உண்மையில் சமூகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னணியில் எதோ ஒரு வகையில் ஊடகங்களின் தாக்கம் இருக்கிறது. அவற்றுக்கு மிகப் பெரிய பலம் ஒன்று உள்ளது. ஊடகம் என்ற ஆயுதம் கையாளப்படும் விதத்தி லேயே அவற்றின் தாக்கம் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும்.
அப்படி இக்காலப்பகுதியில் உலகத்தையே மாற்றி அமைக்கக் கூடிய ஊடகங் களில் மிகவும் பலம் வாய்ந்த பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி குறித்தும் பார்க்கலாம்.
1 .BBC
British Broadcasting Corporation 23,000 இக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட உலகின் பெரிய ஒலி/ஒளி பரப்பு நிலையம். வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்பவற்றை உள்ளடக்கிய இது உலகின் 75 % இக்கும் மேற்பட்ட நகரங்களை சென்றடைகிறது. தனித்துவம், நடுநிலைமை, நம்பகத்தன்மை என்பன இவ்வூடகத்தில் மட்டும் அதிகமாக காணப்பட முடியும். இது மிக சுத்தமான ஊடகமாக உலகம் முழுதும் வியாபித்து இருக்கிறது.
2 .CNN
1980 இல் ஸ்தாபிக்கப்பட்ட இது உலகின் முதலாவது 24 மணிநேர செய்தி சேவையாக உருவானது.212 இக்கும் மேற்பட்ட நாடுகளில் பார்ப்பவர்களை கொண்டது.இது முதலாவது Gulf War இன் போது பென்டகனின் தீர்மானங் களிலேயே தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைந்தது இதன் news coverage இன் பலத்தை காட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் செய்திகளை பெற்று சிறந்த முறையில் வழங்கும் விதம் சிறப்பு. பலம் வாய்ந்த ஒரு ஊடக வலையமைப்பு.
3 .The New York Times
1851 இல் முதற் பதிப்பு வெளி வந்துள்ளது.இன்று பத்திரிகை பாவனை குறைந்தது வரும் நிலையிலும் இது மட்டும் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாக விற்கப்படுகிறது. NYT இன் புகழுக்கு அதன் தரமான நடுநிலமை யான ஆசிரியர் தலையங்கம் மிக முக்கிய காரணம். இதன் இணையத்தளம் 2008 இல் அமெரிக்காவில் அதிகளவில் பார்க்கப்பட்ட செய்தி தளமாகும். உலகிலேயே அதிக தடவை (104 )Pulitzer prizes, ஐ வென்ற வெளியீடு ஆகும்.
4 .CCTV
China Central TV சீனாவில் 1 பில்லியன் இக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்ட ஒரு பெரிய ஊடகம்.சீன அரசுக்கு சொந்தமான இது 19 இக்கும் மேற் பட்ட ஒளிபரப்புகளை கொண்டு அரசின் ஊது குழலாக திகழ்கிறது. பல புது ஊடகங்கள் வந்தும் இது சீனாவில் 90 % ஆனா பார்வையாளர்களை கொண்டது மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் உலகளாவிய ரீதியிலும் தனது ஒளிபரப்பை நடத்துகிறது.
5 .The Wall Street Journal
21 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இது 33 தடவைகள் Pulitzer Prize ஐ வென்றுள்ளது.பொருளாதார நிபுணர்களாலும் வர்த்தகம் தொடர்பான நபர்களாலும் அதிகம் கொண்ட ஊடகமாக திகழ்கிறது.அச்சு ஊடகம் வீழ்ந்து வரும் நிலையில் இது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. WSJ சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகமாக திகழ இதன் அறிக்கைகள் இன் தரம் அலசல் என்பன காரணம்.
6 .Yomiuri Shimbun
உடனுக்குடன் புதிய தகவல்களை தரும் தொலைக்காட்சி,இணையதளம் என்பவற்றுடன் போட்டி போட முடியாமல் திணறி வரும் அச்சு ஊடகங்களின் மத்தியில் மிக உறுதியாக உலகளாவிய ரீதியில் தினமும் 1 .0 தொடக்கம் 1 .5 கோடி வாசகர்களை கொண்டு ஜாம்பவானாக திகழும் இது ஜப்பானில் அதிகம் வாசிக்கப்படும் ஆங்கில பதிப்பையும் கொண்டது.உலகின் மிகப்பெரிய மூன்று பொருதார நாடுகளில் ஒன்றான ஜப்பானின் வளர்ச்சியில் பங்கு கொண்டது.
7 .Al Jazeera
Qatar, ஐ அடித்தளமாக கொண்டு இயங்கும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலமான இந்த ஊடகம் தெரிவிக்கும் செய்திகள் பெரும் பரபரப்பை கிளப்பவல்லன. அதுவும் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழும் இந்த ஊடகம் விரைவில் மேலும் அவிழ்த்துவிட போவதாக ஒபாமாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ள வேளையில் அண்மையில் இலங்கை அரசுக்கும் தலையிடி கொடுத்துள்ளது.இது அரசியல் நடுநிலைமை வாய்ந்த ஒரு ஊடகம்.
