முன்னாள் போராளிகளின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான கடன் திட்டம்

Share
புனர்வாழ்வுக்கு பொறுப்பான இலங்கை அதிகாரிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான இலகு கடன் திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தி  உள்ளனர்.
 
இதற்காக புனர்வாழ்வு அமைச்சு வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான அதிகாரி Brig. Sudantha Ranasinghe தெரிவித்தார் . பயனாளிகள் வழங்கும் அவர்களின் projects பொறுத்து 2 50 000 ரூபா வரையான கடன் வழங்கப்படுமென தெரிவித்தார். இந்த திட்டத்துக்கு புனர்வாள்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மட்டுமல்ல அண்மையில் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் கூட விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையான முன்னாள் போராளிகள் சிறுவர் போராளிகள் உள்ளடங்கலாக புனர்வாழ்வளிக்கப்பட்டு  அரச அதிகாரிகளால் பெற்றோர் களிடம்  ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தொழில் ரீதியான பயிற்சிகள்  வழங்கப்பட்டு உள்ளதுடன் சிறுவர்களுக்கு அவர்களின் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது . 500 முன்னாள் சிறுவர் போராளிகள் இந்த வருடம்  நடந்த கல்வி பொது தராதர பத்திர பரீட்சைக்கு தோற்றினர் . இதன் மூலம் மீளவும் சமூகத்துடன் இனத்து சாதாரண  வாழ்க்கையை முன்னெடுக்க வழி பிறந்த்துள்ளது.

இந்த கடன் 4 சதவீதம் என்ற வட்டி வீதத்தில் பயனாளிகளுக்கு அரசாங்க வங்கிகளூடாக வழங்கப்படும். இந்த நடவடிக்கைகளை வவுனியா அலுவலகம் ஒருங்கிணைக்கும் .

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு  சொந்தமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கபட்டுள்ளதால அவர்கள் தமது எதிர்கால வியாபார  திட்டங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் அத்திட்டங்களுக்கு அமைவாக கடன் திட்டம் அமயும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

3 comments:

எஸ்.கே said...

நல்ல தகவல்! பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

பொய் வேலை

Anonymous said...

நல்ல தகவல் தெரிவித்த தங்களுக்கு நன்றி. வாழ்க்கையை முன்னெடுக்க வழி பிறந்துள்ள சிறுவர், இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails