சத்தியமா இவர் தான் No1 பதிவர்

Share

ஒருவரின் பதிவு பிரபலம் ஆகிறது என்றால் அது "பலரை சென்றடையும் தன்மை" தான் பிரதான காரணம். இதற்கு பல முறைகளை கையாள்வர். அது பற்றி அனைவரும் அறிவர்.இம்முறைகள் பற்றி நீங்கள் அறிந்திருந் தாலும் ஒரு மீள் நினைவூட்டலாக கருதி இந்த டிப்ஸ் ஐ வாசியுங்க ளேன்.


1 .புதிய விடயம்
 

அரைத்த மாவையே அரைப்பது என்பது பயனற்ற செயல்.அத்துடன் ஏற்கனவே வந்த விடயங்கள் எழுதப்படும் பொது அவை Search Engines களால் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது.இது “duplicate content penalty” என அழைக்கப்படுகின்றது.எனவே எழுதப்படும் விடயங்கள் புதிய உள்ளடக்கங்களை உடையதாக இருக்க வேண்டும்.தனித்துவமான நடையும்,சுவாரசிய தகவலும் நல்ல ஒரு பதிவாகி நல்ல பதிவர் என்ற பெயரை கொடுக்கிறது.

2 .Keywords பாவித்தல் 

 

விக்கிபீடியா இல் நிங்கள் பார்த்தால் ஒரு குறித்த article இல் சில சொற்களுக்கு லிங்க் கொடுத்து இருப்பார்கள்.அது எப்படி என்றால்  உங்கள் பதிவில் உள்ள சில சொற்களுக்கு(key words ) அது தொடர்பான ஏனைய உங்கள் பதிவுகளுக்கு  லிங்க் கொடுப்பதால் அதிக Pagesviews கிடைக்கும் அதே நேரம் இது நல்ல Google Search Ranking ஐயும் தரும்.வாசகர்கள். வாசகர்கள் விரும்பினால் அந்த சொல் தொடர்பான மேலதிக தகவல்களை அறிய கூடியதாக இருக்கும்.

3 .உங்கள் Blog இக்கு link

 

ஏனைய blogs /வலைத்தளங்களில் உங்கள் ப்ளாக் க்கு link கொடுத்தல் "Back Links " என அழைக்கப்படுகிறது.அதிக தளங்களில் உங்கள் blog இக்கு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால்  உங்கள் blog இன் Google Search Rank ஐ கூட்டி அதிக Visitors ஐ தரும் .இதற்கு தான் சில  தளங்கள் தமது ராங்கிங் ஐ கூடுவதற்காக தமக்கு இணைப்பு கொடுக்க சொல்லி code தருகிறார்கள்.நிங்களும் இப்படியான ஒன்றை உருவாக்கி மற்றவர்களை போட சொல்லி கேட்கலாம்.

4 .சொந்த Domain Name 
 

நீங்கள் மிக பிரபலம் அடைய விரும்பினால், விளம்பரங்கள் மூலம் பணம் பெற விரும்பினால்  உங்கள் பெயரில் அல்லது சொந்தமாக ஒரு இணைய தள முகவரியை பெறுவது  தான் நல்ல வழி. you .blogspot .com என்பதை விட you .com என்பது பலரை கவரும்,நல்ல Search ranking கிடைக்கும் .மொத்தத்தில் பதிவுகளுக்கான தனித்துவம் கூடும். உண்மையில் வாசகர்கள் மனதில் உங்கள் பதிவுகள் அங்கீகரிக்கப்பட்டவை போல உணர்வார்கள்.

5 .சிறப்பு விருந்தினர்கள்
 
 

உதாரணமாக உங்கள் பதிவுகள் சமூகத்துடன் தொடர்பு பட்டதாக இருந் தால் ஒரு பிரபல சமூக பெரியவரை அவர் கண்ணோட்டம் பற்றி ஒரு பதிவு எழுதி தர கேட்டு உங்கள் தளத்தில் போடலாம். இதன் மூலம் உங்கள் தளம்,பதிவுகளுக்கான தரம் ,நம்பிக்கை ,பிரபலம் என்பன கூடும். வருடத்தில் ஒரு மூன்று நான்கு முறை இப்படி செய்யலாம். அதாவது பிராண்ட் அம்பாசிடர் மாதிரி வைத்து கொள்ளலாம்

6 .சர்ச்சை விடயங்கள் 
 

சிலவிடயங்கள் தொடர்பாக நன்றாக பேசப்படும்.அதாவது அவை தொடர்பான ஒரு ஆர்வம் ,கேள்விகள் நிலவும்.ஆனால் அது தொடர்பான தரமான செய்திகள் குறைவாக இருக்கும் .இப்படியான விடயங்கள் பற்றி அலசி பதிவுகள் போடும் பொது அது இலகுவாக ஹிட் ஆகிவிடும். எதிர்பார்ப்புள்ள விடயங்களை கண்டறிய வேண்டும்.அவற்றை சுவாரசிய மாக திருப்தியாக இருக்ககூடியவாறு முழுமையான பதிவாக ஆக்குதல் நன்று.

