உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமா?

Share
 
நாம் ஒருவரை முதல் முறையாக சந்தித்தால் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து விட்டு அடுத்ததாக கேட்பது "உங்களுடய Facebook  a/c என்ன?". எங்களில் எத்தனை பேர் ஒன்றிற்கு மேற்பட்ட a/c வைத்திருக்கின்றோம்?.
 
பொது இடம் ஒன்றிலே 2 அம்மணிகள் கதைக்கிறார்கள், ஒரு 10 நிமிடம்  Facebook  ல் என்னுடைய மகன் இருக்கவிடுறானா?அவன தூங்க வைச்சிட்டு Farmville  விளையாடுவதற்குள் போதும் என்றாகிவிடுகிறது. சத்தியமா நான் ஒன்றும் ஒட்டுக் கேட்கலெங்க.

5 வயதுடைய பிள்ளைகள் கூட  தங்களுடைய சகோதர,சகோதரிகளின் பிறந்த ஆண்டை குறிப்பிட்டு a/c ஐ உருவாக்கிவிட்டு, இவங்க Facebook ஐ யே அதிர வைக்கிறாங்கப்பா. உண்மையை சொல்ல வேண்டுமானால் நாங்கள் எல்லாவேளைகளிலும், எல்லோரிடதிலும் நட்புடன் இருப்பதில்லை.
 
பிரச்சனைகள் வரும்போது எங்களுடைய பலத்தையோ, வார்த்தைகளையோ எல்லோரிடமும் நேரடியாக பிரயோகிக்க முடியாது. கோபத்தில் உங்களுடைய மனைவியை உதைத்தீர்களானால் அவள் பெட்டி படுக்கைகளுடன் அம்மா வீட்டிற்கு கிழம்பி விட்டால் பிறகு வயித்தில ஈர துண்டுதான்.

உங்கள் கோபத்தையோ,மகிழ்ச்சியையோ காட்டுவதற்கு இருக்கவே இருக்கு Facebook Emoticons

 
Cute Animated Emoticons
 
இது வழமையான சிரித்த முக அமைப்புகளை கொண்டிராது, வித்தியாசமான மிருகங்களின் அமைப்பையும்,சிறு குழந்தைகளின் உருவ அமைப்பையும் கொண்டுள்ளது.உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குரிய பல அரிதாக கிடைக்க கூடிய பல உருவங்களை பெற்று கொள்ள முடிகிறது.

Moods
 
எங்களின் உணர்வுகளை இந்த Moods application ஊடாக வெளிப்படுத்த கூடியதாக உள்ளது.Facebook லே இருக்க கூடிய போலியில்லாத ,உண்மையான ஒன்று.இதிலே பெரிய வடிவத்திலான முக வடிவங்களையும் பெற்று கொள்ள முடிகிறது.பதிவேடு ஒன்றின் ஊடாக கடந்த தினங்களில் எப்படியான Mood ல் இருந்து அறிய முடிகிறது. 44725 பேர் இதில் இணைந்துள்ளார்கள்.

Facemoods
 
Facebook இலே இருக்கின்ற emoticons application களில் இது முக்கியமான இடத்தை வகிக்கின்றது.பல்வேறு வடிவான உருவங்களை நாம் இதிலிருந்து எடுத்து கொள்ள முடிகிறது. 4,264,531 பேர் இதில் இணைந்துள்ளார்கள். 2009 ஆம் ஆண்டிலே இது Facebook ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Facebook Emoticons.com
 
இந்த இணைய தளத்தில் மற்றைய இடங்களில் எடுக்க முடியாத Pacman,shark போன்றவற்றை பெற்று கொள்ள முடிகிறது.87,724 fans ஐ இது கொண்டுள்ளது.

Monkey Faces
 
இது எல்லோரையும் வசீகரிக்கின்ற ஒன்றாகும்.இது Indonesian மொழியில் அமைக்கப்பட்டுள்ளது. 2360 பேர் இதில் இணைந்திருக்கிறார்கள்.

Facicons
 
இந்த browser add ஐ இலகுவாக எங்களுடைய Facebook updates ல் சேர்க்க முடிகிறது.விரைவானதும், இலகுவானதுமான பாவனைக்காக இது toolbar இலே சேர்க்கபட்டுள்ளது.

Emoticons
 
இது codes, tips ஐ தருகிறது.இதன் ஊடாக இந்த வடிவங்கள் பதிவுகளிற்கு முன்னே தோன்றுகிறது.இதுவும் பல்வேறு பட்ட வடிவங்களை தருகிறது.இதிலே jester, cheeseburger என்பவை குறிப்பிடதக்கவையாகும்.9865 fans ஐ கொண்டுள்ளது.

வேலைக்கு மேல வேலைய தந்து ஆப்பு வைக்கிறாங்கப்பா

Share
 
அண்மையில் நண்பன் ஒருவனை சந்தித்த போது கூறினான்  , "வீட்டிற்கு போனால்  அதை செய், இதை செய் என மனைவியின் தொல்லை. சரி வேலை தளத்திற்கு சென்று secretary யுடன் கும்மாளம் போட போனால் அங்க கூட வேலைக்கு மேல வேலைய தந்து  ஆப்பு வைக்கிறாங்கப்பா."

வேலை தளத்திலே வேலை செய்யாமலே  BUSY ஆக இருப்பதாக மற்றயவர்களை எப்படி நம்ப வைப்பது?????
  
Own Internet Connection
அதிகமான வேலை தளங்களில் ஒருவருக்கு 01 கணணி தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதனுடைய Screen,Internet Speed கடுப்பை ஏற்படுத்துவதாகவே அமைகிறது.இதுமட்டுமா,  நண்பர்களிற்கு மிகவும் வேண்டிய பல இணையத்தளங்களை IT Manager முடக்கி ஆப்பு வைத்துவிடுகிறார். 
எங்களுடைய சொந்த laptop மட்டுமல்ல mobile ஐ வேலை தளங்களில் 7 நாட்களும் வைத்திருந்தால் வேலைத்தள கணணியில் செய்ய முடியாததை செய்யமுடியும்.CEO இதை அவதானிக்காமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

 

Social Networks

சமூக இணையத்தளங்கள் குறிப்பாக Face book ,Twitter பல ஊழியர்களை சர்ச்சையில் மாட்டியிருக்கிறது .பல வேலை தளங்கள் இவற்றை தடை செய்துள்ளன. CEO,Manager, எங்கே ஒருத்தனை போட்டுக் கொடுத்துவிட்டு நல்ல பெயர் எடுக்கலாம் என காத்திருக்கும் 
ஆசாமிகளையும் நண்பர்களாக Face book லே சேர்த்துவிட்டு, வேலைத்தளங்களில் தாங்கள் செய்த குறும்புள், உயர் அதிகாரிகளை திட்டி கெட்ட வரர்த்தைகளாக Status Update ஆக போட்டு மட்டுபவர்களே அதிகம். சமூக இணையத்தளங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது.

Excel Games

Excel ஐ வேலை தளங்களில் சில ஊழியர்கள் பயன்படுத்துவதில்லை. Games பிரியர்களிற்கு இது உகந்தது.மற்றையவர்களிடம் மாட்டிக் கொள்ளாது வேலை செய்வது போல நடித்து கொண்டே விரும்பிய Games ஐ விளையாடிக் கொள்ள முடியும். கடுப்பை கிளப்பும் Minesweeper போல இல்லாது Sonic the Hedgehog , Super Mario World போன்ற நல்லவற்றையும்  விளையாட  முடியும்.

Chat Status

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களிற்கு chat status அவசியமானதாகும்.status ஐ நிரந்தரமாக "Busy" , "Away" என மாற்றி,காரணத்தை சிறிய message ஆக விட்டால் CEO உங்களை online ல் தேடினாலும் கண்டு கொள்ள முடியாது.அப்புறமென்ன வீட்டில உங்களிற்கு விரும்பியவருடன்  "ச்சு தரியா ஒரு ச்சு தரியா" என பாட வேண்டியது தான்.

iPad

எங்கு பார்த்தாலும் iPads ஐ பற்றிய பேச்சுத்தான். $500-600 க்கு வாங்க கூடியதாக உள்ளது.இதனுடைய தொழிற்பாட்டு முறைகளையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடிகிறது. iPads  ஐ எடுத்து வேலையுடன் தொடர்புடைய document ஐ திறந்துவிட்டு விரும்பியவாறு வேலை தளத்தை சுற்றி வரமுடியும்.வேலையுடன் தொடர்புடையவற்றையே நீங்கள் செய்வதற்கு அங்கும்;இங்கும் செல்கிறீர்களென உயர் அதிகாரிகளை நம்ப வைப்பது உங்கள் சாமர்த்தியம்.

