இணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும் நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடு கின்றனர்.
இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கன கச்சிதமாக செய்ய வல்லன. ஆனால் இவற்றை அழிக்கவல்ல குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.
சிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக அண்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச அண்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்கையா. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் "இலவச ஸ்கானிங்" என இருக்கும். எல்லாமே வைரஸ் தான்.
நம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல பத்து இலவச அண்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம். செயற்திறனில் கட்டணத்துக்கு கிடைக்கும் அண்டி வைரஸ்களுக்கு நிகராக ஒப்பிட முடியாவிட்டாலும் சிறந்த முறையில் பாதுகாப்பினை வழங்க வல்லன.
1 .AVG Anti-Virus Free Edition 2011
இலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.
http://free.avg.com/us-en/homepage
2 .Avast Free Anti virus
இது கணனிக்கு இருக்கவேண்டிய ஆககுறைந்தத பாதுகாப்பினை வழங்கு வதோடு Virus ,Spy ware என்பவற்றுக்கெதிராக சிறந்த முறையில் செயற்பட வல்லது. 100 % இலவச திறன் கூடியதுமாகும்.
http://www.avast.com/free-antivirus-download
3 .Avira AntiVir Personal – Free Anti virus
இது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
http://www.avira.com/en/avira-free-antivirus
4 .Malwarebytes Anti-Malware
Malware இக்கு எதிரான இது எவ்வளவு தான் பெரிய malware ,spyware என்றாலும் அடியோடு அழித்து விடும். விரைவானதும் திறன் மிக்கதுமான இது கணனிக்கு நல்ல காவலன்.
http://www.malwarebytes.org/mbam.php
5 .Ad-Aware Free Internet Security
இந்த கணணி பாதுகாப்பு மென்பொருள் real-time protection, advanced Genocode detection technology, rootkit protection, automatic updates, என பல சிறப்பியல்புகளை கொண்டுள்ள பயன் மிக்க ஒன்று.
http://www.lavasoft.com/products/ad_aware_free.php
6 .CCleaner
விண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.
http://www.piriform.com/ccleaner
7 .Spybot – Search & Destroy
இது உங்கள் கணனியில் உள்ள spyware இனை தேடி அழிக்க வல்ல ஒரு பாதுகாப்பு மென்பொருள்.இலவசமான Spybot – Search & Destroy உம ஒரளவு நம்பகத்தன்மை உள்ளது.
http://www.safer-networking.org/en/spybotsd/index.html
8 .Hotspot Shield
இது நீங்கள் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக செய்ய உதவுகிறது. குறிப்பாக நீங்கள் விரும்பினால் அநோமதயராக வலம வரவும் உதவுகிறது.
http://hotspotshield.com/?lg=en
9 .PC Tools AntiVirus Free
இது சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து ரகசிய தகவல்களின் பாதுகாப்பு , அன்னியர்கள் ரகசியமாக கணனியில் ஊடுருவுதல் முறியடித்தல் என்பவற்றை உறுதி செய்கிறது.
http://www.pctools.com/free-antivirus/
10 .Spyware Blaster
இது கணணியை பாதுகாப்பதோடு இணையத்தின் நல்ல பக்கத்தினை மட்டுமே நாம் பார்க்க உதவுகிறது.அதாவது கசப்பான அனுபவங்களை தரவல்லவற்றை அழித்து விடும்.
http://www.javacoolsoftware.com/spywareblaster.html
Source : smashingapps
வீடியோ ( கணணியும், பையனும் )
.
14 comments:
good...very useful to all ...
அருமையாகத் தொகுத்தள்ளீர்கள் வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
மிக அருமை நன்றி....
வழக்கம் போல் அருமை..
பயனுள்ள தகவல்
நல்ல தகவல்களைக் கொண்ட பதிவுங்க.. மைக்ரோஷாஃப்ட் செக்யூரிட்டி எசன்சியல் எப்படிங்க.. நான் அதைத்தான் யூஸ் பண்றேன்..
நல்ல பயனுள்ள தகவல்கள்!
Very useful information boss :)
பயனுள்ள தகவல்.
Ubuntu Linux/ Linux Mint பயன்படுத்தினா மேற்சொன்ன எல்லா கருமாந்திரத்துல இருந்தும் விடுதலை. இது முற்றிலும் இலவசம், எந்த நேரத்திலும் நீங்கள் பணம் செலுத்தவேண்டியதில்லை. அதிக பட்ச பாதுகாப்பு, கணினி ஒரு போதும் கிராஷ் ஆகாது, எந்த கிளீனரும் தேவை இல்லை, Defraggler தேவை இல்லை. வேகம் ஒரு போதும் குறையாது. இதை தரவிறக்கம் செய்வதும், நிறுவுவதும் , பயன் படுத்துவதும் எளிது [downloading, installing and using-all easy & simple]. என் பையன் நான்கு வயதாகிறது, அவன் இணையதளம் பார்க்கவும், Gcompris விளையாடவும் லினக்ஸ் பயன்படுத்தும் போது உங்களால் முடியாதா?
Windows-ஐ விட்டுத் தொலைக்க வேண்டியதில்லை, அந்த கண்றாவி ஒரு பக்கம் இருக்கும், வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம், அதே சமயம் கணினியை இணையத்தில் இணைக்கும் போது லினக்ஸ் பயன் படுத்தலாமே!
கருத்துகளிற்கு நன்றி நண்பர்கள்
NKS.ஹாஜா மைதீன்
ம.தி.சுதா
pragathi
ஹரிஸ்
Arun
பதிவுலகில் பாபு
எஸ்.கே
Balaji saravana
சசிகுமார்
Jayadev Das
@பதிவுலகில் பாபு
மைக்ரோஷாஃப்ட் செக்யூரிட்டி நல்லது
http://en.wikipedia.org/wiki/Microsoft_Security_Essentials
@Jayadev Das
உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்.
Post a Comment