7 .வாசகர்களுடன் தொடர்பாடல்

 

வாசகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது தான் முக்கிய காரணி.அவர்களின் கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பளித்து நன்றி சொல்வது தான் அவர்களுக்கு செய்யும் நன்றி கடன்.அவர்களின் ஆலோ சனைகளை நடை முறைப்படுத்தினால் நிங்கள் தான் அவர்களின் ஹீரோ. விஷம தனமான கருத்துரைகளை கவனத்தில் எடுக்காதிருப்பது நல்ல ஒரு மதிப்பை ஏற்படுத்தும். பதிவை விட கமெண்ட்ஸ் இக்கு போடும் பதில் தான் பலரை கவர்கிறது.

8 .கருத்துரைகள் 
 

எப்போதும் அதிக வாசகர்களை கருத்துரை இட உற்சாக படுத்த வேண்டும் உதாரணாமாக சில கேவிகள் ஆலோசனைகளை  கேட்கலாம். மிக முக்கிய விடயம் இலகுவாக கருத்துரை இட கூடியவாறு செய்ய வேண் டும் .capcha  verification போன்றவை பொறுமையை சோதிக்க கூடியவை. இவற்றை தவிர்க்க வேண்டும். கருத்துரைகள் ஒவ் வொன்று க்கும் தனி தனி கவனம் எடுப்பது மேலும் மேலும் கருத்துரைகளை கொண்டு வரும்.

9 .இலகு வருகை

 

எவ்வளவு தான் நன்றாக எழுதினாலும் வாசகர்களை இழுக்கக்கூடிய வகையில் feed and email subscription கொடுக்க வேண்டும். அவர் களால் உங்கள் url ஐ எப்போதும் நினைவு வைத்திருக்க முடியாது. இப்படி செய்தால் நீங்கள் ஒரு புது விடயத்தை போட்டதும் அனைவரும்  தவற விடாமல் உங்கள் பதிவை வாசிப்பார்கள். இந்த முறைகள் அவர்கள் எவ்வளவு தான் busy ஆக இருந்தாலும் உங்கள் பதிவிகள்  மீதான ஆர்வம் காரணமாக இழுத்து வந்து சேர்த்து விடும்.

10 .சமூக வலைத்தளம் 
 

இன்று மிகவும் பயன்பாட்டில் உள்ள பிரபல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம். facebook ,twitter போன்றவை நல்ல ஒரு வாய்ப்பாக அமையும். அதற்காக spam பண்ணுவது உங்கள் ப்ளாக் மீதான வெறுப்பலையை உருவாக்கி தளம் மீதான மதிப்பை குறைத்து விடும். உங்கள் நண்பர்கள் அதிக நேரம் இத்தளங்களில் இருப்பதால் அவற்றில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்வது பலரை இலகுவாகசென்றடையும்.
  
மேற்கூறிய விடயங்களை நீங்கள் ரசித்திருந்தால் அதை இன்ட்லி இல் ஒரு வாக்காக இட்டு தெரிவியுங்கள்.

11 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை..

சுதர்ஷன் said...

நல்ல தகவல் நன்றி ..:)

அன்பரசன் said...

நல்ல தகவல்

Philosophy Prabhakaran said...

Keyword subscription பற்றிய concept எனக்கு சரிவர புரியவில்லை... மேலும் விளக்கி சொல்ல முடியுமா... Labels - Keyword இரண்டும் ஒன்றா...

a said...

அருமையான விவரங்கள்............

அழகி said...

தகவலுக்கு நன்றி.

nis said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்கள்

http://verumpaye.blogspot.com/
S.Sudharshan
அன்பரசன்
prabhakaran
யோகேஷ்
அழகி

nis said...

நிசயமாக prabhakaran

உதாரணமாக "அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்" என ஒரு வரி , உங்கள் பதிவில் இடம் பெறுகிறது என வைத்துக்கொள்வோம்.அதே சமயம் தீபாவளி தொடர்பான ஒரு பதிவு ஒன்று உங்களால் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம்.இப்போது "அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்" என்ற வாக்கியத்தில் "தீபாவளி" என்ற சொல்லை அழுத்தினால் தீபாவளி தொடர்பான அந்த பதிவுக்கு செல்ல கூடியவாறு அதன் லிங்க் ஐ கொடுத்தல். இப்போது "தீபாவளி" என்ற சொல் keyword என அழைக்கப்படலாம். இப்படியான keywords லிங்க் போல செயற்படுகின்றன.

எஸ்.கே said...

அருமை!
தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே!

nis said...

நன்றி நண்பர் எஸ்.கே

உங்களுக்கும்
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Ravi kumar Karunanithi said...

thanks

Post a Comment

Related Posts with Thumbnails