Phone Code

தொலைபேசி பல்வேறு வகைகளில் தொல்லையை தந்தாலும்,வேலை தளத்திலே வேலை  செய்யாது நண்பர்களுடன் பேச உதவுகின்றது.உங்கள் நண்பர்களுடன் பேசுகின்ற போது சில வேலையுடன் தொடர்பு பட்ட சொற்களை சத்தமாக கதையுங்கள்.அப்போதுதான் உயர் அதிகாரிகள் நீங்க வேலை செய்கிறீர்கள் என நம்புவாங்க.பொதுவாக நண்பர்களுடன் வெளியிடங்களில் கதைப்பது போலல்லாது business  voice ல் பேசிக்கொண்டால் அதிகாரிகளிற்கு சந்தேகம் வரவே வராது.

Boss Buttons
Boss Buttons பொதுவாக நேரத்தை வீணடிக்கும் தளங்களிலே இருக்கிறது.Google Chrome ஐ பாவிக்கிற சந்தர்பத்தில் own personal Boss Button ஐ install செய்ய முடியும். உயர் அதிகாரிகள் வருகிற போது , ஒரு mouse click உடன் எதனையும் விரைவாக மறைப்பதற்கு இந்த buttons உதவுகிறது.

 
 
பதிவு பிடித்திருந்தால் Like ல் ஒரு குத்து, பிடித்திராவிட்டால் மூஞ்சில ஒரு குத்து விடுங்க.


தப்பித்துக் கொண்ட இலங்கையின் (DEHIWALA ZOO) மிருக காட்சி சாலை

Share

நாய்க்கு சோறு வைச்சா சாவும் வர வாலாட்டும் என கவிஞர் பாடல் எழுதியிருக்கிறார். சிங்கம்,புலி,கரடி க்கு வைச்சா என்ன நடக்கும் என ஒருவரும் பாடல்  எழுதவில்லை. அனேகமாக கொலை தான் விழும். மிருகங்களை மிருக காட்சி சாலையில் பராமரிக்கிறோம் என்று கூறி பணம் சம்பாதிப்பது போக , 

வாயில்லா பிராணிகளிற்கு சத்தான உணவுகள்,நீர்,மருந்துகள் கொடுப்பதாக தெரியவில்லை.பாவி பசங்க மிருகங்களிற்கான உணவையும் சாப்பிட்டு ஏப்பம் விடுவாங்களோ???.இதனால் தானோ தெரியவில்லை மிருக காட்சி சாலை ஊழியர்களும்  சிங்கம்,புலி,கரடி போன்றே முரட்டு பய பிள்ளகளாக இருக்காங்க.

அன்பான அப்பா பதிபவர்களே, அம்மா பதிபவர்களே, அண்ணா பதிபவர்களே,தம்பி பதிபவர்களே, சகோதரி பதிபவர்களே இந்த  Zoo க்களுக்கு உங்க பிள்ளைகளை கூட்டிச் சென்று விடாதீர்கள்.

Dhaka Zoo (Bangladesh)

2009 ஆம் ஆண்டில் இங்கு பெரும் தொகையான மிருகங்கள் இறந்துள்ளன. 21 வகையான அரிய வகை உயிரினங்களும்,ஒருஅரிய வகை ஒட்டகமும் உயிர் இழந்துள்ளது.மிருக காட்சி சாலைக்கு பொறுப்பானவர்கள் பணி நீக்கப்பட்டு , இன்று வரை இறந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டதாக தெரியவில்லை.இங்கு 2000 ற்கு மேற்பட்ட மிருகங்கள் இருக்கறதாம்.

Bowman ville Zoo (Ontario, Canada)

கடந்த யூலை மாதம் மிருகங்களை Nova Scotia ல் இருந்து Bowmanville Zoo க்கு மாற்றும்போது களவாடி பசங்க புலி ஒன்றையும் ,2 ஒட்டகங்களையும் திருடியது மிகவும் பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டது.இவற்றை மீட்க மிருக காட்சி சாலை $20000 ஐ அறிவித்திருந்தது. களவாடி பசங்க மிருகங்களை நாடு கடத்தினால் இதை விட 10  மடங்கு தொகையை பெற முடியும்.

Shenyang Forest Wild Animal Zoo (China)

கடந்த 3 மாதங்களில் 11 அரிய வகை Siberian புலிகள் இந்த மிருக காட்சிசாலையில் இறந்துள்ளன. அங்குள்ள ஊழியர்கள் இவை நோய்களால் இறந்துள்ளன என கூறினாலும், வனலாக அதிகாரிகளும் சமூக பாதுகாவலர்களும் இவை போதிய அழவு ஊட்டச் சத்து இல்லாமையால் இறந்துள்ளது என்கிறார்கள்.China விலே இன்னமும் 50 புலிகளே உள்ளமை குறிப்பிடதக்கது.               Read

சிறிய அளவில் நடத்தப்படும் நிறுவனங்களிற்குத்தான் மரண அடி

Share
தற்போதைய பொருளாதார நிலையில்  பல தனியார் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியாது மூடு விழா நடந்துள்ளது.அதுவும் சிறிய அழவில் நடாத்தப்படும் நிறுவனங்களிற்குத்தான் மரண அடி தொடர்ந்துவருகிறது.உரிமையாளர்கள், முகாமையாளர்கள் செலவினை குறைப்பதில்  தாங்கள் ஈடுபடுவதாக சொல்லி புதிதாக வேலைக்கு செல்பவர்களை "வீட்டிலே மனைவிக்கு துணையாக இரு" என்ற நல்ல எண்ணமோ தெரியவில்லை  வேலையிலிருந்து சாணக்கியமாக கழற்றி விடுறாங்க.

வாழ் நாள் முழுவதும் செலவில்லாது உபயோகிக்க கூடிய Free Software கிடைக்கும் தருணத்தல , ஊழியர்களிற்கான ஊதியத்தை விட பல மடங்கு செலவை ஏற்படுத்தும் Software களில் வீணாக பணத்தினை முடக்குகிறார்கள் சின்னப்பிள்ளதனமா

இந்த open-source களை, மிகவும் செலவு வாய்ந்த  Microsoft Office, Windows OS, Adobe Photo shop, Microsoft Exchange server ற்கு பதிலாக பயன்படுத்த முடிகிறது.

Zimbra

இது ஒரு free email and calendar client.எந்த ஒரு Windows, Apple, Linux  லும் இயங்ககூடியது.online,offline ஆகவும் POP email account ,Yahoo! Mail உடனும் இயங்ககூடியது.தற்போதைய தொலைபேசிகளிலும் இதனை செயற்படுத்த முடிகிறது.

Clam Win
இது ஒரு open source antivirus program. இதனை Microsoft Windows 7 / Vista / XP / Me / 2000 / 98 and Windows Server 2008 and 2003 ற்கு பயன்படுத்தமுடிகிறது. பொதுவாக இது real-time scanner ஆக தொழிற்படுவதில்லை.virus ஐ இல்லாது ஒழிக்க manual ஆக scan செய்து கொள்ளமுடியும்.

Open Proj

இது open source project management desktop software.இதனை Microsoft Project க்கு பதிலாக பயன்படுத்த முடிகிறது.இதன் ஊடாக project ல் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை திருத்த முடிகிறது.Windows, Mac, Unix , Linux ல் செயல்படுத்த முடிகிறது.

Ubuntu

இந்த open-source  free operating system ;windows ஐ விட தெளிமையாகவும் விரைவாகவும் செயல்படுகிறது.chat,email, office apps, Firefox போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

Gnu Cash

இந்த personal  small-business financial-accounting software ஐ Linux, BSD, Solaris , Mac OS X  Microsoft Windows என்பவற்றில் உபயோகிக்க முடிகிறது.bank accounts, stocks, income expenses எனபவற்றை மிகவும் இலகுவான முறையில் உபயோகிக்க முடிகிறது.double-entry accounting, stock bond mutual fund accounts இதிலே மிக முக்கிய பங்காற்றுகிறது.

சுட்டதில் எனக்கு றொம்பவே பிடித்த  5 FREE open-source ஐ உங்களுடன் வெட்கத்தை விட்டு பகிர்ந்தேன்ங்க. 
கெட்டவார்த்தையால திட்டுறது இங்க கேட்குதுங்க.

10 வருடங்களில்(2000-2010) 1000 ஆண்களுடன் sex

Share
 
பல்கலைகழக பட்டப்படிப்பை முடித்த 30 வயதான அழகான Christina எனப்படும் பெண்மணிக்கு ஏற்பட்ட விபரீதமான ஆசைதான் இது.2000 ஆம் ஆண்டளவில் கடுமையான நோய்க்கு உள்ளான போது இவருடைய நண்பன் ஒருவன் "Sex And The City"(2000 தொடரின் முதலாவது பகுதியை பார்க்க  கொடுத்திருக்கிறான் .கிறாடகன் என்ன நோக்கத்தில் இதை பார்க்க  கொடுத்தானோ???.பின்ன என்னங்க பெண்மணி நோயால நொந்து நூடில்ஸ்  ஆகியிருக்கும் போது பார்க்க  கொடுக்கிற serial ஆ இது?

அந்த TV show உள்ள கதாபாத்திரங்கள் அவருக்கு றொம்பவே பிடித்துவிட்டது. இதனால் இந்த அம்மணி ஒரு விபரீதமான ஒரு இலக்கைஆரம்பத்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இது ஆண் சிங்கங்களிற்கு புல்லரிப்பையும்,குதூகலத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அது தாங்க 10 வருடங்களில்(2000-2010) 1000 ஆண்களுடன் sex வைத்திருப்பதுதான். அந்த TV show லே Sam பல ஆண்களுடன் sex வைத்து இருந்ததாகவும் அவர் அதை பெருமையாக எண்ணியதாகவும்,தானும் அதை பின்பற்றியதாக கூறுகிறார் இந்த கற்புக்கரசி.

ஆண்களின் வீரத்தை 10/10 என தரவரிச வேற. ஒரு ஆசாமி படத்தில உள்ளவாறு  9/10 எடுத்திருக்கிறார்.
 
அம்மணி  உலகம் முழுவதும் தனது sex வேட்டைய செய்துள்ளார் வாரத்திலே குறைந்தது 1 பழக்கமற்ற ஆணுடனாவது படுக்கையை பகிர்கிறார்.சில வேளைகளில் 2 ஆண்களுடனாவது sex ல் ஈடுபடுகிறார்.அம்மணி கூறுகையில் "நான் என்னை Love பண்ணும் ஆண்களையே விரும்புவதாகவும்,sex நோக்கத்திற்காக மட்டுமே என்னை அணுகுபவர்களை தான் விரும்பவில்லையென கூறியுள்ளார்."செய்யிறது கறுமாந்திர வேலை இதில தத்துவம் வேற,

இவர் 5 படுக்கை அறைகளை கொண்ட வீட்டிலே வசித்து வருகிறார்.இவருடைய பெற்றோர் இந்த வாழ்க்கை முறையை இன்னமும் அறியவில்லை.இந்த கற்புக்கரசி தனது பள்ளிக்காலத்திலே நண்பன் ஒருவனுடன் sex வைத்திருந்ததாகவும் அது ஒரு Disaster எனவும் கூறியிருக்கிறார். பாடசாலையில படிக்காம  sex ஆராய்ச்சி பண்ணினா இப்பிடித்தான் .[நமக்கு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கலையே என கடுப்புத்தான்]

Christina தனது வெற்றிகரமான sexப யணத்தை college Students' Union ல் ஆரம்பித்திருந்தார்.அம்மணியின் sex பயணத்தை ஆரம்பித்து வைத்தவர் Mike.இருவரும் ஒன்றாக மது அருந்திய பின்னர் அம்மணிக்கு ஏற்பட்ட அசதியால் தான் வீடு புறப்படபோவதாகவும் விரும்பினால் தன்னுடன் இணையுமாறு கூற , மறுத்தால் பெண் பாவமாகிவிடுமென கூடவே சென்றுவிட்டார்.

2003 ஆம் ஆண்டில் 300 ஆண்களுடன் sex வைத்திருந்திருக்கிறார்.இவர் இதை ஒரு அவமானமாக கருதாமல், தங்கியிருந்த இடத்தில் உள்ள Bar க்கு சென்று ஆண்களை தெரிவு செய்து Italy ல் வாரம் ஒன்றிற்கு 15 பேருடன் sex வைத்திருந்திருக்கிறார். என்ன கொடும சரவணா இது???

கடந்த மாதம் இவர் தனது 1000 ஆம் ஆணுடன் sex ல் ஈடுபட்டு தனது தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். விபச்சாரி என மற்றையவர்களால் முத்திரை குத்தப்பட்டாலும், இதை அம்மணி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வாழ்க வழமுடன்,,, இப்படியான பெண்மணிகள் இருக்கும் வரை  நாட்டில பஞ்சம் ஏற்படாதுங்கோ???நண்பர்களே கேட்பதிற்கு மன்னிச்சுங்கோப்போ யாராவது இந்த 1000 ல இருக்கீங்களா?

KFC , MCDONALDS ,.... இன் இரகசியங்கள்

Share

KFC – Double Down

ஆரோக்யமான இளைய சமுதாயம் இன்றைய காலகட்டத்திலே தேடிச் செல்கின்ற Fast Food களில் இது முதல் இடத்தை பிடித்துள்ளது.இது 550 ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.இது cheese,sauce,fried chicken ஐ சேர்த்து ஒரு bun ஐ போன்ற வடிவத்திலே உருவாக்கின்றார்கள். இதிலே பாண் உபயோகிப்பதில்லை.இதற்கு ஒப்புடைய வேறு ஒன்றை உபயோகிக்கின்றார்கள். அதெல்லாம் தொழில் ரகசியம்ங்க,வெளியில சொல்ல கூடாது.

Pizza Hut – Double Roll Pizza

 
ஆரம்பத்தில் இருந்தே Japan ஐ அதிர்ஸ்டம் தாலாட்டி வருகிறது.பிரபல்யமான video games,Robot முதலில் Japan நாட்டு மக்களையே சென்றடைகின்றது.தற்போது இந்த Double Roll Pizza Japan நாட்டு மக்களை சென்றடைந்துள்ளது.இது 650 ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இந்த படத்திலே உள்ளவாறு இது hot dogs ஜ கொண்டுள்ளது.அத்துடன் இதனை சுற்றி soy beans, corn, garlic chips, green peppers உள்ளது. இதை பார்க்க வாயால வடியுதுங்க.

Fatburger – XXXL Burger
 
Fast food வரலாற்றிலே கண்டுபிடிக்கப்பட்ட மற்றையதொரு அருமையான உணவாகும்.இது 3 patties, eggs, bacon, cheese,சில தாவர உணவுகளையும் கொண்டுள்ளது.இது 500 க்கு மேற்பட்ட கலோரிகளை கொண்டுள்ளது. இதை சாப்பிடுவோர் சொர்க்கத்திற்கு செல்வதை போன்ற உணர்வென கூறுகின்றார்கள். இதனால் தான் நான் இதை சாப்பிடுவது கிடையாது.எனக்கு சொர்க்கம் செல்லத்தான் ஆசை , ஆனால் ஒரு 75 வருடங்களின் பின்னர் செல்வதாக உள்ளேன்.

McDonalds – McRib

Fast food உலகத்திலே இது மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது.இதை ஒரு கை பார்ப்பது உங்களுடைய தேடுகின்ற திறமையில்தான் தங்கி உள்ளது. இது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதிய உணவு நேரத்தில் தயாரிக்கபடுகிறது.இது 500 க்கு மேற்பட்ட  கலோரி ஊட்டத்தை எமக்கு தருகிறது.

Kenny Rogers Roasters - Muffin Submarine

இது பெரிதாக பிரபல்யமடையவில்லை.இது ice-cream வகையை சேர்ந்தது.மலேசிய நண்பர்கள் இதனை சுவைத்திருக்க கூடும்,மலேசியாவிலேதான் அதிகமாக விற்பனையாகின்றது.ஒரு வகையான cool தான் .3 வகையான ice-cream உருண்டைகள்  well, muffins ஐ சுற்றி போடப்பட்டுள்ளது.


[அது என்னமோ தெரியலைங்க ஒன்றை பற்றி தப்பா சொல்லிறதில
அப்படி ஒரு குதூகலம்.நான் இத இப்ப சொல்லியே ஆகணும்.]

 

McDonalds – Hula Burger

எனது பதிவிலே இந்த ஆசாமிக்குத்தான் முதலிடம்.இதனுடைய தோல்விக்கு காரணம் தவறான இலக்காகும்.பொதுவாக Roman Catholics  வெள்ளி கிழமைகளில் இறைச்சி உண்பது கிடையாது. sandwich ஆனால் இதற்குள்ளே இறைச்சிக்கு பதிலாக அன்னாசி பழ துண்டு ஒன்றை வைத்தது தான் விபரீதமாக மாறிவிட்டது.நம்ம பய பிள்ளைக Hula Burger ஐ உண்ணாது ,செம ஆப்பு வைச்சிட்டாங்கப்பா. அப்புறமென்ன Mc Donalds க்கு  தலையில துண்டுதான்.

Burger King – BK Veggie Burger

இது vegetarian களை மையமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றது.இறைச்சியை கொண்டிராவிட்டாலும் மிகவும் சுவையாக உள்ளதாக கூறுகின்றார்கள்.விதி இந்த உணவையும் விட்டு வைக்கவில்லை. இறைச்சியை கொண்டு தயாரிக்கபடும் இடத்தில் வைத்து தான் தயாரிக்கின்றார்கள் என புரளியை கிளப்பி விட அப்புறமென்ன தலையில துண்டுதான்.ஆனால் microwave ல்  வைத்துத் தான் தயாரிக்கிறோம் என விளம்பரம் செய்தாலும் பாச்சா பலிக்கவில்லை.
 
McDonalds – McLobster

இது ஆரம்பத்தில் இருந்தே அனைவராலும் விமர்சிக்கப்படுகின்ற ஒன்றாகும். இதனுடைய விற்பனையும் மிக குறைவாகவே உள்ளது.இதனுடைய தோற்றம் தான் மக்களிற்கு அருவருப்பை ஏற்படுத்துகின்றது.பழுதடைந்து சில நாட்கள் ஆகியதை போல தோற்றம் அளிக்கின்றது.
 
Chick-Fil-A – Carrot and Raisin Salad
 
இது உலகத்திலேயே மிகவும் தரம் வாய்ந்த fried-chicken sandwiches ஆகும். 170 கலோரி ஊட்டச்  சத்துகளை கொண்டுள்ளது.இருந்தாலும் என்னவோ இதுவும் எதிர் பார்த்த அளவு வருவாயை ஏற்படுத்தவில்லை.

Taco Bell – Pacific Shrimp Taco

பத்திரிகைகளில் அதிகமாக இந்த உணவை பற்றித்தான் எழுதுகின்றார்கள்.இதில் marinated shrimp, lettuce, salsa உள்ளது. இதை பார்க்கும் போது ஒரு கை பார்த்துவிடுவது போல இருந்தாலும், வாயில வைத்ததுடன் இது வாழ் நாள் எதிரி ஆகிவிடுகிறது.

இதெல்லாம் நம்மோட ECONOMY க்கு சாப்பிட சரி வராதப்பா . நமக்கு பறோட்டாதான்.

பொண்டாட்டிகிட்ட அடி வாங்கிறதே தனி சுகம் தாங்க.

Share
 
அண்மையிலே ஒரு சகோதர மொழி பிரபல்யமான தயாரிப்பாளரின் நட்புடன் எனது பாசமிகு அயல் நாட்டின்  நடிகை அசின் அம்மணியை நேரில் பார்க்கும் அதிர்ஸ்டம் என் முதுகை சுரண்டியது என்னால் மறக்க முடியாத ஒன்றாகும்.இது வரை சினிமாவில் மட்டுமே பார்த்த அசின் நியத்தில் ஜொலிக்கின்றார்.அப்படி எதைத்தான் பூசுறாவோ?.கையை நீட்டி Hi சொல்லிவிட்டு கையை பிசின் எடுத்திருந்தாலும் கட்டியணைக்கவில்லையே என மனசுக்குள்ளே கடுப்பாக இருந்தது. 
 
அப்படியே என்னை ஆசுவாசப்படுத்தி மற்ற பக்கம் பார்த்தா இது வரையிலே நான் பார்த்திராத உருவம் , அவன் மார்பு நம்ம சூர்யாவின் 6 packs ஜ போல பத்து மடங்கு பருத்து இருந்தது.இப்படி ஒரு Body Guard ஐ  இது வரையிலே நான் பார்த்திருக்கவில்லை. நாசமா போறவன் எதை திண்றானோ??. 1 மணி நேரம் அசினுடன் இருந்தாலும் ஏதோ 5 நிமிடங்கள் தான் போன்ற ஒரு உணர்வு. 
 
அப்போதுதான்  அதிர்ஸ்டம் என் பக்கம் வந்தது. நானும் அசினும் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் ஒன்றும் இராமர் கிடையாதுங்க.என்னை என்னால் control பண்ணமுடியாது போக அசினை கட்டியணைத்து முத்தம் கொடுத்துட்டங்க. Body Guard ஒருத்தன் எந்த பக்கம் இருந்து வந்தானோ,
 
"நச்சின்று இச்சொன்று தந்தானே இது போதுமா" அட நீங்க வேற பாட்டு பாடிற நேரமா இது, கன்னத்தில ஒரு Punch தாங்க கிடைச்சுது. அப்படியே அலறிக்கிட்டு முழிச்சு பார்த்தா Punch தந்தது கல்யாணங்கட்டி 10 நாள் கூட ஆகாத  பொண்டாட்டிங்க. ஏங்க சிரிக்கிறிங்க, 
 
பொண்டாட்டிகிட்ட அடி வாங்கிறதே தனி சுகம் தாங்க. இதெல்லாம் சகயம்ப்பா. ஏண்டி அடிக்கிற என கேட்க , என்னை அணைத்துகிட்டு  அசின்  அசின் ன்றீங்க .  இனி அந்த producer கேட்டாலும் அசின் பக்கம் தலை காட்டிறதே இல்லை .நம்மளால control பண்ணமுடியாதப்பா.

அதுக்கப்பிறம் என்னங்க  அன்பு மனைவியை super market க்கு துரத்திவிட்டு இந்த பிசின் Song தான் பார்க்க முடிஞ்சுது.

அன்புக்குரிய பதிவுலக  SUPER STARS நண்பர்களே ஏதாவத தவறு இருந்தால் மன்னிச்சுக்கிடுங்க.
 
நம்மளால அடி தாங்க முடியாதுங்க bcz
 
Building Strong ங்கு BASEMENT கொஞ்சம் WEEK க்கு.

இப்படியும் சில உற்சாக பானங்கள்

Share
Cynar

 
இதை 13 வகையான மூலிகைகள், தாவரங்களில் இருந்து தயாரிக்கின்றார்கள்.இதனை ஐஸ் மற்றும் குளிர்பானங்களுடன் கலந்து அடிக்கிறாங்கையா, என்ன கொடுமை சார் இது. இந்த 16.5% alcohol  இல் cynar சிறிய அழவு ருசியை தருகையில நம்ம பசங்க சொக்கி போயிடுறாங்க.

Ruou Mat Ran
 
இது பொதுவாக வியட்நாம் உணவகங்களிலே பிரமாதமாக தயாரிக்கிறாங்க.கொஞ்சம் பொறு கண்ணா . இதிலே பாம்பு தான் கதாநாயகன், கதாநாயகி. படத்திலே உள்ளவாறு பாம்புகளை துண்டுகளாக்கி wine உடன் கலந்து இரவு சாப்பாட்டுக்கு முதல் ஒரு பிடி பிடிக்கிறாங்ங. ஷ்ஷ்ஷ் இது அடிச்சா அதுக்கு நல்லதாமே.அட health க்கப்பா.


Chicha
 
Latin Americans இன் பிரமாதமான கண்டுபிடிப்பு. மரத்தை பிழந்துவிட்டு அதி சுற்றி துணியை கட்டி விடுறாங்க. சில மணித்தியாலங்களின் பின்னர் அந்த திரவத்தை வேறாக்கி அதனுடன் சீனியை கலந்து bacteria உருவாக்க 2 நாட்கள் வைக்கிறாங்க.இது beer ஐ போல் இருந்தாலும் 1-3% alcohol தான் உள்ளது.

Maotai
 
இது சீனாவிலே மிகவும் பிரபல்யமானது. மற்ற நாடுகளிலேஅவ்வளவாக பிரபல்யமடையவில்லை.இது 53% alcohol ஐ கொண்டுள்ளது. maotai ,fermented sorghum இல் இருந்து தோண்டபடுகிறது. இதனுடைய விற்பனை vodka இ விட அதிகமாக உள்ளது.


Hejie Jiu
 
Hejie Jiu மிகவும் நச்சு தன்மையானது. இது wine, whiskey க்கு  ஒப்பானது.இதுவும் சீனாவின் மிக முக்கிய பானங்களில் ஒன்றாகும்.பாம்பு,முதலை வால் கொண்டு தயாரித்தாலும் இது பல உயிர் கொல்லி நோய்களை தடுக்கிறது.
 
                 இதெல்லாம் நமக்கு ஆகாதப்பா.
Related Posts with Thumbnails