பெண்களை விட அதிகம் வியர்க்கும் ஆண்கள்

Share

சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று. ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.

வியர்வைசுரப்பு பற்றிய பல அடிப்படை தகவல்களை நீங்கள் ஆரம்ப வகுப்பு களிலேயே கற்று இருப்பீர்கள்.அறிந்து இருப்பீர்கள்.எனவே சுருக்கமான சுவாரசிய சில வியர்வை பற்றிய அடிப்படை தகவல்கள் பற்றிய ஒரு பார்வை.


வியர்வையின் தொழில்
 • உடட்கழிவுகளை வெளியேற்றல்
 • உடல் வெப்பநிலையை சீராக பேணுதல்
 • தோலை ஈரலிப்பாக பாதுகாப்பாக பேணல்
வியர்வைச்சுரப்பிகள்
 • 2 - 4 மில்லியன் சுரப்பிகள் உடலில் உள்ளன
 • இவை ஒருநாளைக்கு 12 லீற்றர் வியர்வையை சுரக்க வல்லன
 • வியர்வையில் நீர்,உப்பு,சீனி அடங்கியுள்ளது
உருவாக்கம்
 • உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பகுதி வியர்வைசுரப்பிகளுக்கு Signals களை அனுப்பி தேவைக்கேற்ப வியர்வைவை சுரக்க வைக்கிறது.
வியர்வை சுரப்பி வகைகள்
 • Eccrine
                   உடல் சூடாக உள்ளபோது வியர்வையை சுரப்பவை
 • Apocrine
                    நாம் Emotion அடையும் போது சுரப்பவை

சூழ்நிலை
 • சூடான காலத்தில்,அதிகவேலை/டென்சன் நாளில் சாதாரண நாளை விட 7 மடங்கு நீரை வியர்வையாக இழக்கின்றோம்.
ஆண் - பெண்
 • பெண்களுக்கு ஆண்களை விட அதிக வியர்வை சுரப்பிகள் இருந்தாலும் ஆண்களுக்கு பெண்களை விட 40 % அதிகமாக வியர்க்கின்றது.
வீரியம்
 • சிறுநீரகங்கள் 24 மணிநேரம் வேலை செய்து வெளியேற்றும் உடற்களிவுகளை, Sauna எனும் இடத்தில் 15 நிமிடங்கள் இருந்தால் உடலிலிருந்து வெளியேறும் 1 லீட்டர் வியர்வை வெளியேற்றிவிடும்.
உறுப்பு
 • பாதங்கள் வியர்வைசுரப்பிகள் செறிவாகவுள்ள உறுப்பு
 • பாதத்தில் 25000 சுரப்பிகள் உள்ளன
வியர்வையை தூண்டும் உணவுகள்
 • வெங்காயம்
 • மிளகாய்
 • பூண்டு
விளையாட்டும், ஒருமணிக்கு வியர்க்கும் வியர்வை
 • 2 .43 லீட்டர்    - உதைபந்தாட்டம்
 • 1 .49 லீட்டர்    - ஓட்டம்
 • 1 .25 லீட்டர்    - சைக்கிளோட்டம்
 • 1 .6 லீட்டர்     - கூடைப்பந்தாட்டம்
 • 0 .8 லீட்டர்      - கரப்பந்தாட்டம்
 • ????                 -  விளையாட்டு
வியர்வை நோய்கள்
 • Hyperhidrosis - அதிக வியர்வை
 • Anhidrosis - குறைந்த வியர்வை
 • Prickly heat - வியர்வை தடைப்படல்
விலங்குகளும் வியர்வையும்
 • குதிரை   - அதிகம் வியர்க்கும் விலங்கு
 • பன்றி      - வியர்வைசுரப்பிகளற்றது.
 • மாடு       - மூக்கில் சுரப்பிகள் உண்டு
 • முயல்   - உதட்டில் சுரப்பிகள் உண்டு
 • நாய்       - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
 • பூனை   - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
நன்றாக நீர் அருந்துங்கள் !!!
நன்றாக வியர்க்கட்டும் !!!
நலமாக வாழுங்கள் !!!

இன்றைய வீடியோ (பல்கலைக்கழகம்).

9 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

வேர்க்க விறுவிறுக்க படித்தேன்...

Anonymous said...

கலக்குறீங்க நண்பா..தினம் தினம் அருமையான தகவல்கள்..நல்ல தகவல்..அருமை

nis said...

மிகவும் நன்றிகள்

கே.ஆர்.பி.செந்தில்
padaipali

philosophy prabhakaran said...

வழக்கம் போல உங்கள் நடையில் படிப்பதற்கு வசதியாக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்... அந்த கண்கள் சூப்பர்... எதோ ஒரு டென்னிஸ் வீராங்கனையின் கண்ணைப் போல இருக்கிறது... யார் அது...?

தமிழ்வாசி said...

பதிவு நல்லாயிருக்கு..... நானும் பெண்களின் வியர்வை பற்றி ஒரு பதிவு ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்... லிங்க்: http://tamilvaasi.blogspot.com/2010/10/blog-post_6728.html

பதிவுலகில் பாபு said...

என்னங்க.. ரொம்ப படிப்பீங்க போல.. எப்போதும் போல விசயங்களை அருமையா சொல்லியிருக்கீங்க..

nis said...

மிகவும் நன்றிகள்

philosophy prabhakaran
தமிழ்வாசி
பதிவுலகில் பாபு

@philosophy prabhakaran சரியாக தெரியவில்லை
@தமிழ்வாசி நன்றாக உள்ளது
@பதிவுலகில் பாபு :))))

ஹரிஸ் said...

எங்க இருந்து தான் இவ்வளவு மேட்டர் பிடிக்கிறீங்களோ..?

sivatharisan said...

அருமையான தகவல்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails