இதையெல்லாம் எப்ப தொட்டு பார்க்கிறது

Share

இன்றைய காலத்தில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்து செல்கிறது.முன்பெல்லாம் iphone வைத்து  இருந்ததால் அவரை பெரிய அரசன் போல பார்ப்பார்கள் . எப்ப  ipad apple , ipod touch வந்துதோ இப்ப எல்லோரும் அதை தொக்கி வைத்து ஆடு கிறார்கள் .

இலங்கையில் இதனுடைய பாவனை இல்லை என்றுதான் கூறலாம் . அனாலும் இது வர நீண்ட காலம் இல்லை .இதனுடைய விலை கூடவாகத் தான் உள்ளது . இங்கு பாடசாலை மாணவர்கள் வாங்கி தர சொல்லி கேட்டால் அப்பா, அம்மா க்கள் மண்டையை பிளந்து விடுவார்கள் , வயதான பிறகு வாங்கலாமா என மனைவியிடம் கேட்டால் அப்பா அடித்ததை விட மோசமாக அடி விழும். நம்மட பொருளாதாரம் அப்படி .

Tablet Devices எனப்படும் இவற்றை Apple, Samsung ,LG ,இவன் போன்றவை  போட்டி போட்டு வழங்குகின்றன . அது பற்றிய ஒரு பார்வை .
  
சந்தை வாய்ப்பு
*11 %  ஆனோர் ஏற்கனவே வைத்துள்ளார்கள் .
*38 %  ஆனோர் 2011 ஆம் ஆண்டுக்குள் வாங்க போறார்கள் .
 

2011 ஆம் ஆண்டுக்குள் வாங்க போறவர்களின் வயது
  • 00 -17       27 .27 %
  • 18 -24       26 .29 %
  • 25 -34       35 .26 %
  • 35 -44       39 .08 %
  • 45 -54       44 .00%
  • 55 +         42 .11 %

Apple இன் வாடிகையாளர்கள்
  • 16 .4 % ஆனோர் மற்றையவை எவ்வளவு விலை குறைவானாலும் Apple தான் எல்லாமே.
  • 5 % ஆனோர் எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக உள்ளார்கள்
  • 60 % ஆனோர் மற்றையவை Apple ஐ விட பாதி ( 50 % ) விலையில் கிடைத்தால் ஆப்பிள் க்கு டாட்டா காட்டி விடுவார்கள் .

வாங்கும் போது முன்னுரிமை கொடுப்பது
  • 52 %   Apple
  • 11 %   Dell
  • 10 %   RIM -Blackberry
  • 09 %   Samsung
  • 08 %   Microsoft
  • 06 %   Hewlett Packard (hp )
  • 04 %   LG

அனேகமான மக்கள் அறிந்திருப்பது
*74 %  Apple store
*37 %  Google Android Mkt

 
வாங்கும் போது முன்னுரிமை கொடுப்பதில் ஆண்களிற்கும் , பெண்களிற்கும் இடையான வேறுபாடுகள்
ஆண்கள்
  1. தரம் ( Quality )
  2. இலகுவான பாவனை
  3. விலை
  4. தோற்றம் , அழகு , வடிவமைப்பு
  5. அளவு , நிறை
  6. உற்பத்தியாளரின் மேல் உள்ள நம்பிக்கை
  7. Application களின் எண்ணிக்கை
பெண்கள்
  1. விலை
  2. இலகுவான பாவனை
  3. தரம் ( Quality )
  4. அளவு , நிறை
  5. தோற்றம் , அழகு , வடிவமைப்பு
  6. உற்பத்தியாளரின் மேல் உள்ள நம்பிக்கை
  7. Application களின் எண்ணிக்கை

