குடித்து விட்டு சும்மா இருந்தால் அது சிங்கங்களிற்கு அவமானம். நாங்க என்ன கசிப்பா குடிக்கிறம்.

Share
"அழவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்", கருத்து சொல்ல வந்திட்டான் கட்டையில போறவன் என திட்டுறது கேட்குது. நம்மளில பல பேர் தண்ணி அடிக்கிறது[Beer] உண்மைதான்.சிலர் தண்ணியடித்தால் அது சரித்திரத்தில இடம் பிடித்து விடும்.அதிகமா குடித்து விட்டு பண்ணிற அட்டகாசம் இருக்கே யப்பா, அடுத்த முறை Party க்கு போகும் போது தனியாகவே போயிடலாம்.நான் ஒன்றும் உத்தம ராசா கிடையாது, அதுவும் Party யில Free யா கிடைச்சா அதிகமா குடித்து விட்டு குப்பற படுத்தால் அடுத்த நாள் விடியலில் தான்.

குடித்து விட்டு சும்மா இருந்தால் அது சிங்கங்களிற்கு அவமானம். நாங்க என்ன கசிப்பா குடிக்கிறம். அதிக காசு குடுத்து நல்ல சரக்கு வாங்கி குடித்து விட்டு சேட்டை பண்ணாமல் இருந்தால் அது சரக்கிற்கு நாம பண்ணும் மிகப் பெரிய துரோகமாகிவிடும்.

குடித்து விட்டு ஏதாவது பண்ணணும், என்னத்த பெருசா பண்ணலாம், யப்பா Room போட்டு யோசித்து எழுதியது.

குடித்த உடனேயே Car ஐ எடுத்து கொண்டு வீட்ட போயிடாதிங்க. Club ஐ விட்டு போயிடாமல் ஆட்கள் அதிகமாக இருக்கிற இடத்திற்கு சென்று கத்தி கூச்சல் இடுங்க. இயலுமான அளவிற்கு கூடாத வார்த்தை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. நண்பர்களிற்கு பக்கத்தில் சென்று கத்தி பிரயோசனம் இல்லை. தெரியாதவர்களிற்கு பக்கமாக சென்று உரக்க கத்தி விட்டு ஓடி விடுங்கள். பாடுகிறோம் என்ற பெயரில் ஆங்கில பாடல்கள பிழையாக பாடிக் கொண்டு இருந்தால் அவர்களை தள்ளி விட்டு நீங்களாகவே ஒரு மெட்டு போட்டு பாடுங்க.

முதன் முறையாக இரவு களியாட்ட விடுதிகளிற்கு வரும் பெண்கள் பண்ணிற கூத்து இருக்கே?, ஒரு துளி Beer ஐ வாயில வைத்து விட்டு 10 பேத்தல் குடிச்ச மாதிரி dance ஆடுவாங்க. அவர்களிற்கு பக்கமா சென்று கதைத்து விட்டு சிறிய நேரத்தின் பின்னர், காலையும்,கையையும் நண்பர்களுடன் சேர்ந்து அமுக்கி பிடித்து விட்டு இயலுமான அளவு வாயில Beer ஐ பருக்கி விடுங்கள், அப்புறம் என்ன நீங்கள் அப்படியே இருந்து இளைப்பாறுவதுமாயிற்று, Club ஐ யும் அமர்க்களமாக்கி விடலாம்.

இருக்கவே இருக்கு திரை அரங்குகள். காதல் படங்களிற்கு போயிடாமல் நல்ல Action படங்களிற்கு போய் விடுங்கள்.அப்பறமென்ன நீங்கள் தான் படத்தின் கதா நாயகன், உங்கள் அருகில் தனியாக பெண் இருந்தால் அவளை கதா நாயகி ஆக்கி விடுங்கள். பொதுவாக Action படம் என்றாலே நல்ல Back round இசை நல்ல சத்தமாக இருக்கும். இதற்கு மேலாக நீங்கள் உரக்க கத்துங்கள், மோதல் காட்சிகள் வரும் போது உங்களின் முன் இருப்பவர்களை தூக்கி அடியுங்கள். ஏதாவது வெடிக்கும் காட்சிகள் வரும் போது பக்கத்தில் இருப்பவருக்கு மலே வாந்தியும் எடுத்து விடுங்கள்.

மது அருந்திய பின்னர் உங்களால் Car ஓட முடியாது இருந்தால்,நண்பர்களுடன் சேர்ந்து பக்கத்தில் உள்ள park ற்கு சென்று சிறுவர்கள் விளையாடும்  Bumper Car இலே ஏறி உல்லாசமாக வலம் வாருங்கள். நியமான காருடன் மோதினால் சங்கு ஊதி விடும். Bumper Car கள் ஒன்றுடன் ஒன்று மோத கூடியதாக இருப்பதால் நணபர்களுடன் போட்டி கூட வைத்துக் கொள்ளலாம்.

உடனேயே வீட்டுக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சென்ற உடனேயே படுத்து உறங்கினால், இரவோடு இரவாக மனைவியினுடைய அல்லது காதலியின் அடி உதைகளிற்கு உள்ளாக நேரிடும். சென்ற உடனேயே எதையாவது அடித்து நொருக்கி விடுங்கள், மனைவியை அடித்தால் மண்டையை பிழந்து விடுவாள். அதனால வீட்டில உள்ள பழைய tv,  Radio தொலைபேசி ,Car ஐ அடித்து நொருக்குங்க. ஆனா ஒன்றுங்க அடுத்த நாள் காலயில மனைவியிடம் மாட்டுப் படமால் வேலைக்கு ஒடி தப்பி விடுங்க.

இவற்றை எல்லாம் செய்ய ஆசையா இருந்தால், உங்கட Area  POLICE அதிகாரியை உங்கட கையில வைத்து கொள்ளுங்க. இல்லா விட்டால் யட்டியோட  police station இல இருக்க வேண்டியதுதான்.

2 comments:

அன்பரசன் said...

//இவற்றை எல்லாம் செய்ய ஆசையா இருந்தால், உங்கட Area POLICE அதிகாரியை உங்கட கையில வைத்து கொள்ளுங்க.//

ரொம்ப சரிங்க..

அஹமது இர்ஷாத் said...

righttuuu

Post a Comment

Related Posts with Thumbnails