8 .Wikileaks
சமூகத்தில் மிக பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சொற்ப இணைய தளங்களில் இது வும் ஒன்று. மறைக்கப்பட ரகசிய தகவகள்,ஆவணங்கள் என்பவற்றை வெளிவிடுவதில் மிக பிரபலமான ஒன்று.2006 இல் ஆரம்பித்த தளம் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்களை தீர்மானிக்கக்கூடிய ஒன்றாகி விட்டது.அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிக பெரிய ஆவண கசிவான ஈராக் யுத்த ஆவண வெளியீடு அண்மையில் நடந்தது நீங்கள் அறிவீர்கள்.
9 .Fox News
பத்து கோடி வீடுகளை சென்றடைந்த்துள்ள இது அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் செய்தி சேவைகளில் ஒன்று.இது பக்கசார்பான ஒரு ஊடகம் எனவும் சிலவற்றை திருட்டு தனமாக எடிட் பண்ணி உண்மை போல் விடு வதில் வல்லவர்கள் எனவும் ஊரில ஒரு கதை உலாவுகிறது.பிரபல அரசியல் விமர்சகர்களான Glenn Beck , Bill O'Reilly, என்பவர்கள் மூலம் மக்கள் மத்தியில் கருத்தை வலுக்கட்டாயமாக திணிப்பதில் வல்லவர்கள்.
10 .The Huffington Post
உலகின் அதிக பிரபல்ய இணைய செய்தி தளங்களில் இதுவும் ஒன்று.இது 3000 இக்கும் மேற்பட்ட மிக தரமான ஊடகவியலாளர்களுடன் இணைய செய்தி உலகில் மிக்கிய புள்ளியாக திகழ்கிறது. இதை Arianna Huffington, என்ற பிரபல பெண் ஊடகவியலாரரே உருவாக்கினார்.ஒவ்வொரு மாதமும் இதன் செய்திகள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை பெறுவது இதன் பலத்தை காட்டுகிறது.வளர்ந்துவரும் இணையத்துடன் இதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
எங்க நம்மட சண் டிவி, முதல்வரின் டிவி, அம்மாவின் டிவி, விஜய் டிவி ஐ தேடினால் ஒண்ணுமே இல்லை.சரி அப்படியே இலங்கை பக்கம் போய சக்தி டிவி யாவது இருக்குமெண்டால் காணல. எல்லோரும் தூங்கிவிட்டார்களா ?.
.
9 comments:
//////////எங்க நம்மட சண் டிவி, முதல்வரின் டிவி, அம்மாவின் டிவி, விஜய் டிவி ஐ தேடினால் ஒண்ணுமே இல்லை.சரி அப்படியே இலங்கை பக்கம் போய சக்தி டிவி யாவது இருக்குமெண்டால் காணல. எல்லோரும் தூங்கிவிட்டார்களா ?./////////////
மக்களுக்கு உதவாத உதவாக்கரை டிவிக்களின் பட்டியல் என்று ஒன்று இருந்தால் இவைகளின் பெயரையும் நீங்கள் காணலாம்
புதிய தகவல் அருமை
கருத்திற்கு நன்றி முசமில் இத்ரூஸ்
//மக்களுக்கு உதவாத உதவாக்கரை டிவிக்களின் பட்டியல் என்று ஒன்று இருந்தால் இவைகளின் பெயரையும் நீங்கள் காணலாம்//
:)))))))))
Yomiuri Shimbun & The Huffington Post - Both I have not come across.
Thanks for your info.
புதிய தகவல்,,கலக்குறீங்க பாஸ்..
//முசமில் இத்ரூஸ் said...
மக்களுக்கு உதவாத உதவாக்கரை டிவிக்களின் பட்டியல் என்று ஒன்று இருந்தால் இவைகளின் பெயரையும் நீங்கள் காணலாம்//
சூப்பர்..
அருமை! நிறைய புதிய தகவல்களை தருகிறீர்கள்!
நன்றி நண்பர்கள்
ராஜ நடராஜன்
ஹரிஸ்
எஸ்.கே
மக்களுக்கு உதவுமோ உதவாதோ.. குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் சம்பாதிப்பது எப்படி என நம்மூர் டிவி களிடம் பிபிசி கற்றுக்கொள்ளலாம்.
ஷக்தி TV யா அப்படின்னா இலங்கைல sun டிவி ய re telecast பண்ணுவாங்களே அவங்கதானே...
ரொம்ப creativa சன் டிவி நிகழ்ச்சிகளை remake பன்னுவன்களே..
சொந்தமா சுட்டு நிகழ்ச்சி தயாரிக்குரதுக்கு வேணும்னா 1st place கொடுக்கலாம்...
Post a Comment