள்  போதைப்பொருள் பெருந்தொகப்பணம் என்பவற்றை காண்கிறார். அவர் அப்பணத்தை  எடுத்து செல்கிறார் அதனால் தொடர்ந்து வரும் ஆபத்து களை இப்படத்தில்  காட்டியுள்ளார்கள்.
8. Eternal Sunshine of the Spotless Mind (2004)
காதல் படமான இதன் கதை.காதல் முறிந்ததால் காதலி தனது நினைவுகளை அவள் மனதில்  இருந்து அழிக்கிறாள் என அறியும் காதலன் மனமுடைந்து தானும் அதை  செய்கிறான்.ஆனால் காதலன் காதலியின் நினைவுகள் மங்கும் வேளையில் இன்னும்  தான் அவளை விரும்புவதை உணர்ந்தது அந்த அழகிய நினைவுகளை அழிக்க விரும்பாமல்  விடுகிறான். அ... ஆ...
9. Memento (2000)
Psychological thriller படமாகும். தனது மனைவியை கொன்ற கொலையாளிகளை தேடி  குறுகிய நேர நினைவு சக்தி( short term memory loss )உடையவர் விடங்களை  மறக்காமல் இருக்க உடல் முழுதும் பச்சை குத்தியும் படங்கள் ,குறிப்புகளுடன்  அலையும் மனிதரை பற்றிய கதை. தமிழில் எங்கோயோ பார்த்த நினைவு... மறந்தது  போனன்.....
10. There Will Be Blood (2007)
இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடப்பது போல எடுக்கப்பட்ட இந்த படம்  வெள்ளி உலோகம் எடுக்க தோண்டும் ஒரு மனிதன் எப்படி பணத்துக்காக எண்ணெய் வெறி  பிடித்த மனிதனாக மாறுகின்றான் என்பதை அழகாக சித்தரித் திருக்கிராகள்.  படத்துக்கும் நடிகருக்கும் பல விருதுகள் கிடைத்தன. பார்க்க வேண்டிய ஒரு  படம்.
11. Up (2009)
அனிமேஷன் படமான இது காமடியையும் புதுமையையும் கலந்து வடிக்கப் பட்டுள்ளது. 78   வயது அப்பாவி முதியவருக்கு உள்ள  ஆசைகளை கதை காட்டுகிறது.தென் அமெரிக்க  காடுகளை பார்க்கவேண்டும் என்ற வாழ்நாள் ஆசையை வீட்டுக்கு ஹீலியம் பலூன்களை  கட்டி எப்படி காட்டை சுற்றி பயணிக்கிறார் என்பது காட்டப்படுகிறது.
12. How To Train Your Dragon (2010)
Dragon  ஒன்றை கொல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ள ஒரு இளைஞன் dragon   ஒன்றை பிடித்த பின்னர் அதை கொல்ல வேண்டும் என்ற கொள்கையை கைவிட்டு அதன்  தூயமனத்தை புரிந்து நண்பனாகிறான்.இப்படம் மனிதர்கள் உயிரினங்களை எப்படி  தவறாக நடத்துகின்றனர் அது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.
13. Avatar (2009)
15 ஆண்டுகளாக தயாரான இந்த படம் 2054  இல் கதை நடப்பது போல  காட்டுகிறது.கோள்(Pandora ) ஒன்றில் உள்ள பெறுமதி மிக்க கல் அகழும் பணி  அங்குள்ள Nazi  எனும் உயிர்களை பாதிக்கிறது.இதனிடையே இந்த கல் எடுக்கும்  பணியில் உள்ள ஹீரோ இங்குள்ள பெண்ணுடன் காதலில் விழுந்து அவளுடன் இணைந்து  Pandora  வை  பாதுகாக்க போராடும் கதை. 
14. Children of Men (2006)
இக்கதை 2027  இல் உலகில் மனித இனப்பெருக்கம் நடைபெற சாத்தியம் இல்லாமல் 100   ஆண்டுகளுக்குள் மனித குலமே அழிந்து விடும் என்ற நிலையில் ஒரு வீரன்  கர்ப்பிணி தாய் ஒன்றுக்கு பிரசவத்துக்கு உதவி செய்து தாய் பிள்ளையுடன்  எப்படி பகுதியினர்க்கிடையேயான  சண்டைகளின் மத்தியில் தப்பி செல்கிறான்  எனபது பற்றி அமைந்த்துள்ளது.
15. The Prestige (2006)
இது ஒரு மர்மமான திரில்லர் படமாகும்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடப்பது போல  கதை உள்ளது. குறிப்பிட்ட இரு வித்தை காட்டுபவர்களின் முரண்பாடு பற்றி  காட்டும் படமாக உள்ளது . ஒருவர் அன்புககாதலியின் மரணத்துக்கான காரணம்  மற்றவர் தான் என குற்றம் சாட்டுவதொடு இவர்களு க்கிடையேயான சண்டையின்  ஆரம்பமாக அமைகிறது.















  Colombo Time
14 comments:
நல்லதொரு தேடல் வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
எனக்குத் தன் சுடு சோறு .....
VERY NICE!
6, 7, 13 மூன்றும் பார்த்திருக்கிறேன்... 11 படத்தை நீங்கள் எழுதியதை படித்ததும் பார்க்கவேண்டும் என தோன்றுகிறது...
இதில் அவதார் மட்டுமே பார்த்துள்ளேன்..
இந்த லிஸ்டுல 7, 10, 14 மட்டும் இன்னும் பார்க்கல.. அதையும் பார்த்திட வேண்டியதுதான்..
:-)
really great work
good job
Super invention
www.sakthistudycentre.blogspot.com
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பர்கள் .
ம.தி.சுதா
எஸ்.கே
philosophy prabhakaran
ஹரிஸ்
பதிவுலகில் பாபு
karurkirukkan
Anonymous :)
செ.சரவணக்குமார்
வாக்களித்த அன்பு நெஞ்சங்களிற்கும் நன்றிகள்.
அவதார் படத்தில் வருவது Nazi-க்கள் அல்ல!!! Naavi-க்கள் என்று நினைக்கிறேன்.
Nice! :)
இதுதான் இதுவரையில் வந்த ஹாலிவுட் படங்களின் சிறந்த 15 ஆ? டைட்டானிக், ஜுராசிக்பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸிட்,க்ளேடியேட்டர், பியுட்டிஃபுல் மைண்ட், பர்சூட் ஆப் ஹாப்பினஸ்,காட் ஃபாதர்,சிட்டி லைட்ஸ் என்று இன்னும் எவ்வளவோ நல்ல திரைப்படங்கள் விடுபட்டு இருக்கே?
இந்த படங்களையும் சேர்த்து பாருங்கள்...The orphan,The notebook,Flipped,Definitely maybe,SAW,The orphanage,Life As we know it,Amelia,(Angus Thongs.And.Perfect.Snogging),Aquamarine,Tangled
More films check www.imdb.com
and download it form torrent sites..
Post a Comment