வேலைத் தளங்களில் இவையும் நடக்குது

Share

வேலை தளங்களை எடுத்துகொண்டால் பல்நாட்டு நிறுவனங்கள் உட்பட்ட தனியார் நிறுவங்கள், அரச நிறுவனங்கள் என வகைபடுத்தலாம்.கைநிறைய திருப்தியான சம்பளத்தை அள்ளி கொடுக்கும் தனியார் கம்பனிகளில் வாலாட்டினால் அவ்வளவு தான் ஊருக்கு மூட்டை முடிச்சோட கிளம்ப வேண்டியது தான்.

ஆனால் அரச ஊழியர்களுக்கு அறுபது வயது வரை வேலை உறுதி என்பதால் இவர்களுக்கு ஆளை விட பெரிய வாலுடன் திரிவர்.நம்ம தனியார் கம்பனி பசங்களுக்கும் வால் அடிக்கணக்கில் இருந்தாலும் அலவலகத்தில் சுருட்டி கட்டி கொண்டு இருந்து விடுவர்.அல்லது எவனாவது பத்த வச்சிடுவான் அனுமாருக்கு நடந்த மாதிரி.

ஆனால் என்ன தான் சொன்னாலும் உலகம் முழுவதிலும் எதோ ஒரு வகையில் ஊழியர்கள் அலுவலக நேரத்தை திறன்மிக்க வகையில் பயன் படுத்தாமல் பல வழிகளில் வீணடிக்கின்றனர். இதனால் அரசுக்கும், நிறுவனத் துக்கும், பொதுமக்களுக்கும் நேரடியான மறைமுகமான பல நஷ்டங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக தமிழ் நாட்டு பாமர மக்கள் அரச ஊழியர்களால் படும் துன்பம் கொடுமையிலும் கொடுமை.

இப்படி ஊழியர்களின் அலுவலக நேர வீணடிப்பு குறித்த ஒரு சிறிய புள்ளி விபரம்

8 மணிநேர அலுவலக நாள் ஒன்றில் ஊழியர் ஒருவரால் வீணடிக்கப் படும் நேரம்
  • ஊழியர்கள் ஒத்து கொள்வது                  - 3 மணி நேரம்
  • மனிதவளத்துறை (HR ) அனுமானிப்பது  - 0 .9 மணி நேரம்
  • மனிதவளத்துறை (HR ) சந்தேகப்படுவது - 2 .0 மணி நேரம்

வேலை நேரம் வீணடிக்கப்படும் விதம்
  • 44 % - இணையத்தில் உலாத்துதல்
  • 23 % - சகபாடிகளுடன் வாங்க பழகலாம்
  • 04 % - விட்டத்தை வெறித்த படி கனவு காணல்
  • 04 % - பிறிதொரு வேலைக்கு அப்ளை பண்ணல

பிறந்த ஆண்டும் வீணடிக்கும் நேரமும்
  • 1930 -1949 -> 0.50 hrs
  • 1950 -1959 -> 0.68 hrs
  • 1960 -1969 -> 1.19 hrs
  • 1970 -1979 -> 1.61 hrs
  • 1980 -1985 -> 1.95 hrs
அப்பா,மாமா மார் நல்லவங்க

இணையமும் வேலைத்தளத்தில் நேர வீணடிப்பும்
  • 66 % ஆனோர் சொந்த தேவைக்கு இணையத்தை வேலைத்தளத்தில் பயன்படுத்துவதாக ஒத்துகொள்கின்றனர்.
  • 60 % ஆன ஆன்லைன் வியாபாரம் அலுவலக நேரத்தில் தான் நடைபெறுகிறது.
  • Youtube இக்கு இதன் 65 % ஆன பார்வையாளர்கள் அலுவலக நேரத்தில் வருகின்றனர்.
  • 77 %ஆன ஊழியர்கள் Facebook இனை அலுவலகத்தில் பயன்படுத்துகின்றனர்
  • 3% ஆன ஊழியர்கள் Facebook இனை அலுவலகத்தில் மட்டுமே பயன்படுத்து கின்றனர்
வேலை செய்யும் தமிழ் வலைபதிவர்கள்/வாசகர்கள்?(ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்)

நேரத்தை வீணடிப்பதட்கு ஊழியர்கள் சொல்லும் காரணம்
  • 24 % ஆனோர் - போதிய ஊதியமில்லை
  • 33 % ஆனோர் - வேலைப்பழு குறைவு
  • 15 % ஆனோர் - சக ஊழியர்கள் தான் குழப்புகின்றனர்

சிலபேர் வேலைக்கு போறதே
  • நல்லா தூங்க
  • இலவச AC ,இணையம்
  • ஊருக்குள்ள பந்தா காட்ட
  • கல்லாவை நிரப்ப (லஞ்சம் )
  • சிறந்த முறையில் பொழுது போக்க
  • சக ஊழிய பிகருங்களுக்கு நூல்விட
  • கோப தாபங்களை அடுத்தவர் மேல் தீர்க்க
  • மனைவி குழந்தைங்க தொந்தரவு இல்லாம இருக்க

வீடியோ (ஒரு நிமிடத்தில் 10 வயதாகும் குழந்தை )

19 comments:

சிவராம்குமார் said...

இதுல ப்ளாக் படிக்கிறது, எழுதுறது பத்தி போடலையே!!!

Anonymous said...

Hope I agree with your analysis and research!
You see daily comments on Dinamalar & Dinamani etc tamil newspapers readers comments area. All Tamilians are wasting time by commenting others and particularly NRI's spoiled the name of them and country.

Unknown said...

இந்த தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒத்துவராதுன்னு நினைக்கறேன்.. மேனேஜ்மென்ட் லெவல்ல இருக்கறவங்க அட்வான்டேஜ் எடுத்துக்க முடியும்..

வேலை செய்யாததற்கு நீங்கள் கொடுத்துள்ள காரணங்கள் மிகச்சரி..

ஹரிஸ் Harish said...

சிலபேர் வேலைக்கு போறதே

இலவச AC ,இணையம்
சக ஊழிய பிகருங்களுக்கு நூல்விட..//

என்ன தான சொல்லுறீங்க.?,,,
உங்கள தனியா கவனிச்சிக்கிறேன்,,,

nis said...

கருத்திற்கு நன்றி நண்பர்கள்

சிவா என்கிற சிவராம்குமார்
Sai Gokula Krishna
பதிவுலகில் பாபு
ஹரிஸ்

nis said...

@ சிவா என்கிற சிவராம்குமார் ப்ளாக் ஐ பற்றி தகவல் கிடைக்கவில்லை. பல நிறுவனங்களில் முடக்கியும் விட்டார்கள்.

@பதிவுலகில் பாபு ம் , தனியார் நிறவனங்களில் செய்தால் வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள்.

@ ஹரிஸ் :)))))

test said...

சூப்பர்! :-)

nis said...

@ Sai Gokula Krishna

ya , i agree with u, I don't know about Dinamalar & Dinamani. But i have seen these things
on "thatstamil.com, readers normally use bad words to comment on article ,, i wonder why the editors not consider those things.

nis said...

நன்றி ஜீ

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///
http://nishole.blogspot.com/2010/11/blog-post_11.html

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்./////

ஹி ஹி ஹி . . .
இதுக்கு என்ன சொல்லுரிங்க பாஸ் ?

pichaikaaran said...

யதார்த்தமான பதிவு

ம.தி.சுதா said...

ஆகா என்ன ஒரு தரவுகள்.. அருமை.. சிலபேர் வேலைக்குப் போறதே.. பகுதி இன்னும் அருமை..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

KANA VARO said...

உங்கள் வலையில் அடிக்கடி மேய்பவன் நான். பலா் உங்கள் பதிவை பேஸ்புக்கில் லிங் பண்ணுகிறார்கள். நல்ல விடயம் தான்.

இந்தப் பதிவும் புள்ளி சூப்பா். கடைசி வீடியோ சான்ஸே இல்லை.

Philosophy Prabhakaran said...

// ஊழியர்கள் ஒத்து கொள்வது - 3 மணி நேரம் //
அடப்பாவிகளா...

Philosophy Prabhakaran said...

// 44 % - இணையத்தில் உலாத்துதல் //
ஆபீஸ்ல இருந்து தானே அப்திவு எழுதுறீங்க...

Philosophy Prabhakaran said...

// அப்பா,மாமா மார் நல்லவங்க //
அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. இது ஏதோ தொழில்நுட்ப கோளாறு...

nis said...

கருத்திற்கு நன்றி நண்பர்கள்

♔ℜocks ℜajesℌ♔™
பார்வையாளன்
ம.தி.சுதா
Varo
philosophy prabhakaran

nis said...

@♔ℜocks ℜajesℌ♔™ :)

@philosophy prabhakaran :)

Anonymous said...

புள்ளிவிபரம் அடிச்சுக் கலக்குறீங்க..

Post a Comment

Related Posts with Thumbnails