வயதும் , பாவனை நோக்கமும்
இணைய பாவனை
  • 18 -24       51 %
  • 25 -34       65 %
  • 35 -44       66 %
  • 45 -54       81 %
  • 55 +          65 %
படிப்பும் , அது சார்பான விடயங்களும் ( Study )
  • 18 -24       32 %
  • 25 -34       19 %
  • 35 -44       16 %
  • 45 -54       16 %
  • 55 +          18 %
வேலை தளத்தில் வேலையின் திறனை அதிகரிக்க
  • 18 -24        21 %
  • 25 -34        19 %
  • 35 -44        13 %
  • 45 -54        13 %
  • 55 +           16 %
நண்பர்களுடன் கும்மாளம் போட ( email , Facebook , ...)
  • 18 -24        32 %
  • 25 -34        38 %
  • 35 -44        40 %
  • 45 -54        36 %
  • 55 +          40 %
Games விளையாட ( இது என்னை போன்றவர்களுக்கு )
  • 18 -24        15 %
  • 25 -34        21 %
  • 35 -44        21%
  • 45 -54        12 %
  • 55 +           14 %
படங்கள் பார்க்க , Share பண்ண
  • 18 -24        26 %
  • 25 -34        27 %
  • 35 -44        34%
  • 45 -54        29 %
  • 55 +           32 %
பாட்டு கேட்க , திரை படங்கள் பார்க்க
  • 18 -24       38 %
  • 25 -34       43 %
  • 35 -44       44%
  • 45 -54       28 %
  • 55 +          28 %
புத்தகங்கள் வாசிக்க , Magazine வாசிக்க
  • 18 -24       22 %
  • 25 -34       32 %
  • 35 -44       29%
  • 45 -54       35 %
  • 55 +          42 %
யாராவது ப்ளாக் எழுத, பார்க்க பாவிக்கிரீங்க்களா
நீங்களே வெற்றிடத்தை நிரப்புங்க
*ஆம்             %
*இல்லை       %

இது UK இல் உள்ள ஒரு ஆராச்சி நிறுவனத்தால் , எல்லா நாடுகளையும் பிரதி பலிக்க கூடியவாறு குறிப்பிட்ட சில மக்களிடம் நடத்தபட்டதற்கு அமைவாக பெற்று கொள்ளப்பட்ட ஒரு பெறுபேறாகும் .

14 comments:

அன்பரசன் said...

நல்ல தகவல்கள்.

சிவராம்குமார் said...

இதைஎல்லாம்னு இப்படி ஒரு படம் போட்டா நாங்க எதேனு நினைக்கிறது!

nis said...

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றிகள் நண்பர்

அன்பரசன்
சிவா என்கிற சிவராம்குமார்

nis said...

@ சிவா என்கிற சிவராம்குமார் :))

ம.தி.சுதா said...

தகவல் திலகமே வாழ்க வாழ்க...

Unknown said...

புள்ளி விவரங்கள் எல்லாம் கலக்குதுங்களே.. எங்கேயிருந்து பிடிக்கறீங்க இவ்வளவு விசயங்களை.. தகவல் களஞ்சியம் நீங்கள்.. தொடருதுங்கள்.. வாழ்த்துக்கள்..

pichaikaaran said...

பெருமூச்சு

ஹரிஸ் Harish said...

தகவல் திலகமே வாழ்க வாழ்க...ரிப்பீட்டு..

nis said...

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றிகள் நண்பர்

ம.தி.சுதா
பதிவுலகில் பாபு
பார்வையாளன்
ஹரிஸ்

nis said...

@ ம.தி.சுதா , ஹரிஸ் :)))

சசிகுமார் said...

நீங்க என்ன விஜயகாந்த் விசிறியா புள்ளி விவரங்களை அடுக்கி கொண்டே போறீங்களே

Anonymous said...

உங்களுக்கு தகவல் சுரங்கம் னு பெயர் வைக்கலாம்,...எவ்ளோ மேட்டர் அப்பப்பா..சூப்பர்..
இருந்தாலும் இலங்கையில் நம் குழந்தைகளுக்கு இது எட்டாக் கனியாக இருக்கிறது என்பது ஏமாற்றமே...தங்களின் தலைப்பே அந்த எதிர்பார்ப்பை எடுத்து காட்டுகிறது.

nis said...

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றிகள் நண்பர்

சசிகுமார்
padaipali

@சசிகுமார் :)))
@padaipali ம்ம் எட்டாக் கனியாக இருக்கிறது

அணில் said...

ஐ பேடில் தமிழ் வலைதளங்கள் அருமையாக தெரியும். ஆண்ட்ராய்ட் டேப்லட்களில் ஓபேரா இணைய உலாவி பயன்படுத்த வேண்டும். ஆண்ட்ராய்ட் புதிய பதிப்பு 2.3 இந்தி மொழியை பாவிக்கிறது. தமிழுக்கு விரைவில் ஆதரவு கிடைக்குமென நம்புவோம். இன்னும் பத்து வருடங்களுக்குள்ளாகவே கிராமங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

Post a Comment

Related Posts with Thumbnails