சொந்தமாக வாகனம் வைத்திருப்போரை தவிர்ந்த மற்றயோரின் பிரதான போக்குவரத்து முறையாக பேருந்து ,புகையிரதம் அமைகிறது. உண்மையில் பெட்ரோல் செலவு,போக்குவரத்து போலிஸ் வில்லன்கள், விபத்து போன்ற வற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
ஆனாலும் பயணிக்கும் தருணங்களில் நாம் பல்வேறுபட்ட மனிதர்களால் பல அனுபவங்களை பெற்று இருப்போம். அப்படி பொதுவாக நாம் எதிர்கொள்ளும் சங்கடமான அனுபவங்களை தரவல்ல மனிதர்களின் வகைகள் குறித்த ஒரு பார்வை.
இது குறிப்பிட்ட நபர்ககளை புண்படுத்தவல்ல ஏனெனில் நிச்சயம் நாம் இதில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ரகங்களுக்கு உரித்துடையவர்கள் என்பது தான் உண்மை. ஹா ஹா ஹா.
1 .குழந்தைகள்
அனேகமாக நாம் ஏதாவது பிரச்சனையுடனோ அல்லது களைப்புடன் வீடு திரும்பும் போது பேருந்தில் தொந்தரவு செய்யக்கூடியவர்கள் பெற்றோருடன் வரும் இவர்கள்.சாதாரண நேரத்தில் நாம் ரசிக்கும் இவர்கள் அழுதல், அடம் பிடித்தல், குழப்படி என்பவற்றால் சிலவேளைகளில் பயணிக்கும் போது தலையிடியை ஏற்படுத்த வல்லவர்கள். என்ன பாப்பா என கேட்டு மரியாதை கேட்டு போனவர்களும் உண்டு.
2 .புது நண்பர்கள்
தூர இடங்களுக்கு தனியாக பயணிக்கும் போது பக்கத்து சீட்டில் உள்ள நபரை பார்த்து ஒரு வணக்கம் போட்டால் போதும் சிலர் நமது மூன்று தலை முறை க்கு முதலிலிருந்து இக்கணம் பற்றி நோண்ட ஆரம்பித்து விடுவர்.சிலர் எதிர்மாறாக அவர்களை பற்றி இடைவெளி இல்லாமல் கதை அளப்பார். இது பெரிய தலையிடியாக மாறிவிடும்.நமது பாதுக்கப்பு தொடர்பில் இப்படியான வர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
3 .ஓட்டுனர் / நடத்துனர்
இவங்க தான் அநேகமானோருக்கு வில்லன்.இவர்களின் தொல்லைகள் பற்றி கூற தேவையில்லை.அனுபவம் எல்லோருக்கும் உண்டு.தகாத வார்த்தை பிரயோகம்,மிகுதி தராமை,நிறுத்தங்களில் நிறுத்தாமை,இறங்க முதலே வண்டியை எடுத்தல்,ஆடு மாடு போல நடத்தல்,சிலவேளைகளில் அவங்களே அடிபடுவாங்க என அடுக்கி கொண்டே போகலாம். பயணிகளுக்கு பொறுப்பான இவர்களின் அஜாக்கிரதையால் எத்தனை உயிர்கள் பறி போயுள்ளன.
4 .பெரிய மனிதர்கள்
சிலவேளைகளில் காரில் செல்வோரோ,அல்லது கார் ஒன்றுக்கு உரிமை யாளார்களாக ஆக முடியாத கனவான்களோ அல்லது டிப் டாப் ஆக உடை அணிந்தது வரும் சில நபர்கள் பண்ணுற அளப்பறை இருக்கே அப்பப்பா எதோ அவங்க பாட்டன் வாங்கி விட்ட பஸ் மாதிரி. பக்கத்தில யாரவது பாவம் சாதாரணமான உடையுடன் வந்து நின்றால் பார்க்கும் பார்வை இருக்கே எதோ புழுவை பாக்குற மாதிரி.தற்செயலா அவர்களில் பட்டால் போதும் திட்டு பவர்கள் கூட உண்டு.
5 .அவர்கள்
இவர்களை பற்றி சொல்லியே ஆகனும்.எதோ அனைவரும் சுத்தமானவர்கள் என முடியாது.எதோ ஒரு வேளைகளில் நாமும் ஈடு பட்டிருக்கலாம்.ஆனால் சில பேர் இதே தொழிலாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் பற்றிய பயமும் இல்லாமல் அயன் பண்ண வருபவர்கள்.அது தாங்க உரசுவோர் கூட்டம்.இது நம்மை முகம் சுளிக்க வைக்கும் ஒன்று.கேள்விப்பட்ட தொன்று இளை யோர்களை விட கொஞ்சம் வதானவ்ர்களே இதில் மோசம் என்று. உண்மையா?
6 .உரிமையாளர்
சிலர் பஸ் இல் செயற்படும் விதத்தை பார்க்கும் போது பஸ் இக்கு சொந்தக் காரனா இருப்பானோ என்று எண்ண தோணும் சீட் பிடிக்கும் விதம்.தனது குடுமபத்துடன் வரும் சிலர் பண்ணும் காமடி இருக்கே.எதோ மற்றவர்கள் எல்லாம் திருடர்கள்,கடத்தல் காரர்கள் மாதிரி தான் இவர்கள் எண்ணம். ஜாக்கிரதை முக்கியம் தான்.ஆனால் ஒரு எல்லை உண்டு தானே. குடும்பத் தினருக்கு எழுந்து சீட் கொடுக்குமாறு ஆணை/மிரட்டல் இடுவோரும் உண்டு.
7 .உரத்த குரலினர்
சிலவேளைகளில் நாம் பயணிக்கும் போது எரிச்சலடைய செய்வோர் உரத்த தொனியில் தொலைபேசியிலோ அல்லது பக்கத்தில் உள்ளவரிடனோ கதைப் பவர்கள். சட்டத்தில் இப்படி செய்ய கூடாது என இல்லை.பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அடுத்தவரை டிஸ்டர்ப் பண்ணாமல் இருப் பது தானே நாகரிகம். இப்படி மற்றையோர்களை பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் உரையாடி செல்வோர் வம்பில் மாட்டிய சம்பவங்களும் உண்டு.
8 .நோயாளர்கள்
மூப்பு,பிணி,சாக்காடு அனைவருக்கும் பொது.அதற்கு நான் மட்டும் விதி விலக் கல்ல மற்றயோரை பழிக்க. ஆனால் சில உண்மைகள் தவிர்க்கப்பட முடியா தவை.பேருந்தில் பணிக்கும் போது சில நோயாளர்களுடன் சேர்ந்து பயணிக்கு போது ஒருவித சங்கடத்துக்குள்ளாவது தான் உண்மை. பலவித புது புது நோய்கள் பரவுவதால் குறிப்பாக பக்கத்து பயணி இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வயிற்றில் புளியை கரைக்கும் .
9 .மிதிப்போர்
நாம் சப்பாத்து அணிந்தது சென்றால் பிரச்சனை இல்லை.சாதாரண செருப்புடன் சென்றால் அதுவும் அலுவலக நேரம் என்றால் கால் புண்ணாகி விடும். சில வேளைகளில் குறம் சொல்ல முடியாது.ஆனால் செருக்கடிய்ற்ற நேரத்தில் கூட பாய்ந்த்தடித்து கொண்டு காலை பூட்ஸ் களால் நசித்து கொண்டு ஏறுவர் அல்லது இறங்குவர். கால் மட்டுமல்ல முழங்கை போன்றவற்றால் எமது ஏனைய பகுதிகளும் தான் தாக்கப்படுகின்றன.மனதுக்குள் திட்டி கொள்வதோடு சரி.
10 comments:
4 .பெரிய மனிதர்கள்//
இவனுகள பாத்தாலே கடுப்பா இருக்கும் பாஸ்..
குடுமபத்துடன் வரும் சிலர் பண்ணும் காமடி இருக்கே.எதோ மற்றவர்கள் எல்லாம் திருடர்கள்,கடத்தல் காரர்கள் மாதிரி தான் இவர்கள் எண்ணம்.//
உண்மை தான் பாஸ்..
டெய்லி நல்ல நல்ல மேட்டர் எழுதுற நண்பா..
நம் சமூகம் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது, இது மெல்லத்தான் மாறும்..
video vila irukkirathu niengkalaa?
//padaipali said...
டெய்லி நல்ல நல்ல மேட்டர் எழுதுற நண்பா..//
Repeat.
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி நண்பர்கள்
ஹரிஸ்
padaipali
கே.ஆர்.பி.செந்தில்
அன்பரசன்
நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் நான் அனுபவித்திருக்கிறேன்...
நீங்க சொன்ன நிறைய விஷயங்கள் எனக்கும் நடந்திருக்கு பாஸ், நல்லா எழுதி இருக்கீங்க
Good post. Thanks.
Post a Comment